நூலாசிரியர் குறிப்பு:
தமிழ் சித்தர் பெருமக்கள் அருளிய, இறைதத்துவம், இறைஞானம், வைத்தியக்கலை, ரசவாதக்கலை, மெய்ப்பொருள், மறைபொருள், யோகம், ஞானம், அறிவடைதல் தத்துவம், மரணமில்லா பெருவாழ்வு, போன்ற தமிழனின் அறிவியலும் விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும் கொண்ட தத்துவ நூல்கள் இப்பூவுலகின் அறிய படைப்புகளாக இருந்தும், அவைகள் பல இல்லங்களிலும், பல நூலகங்களிலும் உறங்கிக் கிடக்கின்றன. இந்த அறிய படைப்புக்களை பறைசாற்றும் வகையில் நூலாசிரியர் எளிய தமிழ் பாடல்களாக நூற்றியொரு தத்துவ பாடல்களை இயற்றி அதனை "சிவதத்துவம்-௱௧" என்ற இந்நூல் மக்களுக்கு ஓர் அரிய படைப்பாகும்.
இந்த அறிய படைப்பை நமக்கு அளித்த சிவதத்துவ நூலாசிரியர் முனைவர்.வி.நித்தியாநந்தன் அவர்கள் செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோயில், தென்மேல்பாக்கம் கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர். இவர் அடிப்படை கல்வியை அரசு கல்விக்கூடங்களிலும், இளங்கலை படிப்பை B.A. பெருநிறுவன பிரிவு சென்னை கௌரிவாக்கம் S.I.V.E.T. கல்லூரியிலும், முதுகலை M.Com சென்னை பல்கலைக் கழகத்திலும், MBA அண்ணாமலை பல்கலைக் கழகத்திலும், M.Sc. யோகமும் மனித மாண்பும், பாரதியார் பல்கலைக் கழகத்திலும் மற்றும் ஆராய்ச்சி படிப்பை Ph.D. மேலாண்மை ஆய்வு, SRM பல்கலைக் கழகத்திலும் பயின்றவர். இவர் தனது இறைஞானத்தின் மூலம் தமிழ் சித்தர்களின் தத்துவங்களையும் அவர்களின் அறிவியல், விஞ்ஞானம், இறைஞானம், மெய்ப்பொருள், ரசவாதக்கலை, மற்றும் மரணமில்லா பெருவாழ்வு போன்றவைகளை ஆராய்ந்து வருகின்றார். இவர் தற்பொழுது சென்னை, காட்டாங்குளத்தூர், SRM பல்கலைக்கழகத்தில் துணை பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.