எனக்கு அருமையானவர்களே! சொல்வதென்று நினைத்தாலும் மாத்திரம் சில சொன்னேன். மற்றவைகளைச் சொல்லாதிருக்க வேண்டியதாயிருக்கிறதென்று வருத்தமடைகிறேன். நீங்கள் தேவ புத்திரர்களாயிருக்கிறீர்கள் என்றும் அந்நிலையைக் கீழ்ப்படியாமையினால் எப்படி இழந்தீர்களென்றும் சீவகாருண்யத்தினால் அவ்வுன்னத நிலையைத் திரும்ப அடையலாம் என்றும் உலகத்திற்குச் சொல்ல வந்த உத்தமனை உலகத்தவர் என்ன செய்தார்கள் என்பதை நாம் அறிவோம். ஆயினும் உண்மையில் சிலவற்றையாவது சொல்லுவது என் கடமையாகும். என் கடமைகளை நான் செய்கையில் பரமான்மாவும் அவரைப் பின்பற்றி நடக்கும் தாசர்களும் எனக்கு ஆதரவாயிருப்பார்களென்று நம்பியே இதை எழுதினேன்.
வேதத்தின் மறைபொருளை நான் இப்போது சொல்லக் கூடியவைகளை
மு. ஆபிரகாம் பண்டிதர், 1918