கல்லூரியில் சக வகுப்புத் தோழிகள் தொடங்கி வீட்டில் அப்பா வரை ஷைலஜா எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்பட்டுத்தான் ஆக வேண்டும். அப்படி ஒரு பிடிவாதக்காரி. பேரழகியும்கூட. அப்படிப்பட்டவள், விஸ்வம் என்கிற விஸ்வநாதனின் மேல் காதலில் விழுகிறாள். விஸ்வம் ஒரு பணக்கார வீட்டுப் பையன். அவனது அப்பா சின்னசாமி செட்டியாரின் டெக்ஸ்டைல்ஸ் கடையில்தான் தனது தந்தை சிங்காரம்பிள்ளை சேல்ஸ்மேனாகப் பணிபுரிவதும் பின்னாளில் அவளுக்குத் தெரியவருகிறது. சாதி, அந்தஸ்து காரணமாக ஷைலஜாவை ஒதுக்கி, விஸ்வத்துக்கு அவனது வீட்டினரும் உறவுகளும் சேர்ந்து அத்தை மகள் மல்லிகாவைத் திருமணம் முடிக்க முடிவெடுக்கின்றனர். விஸ்வத்துடன் ஷைலஜா சேர்ந்தாளா இல்லையா என்பதுதான் இந்தக் கதை.
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners