Share this book with your friends

Vidiyalin Muzhumaiyai Nokkee / விடியலின் முழுமையை நோக்கி

Author Name: Prof. Dr A. P. J. Paul Raj, Ranjith John | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

ஒருங்கிணைந்த ஆராய்ச்சி மையம் (Integral Research Centre) IRC (2010) – என்னும் நிறுவனத்தின் இயக்குநர், தனது பொது-அறிவியல், சரித்திரம், பூகோளம், புவியியல், இயற்பியல், வேதியியல், உயிரியல், பொதுகணிதம், ஆங்கிலம், தமிழ், தர்க்கம், உடற்பயிற்சி, தத்துவம், கல்வியியல் தத்துவம், ஆராய்ச்சி முறைகள், உளவியல் கல்வி, உளவியல் தத்துவ அடிப்படையில் கற்பித்தலின் மேம்பாடு மற்றும் இறையியல், ஆகியவற்றின் அறிவு-சார்ந்த அனுபவங்களின் உதவி கொண்டு 1980-ஆம் ஆண்டு முதல் இன்று வரை பலதரப்பட்ட மாணாக்கர்களுக்கும் கற்பித்தலினோடு மட்டுமின்றி, எம்.எட்., எம்ஃபில், மற்றும் பிஎச்.டி. ஆய்வு- நிறைப்படிப்புகளுக்கும் ஆய்வுநிலை – ஆலோசகராகவும் கல்வியியல் கல்லூரியின் முதல்வராகவும் பணியாற்றி,

1. Education in the Emerging Indian Society

2. The Principles of Educational Psychology

3. The Educational Innovation and Curriculum Development

4. The TRB-P.G.Education

5. The TET. The Child Development and Pedagogy – Paper – I.

6. The TET. The Child Development and Pedagogy – Paper – II.

ஆகிய படைப்புகளை வெளியிட்டு, வளர்ந்துவரும் இளைஞர் சமுதாயத்திற்கு உறுதுணையாய் இருந்து செயலாற்றிவரும் வேளையில், தனது ஆழ்ந்த அறிவு-சார்ந்த கல்வியியல் தத்துவ-ஆராய்ச்சி முறைகளின் வழியில் நம் இந்திய நாட்டின் முழுமையான விடியலுக்கும் அதன் வழி உலகமனைத்தின் உய்தலுக்கும் உதவியாக உகந்ததோர் காப்பியத்தைப் படைப்பதில் தனக்கு வெகுநாட்களாக இருந்த  தீராத வேட்கை இந்த “விடியலின் முழுமையை நோக்கி” –என்ற வெளியீட்டின் வாயிலாய், தணிக்கப்பெறுதல் கண்டு, எல்லாம்வல்ல ‘ஒரே ஒரு இறைவனுக்கு‘ –என் (எங்கள்) மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றேன். இதில் எடுத்தாளப்படும் கருத்துக்கள் யாவும் எந்த ஒரு நபரையும் தனிப்பட்ட முறையில் தாக்கவோ, குறைகூறவோ மற்றும் கீழ்மைப்படுத்துதலோவின்றி, எம்மதத்தையும் உயர்வானதாகவோ, தாழ்வானதாகவோ இயம்பாது எந்த அரசாங்கத்தையும் நல்லதென்றோ, தீயதென்றோ மற்றும் தரக்குறைவானதென்றோ கூறாது உள்ளதை உள்ளவாறு எடுத்தாண்டு, இக்காப்பியத்தின்கண், நம்மை நாமே, சீர்தூக்கிப் பார்த்து செப்பனிட்டுக்கொள்ள இக்கலியுக-காலத்தின் இவ்வாழ்க்கைக் கண்ணாடி நம்மை அன்புடன் அழைக்கின்றது.

மேலும், வாசகப் பெருமக்களாகிய தங்களின் மேலான ஆலோசனைகளையும், மறுவூட்டுகளையும் மற்றும் உயரிய பங்களிப்புகளையும் வெகுவாக யாம் வாஞ்சையுடன் வரவேற்கின்றோம்.

Read More...

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Ratings & Reviews

0 out of 5 (0 ratings) | Write a review
Write your review for this book

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Also Available On

பேராசிரியர். முனைவர். ஆ.பி.ஜெ. பால்ராஜ்., திருமதி. இரஞ்சித் ஜான்

முதன்மை எழுத்தாளர் பேராசிரியர் டாக்டர். ஏ.பி.ஜே. பால் ராஜ், 95 எம்.எட்., 50 எம்.ஃபில் தவிர, அவரது ஏழாவது இதழில் (புத்தகமாக) ‘விடியலின் முழுமையை நோக்கி’ வழங்கியுள்ளார். மற்றும் 10 பிஎச்.டி. சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு கல்விப் பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் கல்லூரிகள், ஒருங்கிணைந்த ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் மற்றும் முதல்வர் (ஓய்வு பெற்றவர்கள்) என பல்வேறு துறைகளுக்கு இடையேயான ஆய்வுக் கட்டுரைகள்.

Read More...

Achievements