வாழ்க்கையில் நாம் நிறைய மனிதர்களை சந்தித்திருப்போம், ஒவ்வொருவரின் வாழ்க்கையைப் பற்றி நாம் அறிந்து கொள்ளும் போதும் நமக்கு அது ஒரு அனுபத்தை கொடுக்கும். அதுபோல இந்த கதையின் மூலம் சில மனிதர்களையும் அவர்கள் மூலம் சில அனுபவங்களையும் பகிர நினைக்கிறேன்.
லோகேஷ், சென்னையில் வசிக்கும் இளம் எழுத்தாளர். லயோலா கல்லூரியில் கணிப்பொறியில் இளங்கலை பெற்ற இவர் தற்போது 3 குறு நாவல்கள் எழுதி சுய வெளியீடு செய்திருக்கிறார். புத்தகங்கள் வாசித்து அவற்றை விமர்சனம் மற்றும் பரிந்துரை செய்வார். சிறு வயது முதலே எழுதுவதில் ஆர்வம் கொண்ட இவர் எழுதும் திறனை மேம்படுத்த தனது 15 ஆவது வயதிலிருந்தே சிறு கதைகள் எழுதியுள்ளார். காதல், சமூகம், திகைக்க வைக்கும் கதைகள் எழுவதில் ஆர்வம் கொண்டவர். தீரா கனவு, கதை சொல்லட்டுமா, மர்மவலை என்று மூன்று தமிழ் புத்தகங்களும் Thoughts that conquer your mind என்ற ஆங்கில புத்தகத்தையும் எழுதியுள்ளார்.