தற்கால அறிவியலில், பொதுச் சார்பியல் கோட்பாடு மற்றும் குவாண்டம் இயக்கவியல் ஆகியன, இரண்டு பெரும் இயற்பியல் பாடப் பிரிவுகளாக உள்ளன. அவை இரண்டிற்கும் இடையேயான முரண்பாடு என்பது விஞ்ஞான உலகில், கடந்த நூறு ஆண்டுகளாகத் தீர்க்கப்படாத ஒரு சவாலாகும். ஒருமையியல் கோட்பாடு, அவை இரண்டும் எவ்வாறு இணைகிறது என்ற நுணுக்கத்தை கண்டறிந்து இயற்கையில் இயற்பியலுக்கான ஒரு அடிப்படைக் கல்வியாக அமைகிறது. இந்தப் புதிய பாடத் தொகுப்பு, வான்வெளி அறிவியலுக்கான முக்கிய விடயங்களாக இருக்கும், இட-கால ஊடகம், ஈர்ப்பியல், கருந்துளை மற்றும் அணுவியல் ஆகிய நான்கையும் இணைத்து புள்ளியளவில் விளக்குகிறது. உண்மையில் சார்பியலுக்கும் அணுவியலுக்கும் இடையே எந்த முரண்பாடு இல்லை என்பதை ஒருமை கண்ணோட்டத்தில், வரைபட விளக்கங்களோடு காட்சிப்படுத்துகிறது. அதனோடு, இட-கால பரிமாணங்கள் மொத்தம் எத்தனை, ஊடகம் என்பதே எங்கு தொடங்கி எங்கு முடிகிறது என்பதாக வரையறுத்தும் கூறுகிறது. விஞ்ஞானத்தில் அறியப்படாத மர்மமாக இருக்கும் கருந்துளை பற்றிய முழுமையான விடயங்களையும், ஈர்ப்பியலுக்கான அனைத்து நுணுக்கங்களையும் தெளிவாக விளக்குகிறது. ஒருமையியல் கோட்பாடு ஒரு வழக்கமானஆராய்ச்சியாக இல்லாமல் முற்றிலும் புதிய கண்ணோட்டத்தில் தொகுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கத்து. அது ஐன்ஸ்டீன் அவர்களின் நீளம் சுருங்குதல் மற்றும் நேரம் விரிவடைதல் ஆகிய கவனிப்புகளின், அவரே ஆராயத் தவறிய உண்மை தன்மையை வெளிக் கொணர்த்து அதன் தொடர்ச்சியாக ஒருமைப் புள்ளி வரையிலான ஆழமானப் பாடத்தை வகுத்துள்ளது.
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners