இத்தொகுப்பு அருட்சகோ. ஜெயராஜ் தி.இ.ச அவர்கள், பாளையங்கோட்டை இயேசுவின் திரு இருதய சபையில் தனது அர்ப்பணிப்பின் 50 பொன்னான வருடங்களை நிறைவு செய்வதை பாராட்டும் வாழ்த்து செய்திகள் கொண்டது.
அருட்சகோதரர் ப. ஜெயராஜ் தி.இ.ச அவர்கள் விருதுநகர் மாவட்டம் நத்தம்பட்டியில் 1954 ஆம் ஆண்டு பிறந்தார். பாளையங்கோட்டை திரு இருதய சகோதரர்கள் சபையில் தன்னை இணைத்துக்கொண்ட அவர் டிசம்பர் 22, 1972 அன்று தனது முதல் வார்த்தைப்பாட்டை நிறைவு செய்தார் பின் நவம்பர் 13, 1978 அன்று தனது இறுதி வார்த்தைப்பாட்டை அளித்தார். அவரின் இந்த அர்ப்பணம் மிக்க வாழ்வில் பல்வேறு இடங்களில் பலநூறு ஆக்கபூர்வமான பணிகளை இன்றளவும் இயேசுவின் திரு இருதயத்தின் துணை கொண்டு இன்றளவும் செய்து வருகின்றார்.