சேலம் மாவட்டத்தில் மிகுந்த முக்கியத்துவம் பெற்ற வாழப்பாடி பகுதியின் வரலாறு, வளர்ச்சி மற்றும் இப்பகுதியில் காணப்படும் வரலாற்று சிறப்பு மிக்க அரசு அலுவலகங்கள், ஆராயச்சி மையங்கள், வரலாற்றுச் சின்னங்கள், கல்வெட்டுகள், கோயில்கள் குறித்த வரலாற்று தொகுப்பாக இந்நுால் வடிவமைக்கப் பட்டுள்ளது. இதனாலேயே, இந்நுாலுக்கு ‘ஊர் வளம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்நுால், மற்ற ஊர்களைப் பற்றியும், மண்ணின் பெருமை குறித்தும் அந்தந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவணப்படுத்திடவும், ஊரின் சிறப்புகளை விளக்கும் நுால்களை வெளிடுவதற்கும் ஒரு உந்துதலாக, ஊக்கச் சக்தியாக அமையுமென்றால் இதுமிகையன்று.