திறந்த புத்தகமாக.சிலருடைய வாழ்க்கை... இருந்தாலும், அதிலும் மௌனமாக வாசிக்க வேண்டிய பக்கங்கள் நிறைய உண்டு. தன் வாழ்வில் மௌனமாகப் படிக்க வேண்டிய பக்கங்களைப் படித்து, அவற்றைச் சிறுகதையாகத் தந்துள்ளார் பூஜாஶ்ரீ. நல்ல புத்தகங்கள் என்பது சாதாரணமாகச் செல்லும் பொழுதுகளைக் கூடப் பயனுறச் செய்து விடும் எனலாம்.
“ஒரு பக்கக் கதைகள்” என்னும் இப்புத்தகம் படிப்போரின் பொழுதுகளைப் பயனுறச் செய்வதுடன், நிறைய அனுபவங்களையும் கற்றுத் தருகிறது என்பதில் ஐயமில்லை.