பெருங்களத்தூர் வனப்பகுதியை ஒட்டிய அபார்ட்மெண்டிற்குள் ரகுவரன் என்ற பேராசிரியர் மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார். அவர் இறப்பதற்கு ஒரு வாரம் முன்பு அந்த அபார்ட்மென்ட்டை காவல் காத்துக்கொண்டிருந்த நாயும் பெருங்களத்தூர் வனப்பகுதிக்குள் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடக்கிறது. அவருடைய மரணத்திற்கு காரணமானவர்களை கண்டறிய இன்ஸ்பெக்டர் அகிலனும் சப் இன்ஸ்பெக்டர் இப்ராஹிமும் துப்பு துலக்குகின்றனர். அதே சமயத்தில் திரைப்படத்திற்கு திரைக்கதை அமைத்துக் கொண்டிருக்கும் விஜய் என்ற இளைஞனுக்கு ஏற்படும் சில விசித்திரமான நிகழ்வுகள் அவனை திகைப்பூட்டுகின்றன. இன்ஸ்பெக்டர் அகிலனும் சப் இன்ஸ்பெக்டர் இப்ராஹிமும் துப்பு துலக்க துலக்க பெருங்களத்தூரைச் சுற்றி அவர்களால் புரிந்து கொள்ள முடியாத மர்மமான சம்பவங்களும் தொடர் மரணங்களும் நடைபெறுகின்றன. விஜய்க்கு ஏற்பட்ட திகைப்பூட்டும் சம்பவங்கள் என்ன?, பெருங்களத்தூரைச் சுற்றி நடக்கும் மர்மமான சம்பவங்களுக்கும் மரணங்களுக்கும் காரணம் என்ன??????
- பிழையின் வேட்கைக்குள் விடைகள்.......