“பிதாவானவர் குமாரனை உலக ரட்சகராக அனுப்பினாரென்று நாங்கள் கண்டு சாட்சியிடுகிறோம்” ⅼ யோவான் 4:14 என்று அப்போஸ்தலனாகிய யோவான் சாட்சியிடுகிறார்.
தேவனுடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்து உலக ரட்சகர். அவருடைய ஊழியக்காரராயிருப்பது எவ்வளவு ஆசீர்வாதம். உலக ரட்சகர் தம்முடைய ஊழியக்காரர் மூலமாய் உலக மக்கள் அனைவரையும் இரட்சிக்க, ஆசீர்வதிக்கச் சித்தம் கொண்டார்.
இந்தியாவிலும், உலக அளவிலும் தேவனால் பயன்படுத்தப்பட்ட சில ஊழியக்காரரின் ஊழியத்தை இந்நூலில் சுருக்கமாகச் சிந்திக்க இருக்கின்றோம். இவைகள் நம்முடைய பூர்வ காலத்தை நினைக்க உதவி செய்யும்.
தேவனுடைய பிள்ளைகளாய் ஆசீர்வாதத்தை அனுபவிக்கும் நாம் நம்முடைய கடமையை உணர்ந்து செயல்படத் தேவன் நம்மை அழைக்கிறார். அழைக்கப்பட்ட நாம் அபாத்திரராய் போகாதபடி தேவன் நம்மேல் கிருபையாய் இருப்பாராக.
இன்றைக்கு ஆண்டவர் தேடுகின்ற ஊழியக்காரர் “ஆண்டவரே, நான் என்ன செய்ய நீர் சித்தமாயிருக்கிறீர்” என்று கேட்பவர்களைத் தான் தங்களுக்கென்று வாழாததேவனுக்கென்று வாழும் ஊழியரையே ஆண்டவர் பயன்படுத்த விரும்புகின்றார்.
சாதாரண மக்கள் தங்களை ஆண்டவருடைய கைகளில் அர்ப்பணித்த பொழுது தேவன் அவர்களை வல்லமையாய்ப் பயன்படுத்தினார். நாமும் அர்ப்பணிப்போம். உலக ரட்சகர் நம்மையும் பயன்படுத்துவார்.