கிறிஸ்தவத்தில் பல சிறப்பு அம்சங்கள் உள்ளது. அதில் மிகமுக்கியமான ஒன்று கிறிஸ்து இயேசுவின் நற்கருணை பந்தி. அதனை நாம் எவ்வாறு ஆசரிக்கவேண்டும் என்று பலர் பல விதமாக கூறியிருந்தாலும், நம் இடத்தில் கிறிஸ்துவின் பணியை சிறப்பாக செய்த பேராயர். இராபர்ட் கால்டுவெல் ஐயர் கூறியுள்ள விதம் சிறிது வித்தியாசமானது. எப்படி என்றால், நாம் இக்காலத்திலும் நம் சபையில் ஆசரித்து வருகிற திருவிருந்து ஆராதனை முறைமையின் அர்த்தங்களை தழுவி கர்த்தருடைய பந்தியாம் நற்கருணையின் சிறப்புகளை ஓங்க கூறி, நம்மை எப்படி அந்த பந்திக்கு தயார் படுத்தவேண்டும் என்று ஆரம்பம் முதல் முடிவு வரை கூறியுள்ளதாகும். இந்த புத்தகம் வெளிட்டு சுமார் நூற்றைம்பது ஆண்டுகள் ஆனாலும் நாம்மால் இந்த புத்தகத்தின் தமிழ் அமுதினை கொண்டு இன்றும் தேவனாகிய பிதாவின் அன்பினை உணர முடியும் என்பதில் ஐயமில்லை . இந்த புத்தகத்தினை இக்காலத்தில் வாசிக்கும்படியாக தமிழ் எண்களை, கணித எண்களாகவும் பழைய வடமொழி தமிழ் எழுத்துக்களை நம் இக்கால தமிழ் எழுத்துக்களாவும் மாற்றியுள்ளோம். மட்டுமல்லாது பேராயர் இராபர்ட் கால்டுவெலின் பிரசங்க வடிவிலான நற்கருணை ஆராதனை முறைமையின் விளக்கத்தை, தலைப்புகளோடு பல பகுதிகளாக வகுத்துளோம். எனவே படிப்போர் தங்களின் பாடல் புத்தகத்தோடு படித்தால் ஏன் ஆராதனை முறைமை இவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை உணரலாம். இப்புத்தகத்தில் காணப்படும் தியானங்கள் வேத அடிப்படையிலானது எனபதை சுட்டும் வகையில் ஒவ்வொரு தியானத்த்திற்கும் மேலே அதன் ஆதார வசனம் கொடுக்கப்பட்டுள்ளது . இந்த புத்தகம் உங்கள் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு பயனுள்ளதாக அமையும் என்று விசுவாசிக்கிறோம். தேவ சமாதானம் பெருகட்டும்!