"நட்சத்திரத் தூறல்" எனும் இக்கவிதைப் புத்தகத்தில் உள்ள பல்வேறு கவிதைகள் ஒரு அறிவுத் துணையாக அமைகின்றது. குமாரி. D. ராஜஶ்ரீ, அவருடைய கவிதைகள் மூலம் தனது இறைப்பற்று, இன்றைய உலகச் சூழ்நிலை மற்றும் புத்தகத்தின் அவசியம் ஆகியவற்றைத் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார். கவிதைகள் அனைத்தும் தெளிவாகவும் எளிதில் புரிந்துக் கொள்ளும் வகையிலும் உள்ளது மிகச் சிறப்பு.