ஒரு சிறுவன் தனது தாத்தாவுடன் கோவிலுக்குப் போய் கோவிலில் உள்ள எல்லா கடவுள்களையும் தரிசித்து அங்கே நேரத்தைச் செலவழித்து மகிழ்வதை பற்றிய கதை இது. குழந்தைகளுக்கு இளம் வயதிலேயே கோவிலுக்குப் போவதை ஒரு பழக்கமாக்கினால் அவர்கள் வளர்ந்த பிறகு நம் கலாச்சாரத்தை அதிகம் பாராட்டக் கற்றுக்கொள்வார். தாத்தாவுடன் ஒரு செயலைச் செய்வது அவர்களுக்கு இடையேயான பிணைப்பை அதிகரிக்கிறது, மேலும் குழந்தை அவரிடமிருந்து நல்ல பழக்கங்களையும் கற்றுக்கொள்கிறது.