Share this book with your friends

"Soththu...!" / “சொத்து…!”

Author Name: Srividhya Desikan | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

அன்பான வாசக நெஞ்சங்களே,

 சுரேஷ்  -சரஸ்வதி  , என்னும் தம்பதியினரின்  வாழ்க்கையில் வரும் சுவாரசியமான சம்பவங்களின் தொகுப்பே இந் நாவல்  சுரேஷ் ஒரு ஜெயிலர் ,  சரஸ்வதி  ஒரு  உளவியலாளர்  ஜெயிலில் நடக்கும் அத்தனை சுவாரசியமான சம்பவங்கள்...  ஒரு தூக்கு தண்டனை கைதி  அவன் வாழ்க்கை  அந்த ஜெயிலரின் வாழ்க்கையுடன் பிணைக்கப்பட்டு இருக்கிறது -  ஒரு கைதிக்கும்  ஜெயிலருக்கும் அப்படி என்ன சம்பந்தம்  கிளைமாக்ஸ் வரையில் பொறுத்திருந்து சுவாரசியத்தை   படித்து , அனுபவித்து , ரசியுங்கள்!

Read More...

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Ratings & Reviews

0 out of 5 (0 ratings) | Write a review
Write your review for this book

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Also Available On

ஸ்ரீவித்யா தேசிகன்

 நாவலாசிரியர்  ஸ்ரீவித்யா தேசிகன்  ஒரு பத்திரிகையாளரும் எழுத்தாளரும் கூட  . அவர் பல  முன்னணி   தமிழ் பத்திரிகைகளில்  பல நூறு  கட்டுரைகள் , பேட்டிகள்  , சிறுகதைகள் எழுதியவர் -   எழுதிக் கொண்டிருப்பவர். அவருடைய முதல் புத்தகமான ‘நாதமெனும் கோவிலிலே ‘ , என்னும் புத்தகம்  பின்னணிப் பாடகி திருமதி வாணி ஜெயராமின்  இசை பயணத்தை பற்றியது  . ஒரு பின்னணிப் பாடகியின்  இசை பயணத்தை பற்றி  அவரே சொல்லி  எழுதப்பட்ட முதல் மற்றும் ஒரே புத்தகம் இதுவரையில் அதுதான் . இது தினமலர் வாரமலரில் தொடராக வெளிவந்த  இசைப் பயண பெட்டகம் .அதற்குப் பிறகு  அவர் எழுதிய  முதல் நாவல் தான் ‘வைதேகி காத்திருந்தாளோ ….!’ இந்த நாவலை  படித்த பலரும் குறிப்பாக  , பத்மபூஷன் டாக்டர் என் . ராஜம்  (வயலின் விதுஷி) , மெரி லாண்ட் பிக்சர்ஸ்  தயாரிப்பாளர் திரு எஸ் முருகன்  , நடிகைகள் கே ஆர் விஜயா , சச்சு லதா போன்ற பலரும்  பாராட்டியுள்ளனர்  . அதைத் தொடர்ந்து  அவருடைய இரண்டாவது நாவல் தான்  ‘சொத்து…!’ என்னும் இந்த நாவல்.   இந்நாவலின் சுவாரசியமே  இதில் இருக்கும்  புதுமையும்  அதை படித்து முடிக்கும் வரை   இந்த புத்தகத்தை கீழே வைக்க விடாமல் நம்மை ஆட்கொள்வதும் தான்  ! அடடா  ! படித்து முடித்த பிறகு கதையிலிருந்து நம்மால்  சிறிது நேரத்திற்கு  வெளியிலேயே வர முடியவில்லை ! அந்த வித்தியாசமான கிளைமாக்ஸை யாரும்   மிஸ் பண்ணாமல்  படித்து ரசியுங்கள்!

Read More...

Achievements

+2 more
View All