JUNE 10th - JULY 10th
போர்ட் பிளேர் வந்து நான்கு நாட்களாகி விட்டது. தினமும் காலை சூரிய உதயத்திற்குப் போய் விடுவேன். கார்பின்ஸ் கோவ் (Corbyn's Cove) பீச் என் விடுதிக்கு மிக அருகிலேயே இருப்பது வசதியாகி விட்டது. வேலையெல்லாம் முடிந்து முன்னிரவு நேரத்தில் கடற்கரையில் தேமேயென்று உட்காருவதும் தனி சுகம் தான். சீக்கிரமே இங்கெல்லாம் இப்பொழுது இருட்டி விடுகிறது. 5 மணிக்கே இரவு போல் தோன்றுகிறது. அதனால் சுற்றுலா கூட்டம் 5-6 மணிக்கு மேல் இருக்க மாட்டார்கள். 3-4 தலை தெரிந்தால் அதிசயம். கடலை எனக்கு இவ்வளவு பிடிக்குமென்பது இந்தப் பயணத்தில் தான் அறிந்து கொண்டேன். தனியாக அமர்ந்து கடலின் ஒவ்வொரு பகுதியையும் ரசிப்பது, வானமும் கடலும் சேரும் இடத்தை ஆராய்வது, மல்லாந்து படுத்து வானத்து நட்சத்திரங்களுக்கு நான் விரும்பிய பெயர் சூட்டுவது, தீடீரென்று கடலில் தோன்றும் ஒளிக் கீற்றோடு கண் சிமிட்டுவது, கறுப்பு வண்ணத்தில் இத்தனை வகைகளா என்று பிரமிப்பது, கடலின் அலை ஓசைக்குப் பாட்டு பாடுவது என்று தினம் தினம் வரிசை நீண்டு கொண்டே போனது.
முதலில் பாஸ் அந்தமானில் டீலரை பார்க்க அனுப்பிய போது எரிச்சலாக வந்தது. இங்கே தான் நாய் படாத பாடு. அந்தமானில் போயுமா? என் எரிச்சலுக்கு முக்கியக் காரணம் வார இறுதி நாட்கள் வீணாகிப் போகுமே என்பது தான். வாழ்க்கையை வாழ்க்கையாகச் சுவாசிப்பதே இந்த 2 நாட்களில் தான். அதற்கும் வேட்டா என்ற எரிச்சல். இங்கே வந்த பின் எல்லாம் மாறிவிட்டது. அடுத்த முறை தனி ட்ரிப்பே வர வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன். அதுவும் சென்னையிலிருந்து கப்பல் மூலமாகவே வரவேண்டும். கடலை எல்லா வேளைகளிலும் பார்த்துக்கொண்டே....... ஆஹா.... நினைப்பே சுகமாக இருந்தது
சனிக்கிழமை டீலரோடு இருந்த ஒரு மீட்டிங் அவரது அவசர பயணம் காரணமாகத் திங்கட்கிழமை ஒத்தி வைக்கப்பட்டது. டீலரே போர்ட் பிளேர் பக்கத்தில் பார்க்க வேண்டிய இடமெல்லாம் சொல்லி விட்டார். "தம்பி, இங்க ஹேவ்லாக் தீவு, நீல் தீவெல்லாம் இருக்கு. அதுக்கே 2 நாள் சரியா போய்டும். இப்ப சீசன் டயம்னால கப்பல், ஹோட்டல்லாம் இருக்கானு பார்த்துட்டுப் போப்பா. அப்படி இல்லாட்டி இங்க போர்ட் பிளேர்ல சுத்தி பார்க்கவே நெறைய பீச், செல்லுலார் ஜெயில், மியூசியம் இருக்கு. ராஸ் தீவு, நார்த் பே தீவெல்லாம் பக்கத்துல இருக்கு. அதுக்கு போய்ட்டு வாங்க தம்பி.
அவர் சொன்னது போலவே சுற்றுலா சீசனாக இருந்ததால் கப்பல் முன்பதிவெல்லாம் முடிந்து விட்டது. சனிக்கிழமை காலை ராஸ் தீவுக்குக் கிளம்பினேன். போர்ட் பிளேரில் இருந்து கப்பலில் சென்றால் 20 - 30 நிமிடங்களில் போய் விடலாம் என ஹோட்டல் ரூம் பாய் சொன்னான்.
ஒரு வாடகை பைக் எடுத்திருந்தேன். பீச் செல்லும் ரோட்டில் பீச்சை பார்த்தபடியே வண்டி ஓட்டுவது தனி சுகம்
போட் ஹவுஸ் முன்னால் வண்டியை நிறுத்தும்போது பக்கத்தில் இருந்த "ஐய்யனார் டீ ஸ்டால் " என்ற தமிழ் பெயர்ப்பலகை கவனத்தை ஈர்த்த
தொடரும்..... பாகம் -
ஒரு டீ குடித்து விட்டுப் போகலாம் என்று கடைக்குள் நுழைந்தேன். கடையில் ஆளே இல்லை. 60 வயதைக் கடந்த ஒரு பெண்மணி மட்டுமே இருந்தார். முகத்திலேயே தமிழ் சாயல் தெரிந்தது
"ஒரு டீ " என்றேன்
தேநீர் தயாரித்துக் கொண்டே, "தம்பி எந்த ஊரு?" என்றா
வெளிப்பிரதேசத்தில் தமிழைக் கேட்பது ஒரு தனி மகிழ்ச்சியைத் தரும்
"மதுரைம்மா! நீங்க எந்த ஊரு?" என்றே
"பக்கத்துல தான் தம்பி! இராமநாதபுரம்!" ஊர் சுத்திப் பார்க்க வந்தீகளா?" என உரையாடல் தொடர்ந்தது. இதற்குள் டீ போட்டுக் கொடுத்து விட்டார்
"இல்லைம்மா! வேலை விஷயமா வந்தேன்; அது கொஞ்சம் தள்ளிப் போயிடுச்சு, அதான் அப்படியே ஊர் சுத்திப் பார்க்கலாம்னு" டீ குடித்தபடியே சொன்னேன்
"நல்லது தம்பி! ராஸ் தீவு நல்லா இருக்கும்னு சொல்வா
சூர்யா-ஜோதிகாவோட ஒரு படம் கூட இங்க தான் எடுத்தாக; என்னமோ படம் பேர், இப்ப ஞாபகத்துக்கு வரமாட்டேங்குது; இங்கன வாசல்ல கார்ல அவுகள பார்த்தேன் தெரியுமா?" முகத்தில் கொள்ளைபி புன்னகையோடு மேடையைத் துடைத்தபடியே வெள்ளந்தியாகப் பேசினார்
"நீங்க போனதில்லையாம்மா
கலகலவென்று சிரித்தபடியே, "இல்லே தம்பி! கல்யாணம் முடிஞ்சு வந்து 40 வருஷமாச்சு இந்த ஊருக்கு; கடை, வீடுன்னே பொழுது போயிடும். இதோ பக்கத்துல இருக்குன்னு தான் பேரு, ஆனா போகத் தோதுப்படலை!" என்றார்
ஒரே ஆச்சர்யம் எனக்கு. ஆயிரம் ஆயிரம் மக்கள் இதை பார்க்கத் தினம் தினம் குவிய, இவ்வளவு பக்கத்தில் இருந்து கொண்டு, அதுவும் 40 வருடங்களாகச் செல்லாமல் இருப்பது ஆச்சர்யமாக இருந்தது. கேட்டே விட்டேன் என் ஆச்சர்யத்தைக் கேள்வியா
அதற்கும் புன்னகையோடு, "தம்பி! ஊர்ல கடன்பட்டு எல்லாமே நொடிஞ்சு பிழைப்பு தேடி இங்க வந்தோம். அரிசி சோறு ஒரு வேலை கிடைக்கிறதே பெரிய விஷயமா இருந்துச்சு; அப்படி, இப்படின்னு எப்படியோ இந்தக் கடையைப் போட்டு, புள்ள குட்டிங்களைக் கரை சேர்க்கவே இம்புட்டு வருஷம் போயிடுச்சு; மகளைத் தூத்துக்குடியில கட்டிக் கொடுத்துட்டே
அவ அங்கேந்து இப்ப சொல்றா, அம்மா! இங்க எல்லோரும் அந்தமான்ல பொறந்து வளந்தியான்னு வாயைப் பொளக்கிறாக! ஆனா ஒரு இடம் பார்க்கலைன்னு தெரிஞ்சு, கூடிச் சிரிக்கிறாவுக! நீ இந்த வருஷம் எப்படியும் ராஸ் தீவு பார்த்துடனும்னு சொல்லி இருக்கு;
ஹாங்....இப்ப நினைவுக்கு வந்துடுச்சு! 'காக்க காக்க படத்துல ஒரு பாட்டைத் தான் இங்க சினிமாக்காரங்க எடுத்தாக; நானும் காய் முடிஞ்சு சேர்க்க ஆரம்பிச்சுட்டேன் தம்பி! எப்படியும் அடுத்த வருஷத்துக்குள்ளார போய்ச் சுத்திப் பார்த்துடுவேன்!"" பெரிய லட்சியம் போல் சொன்னார்
"உங்க பேரு என்னம்மா
"முத்துப்பேச்சி! இந்த ஏரியாவுல பேச்சி ஆச்சின்னு சொன்னா எல்லோருக்கும் தெரியும். எங்க வீட்டுக்காரரு மட்டும் தான் முத்துன்னு கூப்பிடுவாக!", இந்த வயதிலும் நாணம் நளினமாய் மிளிர்ந்த
நானும் டீயை முடித்து விடப் பணத்தைக் கொடுத்து, சரி ஆச்சி! அப்பா நான் கிளம்புறேன்!"என்று விடை பெற்றேன்
"போயிட்டு வா தம்பி! நம்ம சனங்களைப் பார்த்தாலே ஒரு தனி சந்தோசம் தான்!" விடை கொடுத்தார்
சிதிலமடைந்த பழைய கட்டிடங்களை மட்டுமே கொண்ட தீவென்றாலும் அதற்கும் ஒரு தனி அழகு இருந்தது. டீலரை பார்த்து வேலை முடிந்து கிளம்பி விட்டேன்
கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து வேலை விஷயமாக போர்ட் பிளேர் வர நேர்ந்த
வந்து இறங்கியவுடன் பேச்சி ஆச்சி ஞாபகம் தான் வந்தது. அவர் ராஸ் தீவு போனாரா, இல்லையா? என்ற ஆர்வம் வேறு. வேலை முடிந்து முன்னிரவு நேரத்தில் அவரைப் பார்க்கவே ஐய்யனார் டீ ஸ்டாலுக்கு வண்டியை விட்டேன்
வழியில் அலைபேசி அழைத்தது. இந்த ஊரில் சிக்னல் கிடைப்பதே அபூர்வம் என்பதால் வண்டியை நிறுத்தி அழைப்பை எடுத்தேன். அப்பா தான். எதற்காக அழைக்கிறார் என்று தெரியும். எரிச்சல் வந்த
"தம்பி! கோவப்படாம நான் சொல்றத கேளுப்பா! உன் அண்ணன் தானே! நீ கொஞ்சம் விட்டுக் கொடுக்கலாம்ல
"ஏம்ப்பா உங்களுக்கே தெரியும்! ராயல் என்ஃபீல்டு வண்டி வாங்கணும்கிறது என்னோட எவ்வளவு வருஷ ஆசைன்னு. நாம எல்லோரும் எவ்வளவோ எச்சரிச்சும் அன்னான் அந்த ஏஜெண்டு கிட்டே காசு கொடுத்து ஏமாந்துட்டான். அதுக்கு இப்ப என் காசைக் கேட்கிறது நியாயமாப்பா?" கோவமும் எரிச்சலும் சரிவிகிதத்தில் இருந்த
"நல்லா புரியுதுப்பா! நான் உன் கிட்டே கேட்குறது தப்பு தான். ஆனா உங்கண்ணன் நிலைமையைப் பார்த்தா பாவமா இருக்கு; எதோ சொந்தமா தொழில் பண்ணப் பார்க்கிறான். நான் விசாரிச்சுட்டேன், இந்த வாட்டி ஏமாறமாட்டான்ப்பா! என் கிட்டே உள்ள பணம் எல்லாம் போட்டாள் கால்வாசி முதலுக்குக் கூடாது தேறாது போல. கீழே விழுந்தவனை எழுப்பி விட வேண்டியது நம்ம கடமை தானேப்பா; சரி, சொல்றத சொல்லிட்டேன், உன் இஷ்டம்!" என்று போனை வைத்து விட்டார்
தன்னை இளிச்சவாயனாக்கப் பார்க்கிறார். இந்த உபதேசத்தை அண்ணனுக்கு முதலில் கொடுத்திருக்க வேண்டும் என்று எண்ணியபடியே வண்டியைச் செலுத்தினேன். ஐய்யனார் டீ ஸ்டால் வந்து விட்டது. உள்ளே பேச்சி ஆச்சி அமர்ந்திருந்தார். 2-3 கஸ்டமர்கள் இருந்தார்க
ஒரு வருடம் ஆகி விட்டதே! ஞாபகம் வைத்திருப்பாரா என்று சந்தேகமாகவே சென்றேன். எண்ணப் பார்த்தவுடன் ஒரு நிமிடம் யோசித்து விட்டு, "அடடே மதுரை தம்பியா? மறுபடியும் வேலை விஷயமா வந்தீகளா?" என்று கேட்டு வியப்பில் ஆழ்த்தினார்
அப்படியே கொஞ்ச நேரம் ஊர் விஷயங்கள், நாட்டு நடப்பு பேசி விட்
"ஆச்சி! ராஸ் தீவைச் சுத்திப் பார்த்தீங்களா?" என்று கேட்டேன்
சிரித்துக் கொண்டே, "இன்னும் போகத் தோதுப்படலை தம்பி!" என்றார்
"போன வருஷம் பணமெல்லாம் தனியாச் சேர்த்து வச்சுட்டு வர்றேன்னு சொன்னீங்களே
"ஆமா தம்பி! அதெல்லாம் ஒழுங்காத் தான் சேர்த்து வச்சேன்; தேதி கூட யோசிச்சு, கடைக்கெல்லாம் லீவு சொல்லியாச்சு! திடீர்னு வூட்டுக்காரரோட தம்பிக்குப் பணத்தேவை. ஊர்ல இந்த வாட்டி மேனி சரியில்லை; சரின்னு இதை அனுப்பியாச்சு; இப்ப என்ன? அடுத்த வருஷம் போயிக்கிட்டாய் போச்சு! இந்த உசுரு இருக்குறதுக்குள்ள பார்த்துட்டு மாட்டோமா என்ன ?" தன் ட்ரேட் மார்க் சிரிப்பைச் சிரித்தா
இன்னும் கொஞ்ச நேரம் பேசி வீட்டுக் கிளம்பிய போது கை தானாகவே அப்பா நம்பரை அழைத்தது
&&&&&
ஆர். பிருந்தா இரமணி
#120
தற்போதைய தரவரிசை
41,250
புள்ளிகள்
Reader Points 3,750
Editor Points : 37,500
79 வாசகர்கள் இந்தக் கதையை ஆதரித்துள்ளார்கள்
ரேட்டிங்கஸ் & விமர்சனங்கள் 4.7 (79 ரேட்டிங்க்ஸ்)
sathishhkrishna
தங்கள் கதை மிகவும் அருமை. 5 star கொடுத்துள்ளேன். படிக்கும் அனைவரும் ரேட்டிங் தருவதில்லை. அதுதான் வருத்தம். எனது கதை அடுத்த நொடி ஆச்சரியம் ... தயவு செய்து படித்து ரேட்டிங் தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.. ஒரு எழுத்தாளராக... பெருந்தன்மையுடன்... ரேட்டிங்.. அளித்து.. ஆதரவு தாருங்கள்..
bruntharamani
thenmozhid22
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10புள்ளிகள்
20புள்ளிகள்
30புள்ளிகள்
40புள்ளிகள்
50புள்ளிகள்