தேவதை, அவள் தன் மனதில் கொண்ட ஆசையை சூழ்நிலையால் மறைத்துக் கொண்ட பின்னும், அன்பை மட்டும் நீங்காமல் அவள் நிற்க. அவள் கொண்ட வார்த்தைகள் மலராமல், மணம் கொள்ள வழியில்லை என்று தான் கொண்ட வேலிக்குள் அடைபட்டு அவன் நிற்க. அவள் நினைவை நீங்கிய வாழ்வு ஏதும் இல்லை என்றவன், பழி சொல்ல வழியில்லாமல், அவள் தந்த நினைவுகளால் கொண்ட வலியோடும் அவள் வருகைக்காக காத்திருக்கும் தருணங்களில் அவன் சுமக்கும் நினைவுகளையும், அவளிடம் நேரில் தான் சொல்லத் துடித்த நிஜங்களையும், காலம் விடியும் என்றோ, இன்றே கனவில் வந்த காதலியிடம் மட்டும் உண்மைகள் என்று அவன் சொல்லும் வார்த்தைகளாய் மனதினோடு பேசும் உணர்வுகளின் தொகுப்பு இது...