Share this book with your friends

Miruga Osaii / மிருக ஓசை

Author Name: Vijayakumar Tamilanban | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

சென்னையின் முக்கியப் பகுதியான குரோம்பேட்டை ரெயில்வே தண்டவாளத்தில் தலை தனியாக முண்டம் தனியாக ஒரு சடலம் கிடக்கிறது.சடலம் கிடந்த ரெயில்வே தண்டவாளத்தை ஒட்டிய காம்பவுண்ட் சுவற்றில் சிவப்பு மையினால் புதிதாக எழுதப்பட்டிருந்த குறீயீட்டையும் சப்-இன்ஸ்பெக்டர் அகிலன் கவனிக்கிறார். இந்த சம்பவம் தற்கொலை அல்ல, கொலை எனவும் இதுபோன்ற கொலைகள் தொடரும் எனவும் கூறுகிறார். ஆனால் இன்ஸ்பெக்டர் ராகவேந்தர் அகிலன் கூறியவற்றை மறுத்து தற்கொலை என கேஸை முடிக்கச் சொல்கிறார். அகிலன் கூறியது போலவே அடுத்தடுத்து அந்த பகுதிகளில் உடல் பாகங்கள் சிதைக்கப்பட்ட சடலங்கள் கிடைக்கின்றன.சடலங்கள் கிடைத்த இடங்களில் காம்பவுண்ட் சுவற்றில் இருந்த சிவப்பு மையினால் எழுதப்பட்ட குறியீடும் இருக்கிறது. இந்த கொலைகளை செய்தது யார், அந்த குறியீட்டின் பின்னணி என்ன என அகிலன் தன் கல்லூரித் தோழி 'டிடெக்டிவ் நவீனா'வுடன் சேர்ந்து கண்டறிந்து அடுத்தடுத்த கொலைகளைத் தடுக்க முயற்சிக்கிறார்.  அடுத்தடுத்து என்ன நடக்கும் என விறுவிறுப்பாக நகரும் 'சஸ்பென்ஸ் த்ரில்லர் நாவல்'.

Read More...
Sorry we are currently not available in your region.

Also Available On

விஜயகுமார் தமிழன்பன்

எழுத்தாளர் விஜயகுமார் தமிழன்பன் சென்னை அண்ணாப்பல்கலைக் கழகத்தில் பொறியியலில் முதுநிலைப் படிப்பு பயின்றவர். பிறகு கலையின் மீதும் எழுத்தின் மீதும் ஏற்பட்ட ஆர்வத்தால் முழுவதுமாக கலைத்துறையில் பணிப்புரிந்து வருகிறார். இணைய வானொலி ஒன்றில் ரேடியோ ஜாக்கியாக தனது கலைக்காதலை துவக்கிய இவர் தற்போது சமூகவலைத்தளங்கில் பேச்சாளராகவும் எழுத்தாளராகவும் மற்றும் குறும்படங்களையும் இயக்கி வருகிறார்.

Read More...

Achievements

+1 more
View All