காதல் என்னும் காகிதத்தில் வெற்று பக்கங்களாக நிறைந்த நினைவுகளை..... வண்ணச் சித்திரங்களாக மாற்றிய தலைவனின் காதல் பின்பு.... வலி என்னும் சுகத்தை அள்ளிக் கொடுக்க ஆனந்தமாய் ஏற்று அனுபவிக்க துவங்கிய தலைவியின் காதல் பிரிவில்.....
கல்லூரியில் படித்து முடித்து விட்டு வேலைக்கு செல்லும் சாதாரண குடும்பத்தை சேர்ந்த சாதாரண பெண்.... பள்ளிப் பருவத்தில் இப்படி பட்ட எந்த ஒரு ஆர்வமும் தமிழின் மீது இல்லாதவள்.... ஆனால், அதுவே காலப்போக்கில் புத்தகங்களை படிக்க படிக்க தமிழின் மீதும் எழுத்துக்களின் மீதும் ஆர்வம் தோன்றியது அதன் பின் எழுத துவங்கியதுதான் இப்போது படவரி பக்கம் முதல் புத்தகம் வரை முன்னேறி இருக்கிறது.... இந்த காலகட்டத்தில் எனக்கு உதவி செய்த செய்துகொண்டு இருக்கும் அத்துணை பேருக்கும் சிரம் தாழ்த்தி எனது நன்றிகளையும், வணக்கங்களையும் கூறிக்கொள்கிறேன் .....