தேவனுடைய உன்னத நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள். இந்த புத்தகத்தை உங்களுக்கு கொடுப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். தேவனுடைய வார்த்தைகளாகிய வேத வசனங்களை உங்கள் பிள்ளைகள் மனப்பாடம் செய்ய நீங்கள் எடுத்திருக்கும் முயற்சியும், உங்களின் மேலான எண்ணமும் நிறைவேற தேவன் சகல வகையிலும் உதவி செய்வாராக.
தேவனுடைய வார்த்தைகளை நம்முடைய இருதயத்தில் பதிய வைக்கும் போது கிடைக்கும் ஆசீர்வாதங்கள் ஏராளம் ஏராளம். அந்த வார்த்தைகளை இரவும் பகலும் தியானித்துக்-கொண்டிருக்கும் போது இன்னும் அதிகமாய் ஆசீர்வதிக்கப்படுகிறோம். தேவனுடைய சித்தத்தை அறிந்துக்கொள்ள மிகவும் சிறந்த வழி இதுவே. இந்த ஜீவனுள்ள வார்த்தையானது சத்துருவின் நாச மோசங்களினின்றும், பிசாசின் வஞ்சகத்தினின்றும் நம்மை எச்சரித்து நடத்தவும் பாதுக்காக்கவும் செய்யும்.