JUNE 10th - JULY 10th
"டாடி எவ்வளவு நேரமா வெயிட் பண்றது ஏன் இவ்ளோ லேட்டா வர்றீங்க?" தன் செல்ல மகன் சிவகிருஷ்ணனின் குரலைக் கேட்டு மனம் கசிந்தான் சாந்தனு.
'அம்மா இன்னும் வரலையா?' சற்று கோபத்துடன் அவனிடம் கேட்டான் சாந்தனு.
"இல்லப்பா நான் ஸ்கூல்ல இருந்து வந்து பார்த்தா வீடு பூட்டி இருக்கு... பக்கத்து வீட்டு ஆன்ட்டிகிட்ட போன் வாங்கி அம்மாவுக்கு கால் பண்ணா அவங்க அட்டென்ட் பண்ணல. அதான் உங்களுக்கு கால் பண்னேன்" பயமும் பாத்தட்டமும் கலந்து கூறினான் சிவா.
"கொஞ்சம் கூட அறிவே இல்லையா அவளுக்கு, பையன் வந்து வெயிட் பண்ணுவான்னு தெரியும்ல அப்புறம் ஏன் இவ்வளவு லேட் பண்றா? வரட்டும் அவள வச்சுக்கிறேன்" என்று தன் காதல் மனைவி விமலாவை தன் மனதிற்குள் வசைபாடி கொண்டிருந்தான் சாந்தனு .
விமலா சாந்தனு இருவரும் காதலித்து பெற்றோரின் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்தவர்கள். அவர்களுடைய ஒரே மகன் தான் சிவகிருஷ்ணன். அருகில் உள்ள ஒரு பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து கொண்டிருக்கிறான்.
அப்பா அம்மா இருவரும் வேலைக்கு செல்பவர்கள் என்பதால் சிறுவயதிலிருந்தே அவனுடைய வேலைகளை அவனே செய்து கொள்வான். இந்த நகரத்து வாழ்க்கையில் இருவரும் வேலைக்கு சென்றால்தான் ஓரளவாவது சேமிக்க முடியும் என்பதை சிவாவிற்கும் உணர்த்தி இருந்தனர் இருவரும்...
ஆனாலும் அவர்களுக்குள் ஒரு ஒப்பந்தம் அதாவது சிவா பள்ளி முடிந்து வீடு திரும்பிய உடன் யாரேனும் ஒருவர் அவனுடன் இருக்க வேண்டும் என்பது.. அதனால்தான் விமலா ஒரு கல்லூரியில் விரிவுரையாளராக சேர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறாள். சிவாவின் பள்ளி முடியும் நேரமும் விமலாவின் கல்லூரி முடியும் நேரமும் ஒன்றுதான். சிவா டியூஷன் முடிந்து வீட்டிற்கு வரும் முன்னரே விமலா வந்துவிடுவாள். சாந்தனு ஒரு ஏற்றுமதி நிறுவனத்தில் அக்கவுண்டன்ட் ஆக பணியாற்றுகிறான்.
சற்று நேரத்தில் விமலா வந்தாள். சிவாவை ரூம்க்கு சென்று படிக்கச் சொல்லிவிட்டு, அவளைத் தேடி வந்தான் சாந்தனு. விமலா காலையில் நேரமாக கல்லூரிக்கு சென்று விடுவதால் சாயங்காலம் வந்தவுடன் சிறு ஓய்வுக்கு பின் வீட்டை சுத்தம் செய்யத் தொடங்கி விடுவாள்... அப்படியே இரவு உணவையும் முடித்து விடுவாள். அதைத்தான் இப்பொழுதும் செய்து கொண்டிருந்தாள். நேராக அவளிடம் சென்ற சாந்தனு 'ஏண்டி இவ்வளவு லேட்டு' என்றான்.
"நான் மெசேஜ் பண்ணி இருந்தேன்ல அத பாக்கலையா!?" என்றாள்.
அப்பொழுதுதான் நியாபகம் வந்தது, அவளிடமிருந்து மெசேஜ் வந்ததும் அதை அப்புறம் பார்த்துக்கலாம் என்று அவன் மறந்ததும்.
"அப்புறம் பார்த்துக்கலாம்னு நினைச்சேன்" என்று அவன் சொல்லி முடிக்கும் முன்னரே, 'ஓஹோ லவ் பண்ணும் போது நான் எப்படா மெசேஜ் அனுப்பவேனு எதிர்பார்த்த நீங்க இப்போ நான் அனுப்புன மெசேஜ பார்க்க கூட டைம் இல்ல.. அப்படித்தான!!" என்றாள் கோபமாக.
"இன்னைக்கு திடீர்னு காலேஜ்ல ஸ்டாப் மீட்டிங் வச்சிட்டாங்க, அதனால நீங்க கொஞ்சம் சீக்கிரம் வீட்டுக்கு போங்கனு மெசேஜ் பண்ணிருந்தேன், அத நீங்க பார்க்கலைன்னா நான் என்ன பண்றது!!" என்றாள் கடுப்புடன்.
அப்பொழுதுதான் அவனுக்குப் புரிந்தது, தப்பு அவன் மேல்தான் என்று..
சைலண்டா எஸ்கேப் ஆயிடலாம்னு வீட்டை வெளியே போயிட்டு கொஞ்ச நேரம் கழித்து வந்தான்.
காதல் திருமணம் புரிந்த அனைவரும் திருமணத்திற்கு பிறகு புலம்பும் ஒரே திருக்குறள், "காதலிக்கும்போது அப்படி இருந்த கல்யாணத்துக்கு அப்பறம் இப்படி மாறிட்ட" என்பது தான்.
காதலிக்கும் பொழுது பெண்ணும் ஆணும் தன்னை விட்டு சென்று விடக்கூடாது என்பதற்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்வார்கள். கல்யாணத்துக்கு அப்புறம் "எங்க போயிட போறாங்க நம்மள விட்டு "அப்படிங்கிற ஒரு மனநிலைக்கு வந்து விடுவார்கள். இதில் அவர்கள் காதல் குறைந்ததா? அல்லது பயம் குறைந்தா? என்று பட்டிமன்றமே நடத்தி விடலாம்.
விமலா "டிபன் ரெடி வாங்க சாப்பிடலாம்" என்றதும் இருவரும் வந்து அமர்ந்தனர். தன் பெற்றோர்களுக்குள் ஏதோ பிரச்னை என்பதை புரிந்து கொண்ட சிவா அவர்களை சகஜ நிலைக்கு கொண்டு வருவதற்காக தன் பள்ளியில் நடந்தவற்றை கூற ஆரம்பித்தான்..
மூவரும் தங்கள் அலுவலகத்திலும் பள்ளியிலும் நடந்தவற்றை பேசி சிரித்துக்கொண்டே சகஜ நிலைக்கு திரும்பினர்..
அப்பாவும் பிள்ளையும் சிறிது நேரம் விளையாடிவிட்டு உறங்க சென்றனர்.. விமலாவும் அனைத்து வேலைகளையும் முடித்து விட்டு அவர்களுடன் சேர்ந்து கொண்டாள்..
விமலாவின் மனதிற்குள் மட்டும் ஒரு கேள்வி இருந்து கொண்டே இருந்தது, இன்னும் இவர் நம்மளை காதலிக்கிறாரா இல்லையா என்ற சந்தேகத்துடன் உறங்கச் சென்றவளின் கடந்தகாலம் நினைவிற்கு வந்தது.
விமலா, சரண் இருவருமே பக்கத்து வீடுகளில் குடியிருப்பவர்கள். சிறுவயதிலிருந்தே நல்ல நண்பர்கள். பதினோறாம் வகுப்பு படிக்கும் பொழுது இவர்களுடன் வந்து சேர்ந்து கொண்டவன்தான் சாந்தனு. புதிய பள்ளி என்பதால் சாந்தனுவுக்கு இவர்களின் நட்பு மிகவும் உதவியாக இருந்தது. பள்ளிப்படிப்பை முடித்தவர்கள் ஒரே கல்லூரியில் சேர்ந்தனர்.
சாந்தனு தான் முதலில் தன் காதலை அவளிடம் கூறினான். விமலா அப்போதைக்கு அதை ஏற்கவும் இல்லை மறுக்கவும் இல்லை. கல்லூரி இறுதி ஆண்டில் அவள் தன் காதலை சாந்தனுவிடம் கூறினாள். விமலாவின் பெற்றோரோ அவள் கல்லூரி படிப்பை முடித்தவுடன் திருமணம் செய்வதற்கு ஏற்பாடு செய்தனர். சாந்தனு இப்பொழுது தான் கல்லூரிப் படிப்பை முடித்திருக்கிறான். அவனுக்கு வேலையும் இல்லை, வயதும் 21 என்பதால் தன் பெற்றோர் தன் காதலை சம்மதிக்க மாட்டார்கள் என இருவரும் நினைத்தனர். சரண் எவ்வளவோ எடுத்துக் கூறினான் ஆனால் இருவரும் திருமணம் செய்வதில் உறுதியாக இருந்தனர்.
சரண்தான் அவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்து திருமணம் செய்து வைத்தான். தன் தந்தையின் நண்பர் ஒருவரின் அலுவலகத்தில் சாந்தனுவுக்கு வேலையும் வாங்கித் தந்தான்.
விமலா நன்கு படிப்பவள் என்பதால் அவளை மேலே படிக்க வைக்க ஆசைப்பட்டான் சாந்தனு. அதற்கும் சரண் தான் உதவி செய்தான். சிறு சிறு கடன்கள் மற்றும் லோன் ஏற்பாடு செய்து கொடுத்ததன் மூலம் அவளும் தனது மேற்படிப்பை நல்ல படியாக முடித்தாள். இதற்கிடையில் சிவாவும் பிறந்துவிட்டான். ஒருவழியாக அவனை வளர்த்து அவன் பள்ளி செல்ல ஆரம்பித்தவுடன் விமலாவும் அதற்கேற்றார்போல ஒரு வேலையில் அமர்ந்து கொண்டாள்.
இந்த பத்து வருடத்தில் படிப்பு, வேலை, பிள்ளை வளர்ப்பு, கடன் அடைப்பதற்காக உழைப்பு என்று அவர்கள் வாழ்க்கை எந்திரமயமாக மாறி விட்டது. இப்பொழுது தான் ஓரளவுக்கு நிம்மதியாய் இருக்கின்றனர். இந்த சூழ்நிலையில்தான் விமலாவிற்கும் சாந்தனுவிற்கும் ஒரு இடைவெளி வந்தது.
சரண் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. விமலாவும் சாந்தனுவும் எவ்வளவோ முறை கூறிவிட்டனர், "31வயசு ஆயிடுச்சு இன்னும் கல்யாணம் பண்ணாம இருந்தா எப்படிடா?" என்று. உடனே அவன் 'ஏன் நீங்க கல்யாணம் பண்ணி படுற கஷ்டம் பத்தாதா நானும் அந்த கஷ்டத்தை அனுபவிக்கணுமா?' என்பான்.
ஏதேதோ நினைத்துக் கொண்டிருந்ததால் அப்படியே உறங்கி விட்டாள் விமலா. காலையில் அலாரம் அடிக்கும் சத்தம் கேட்டுதான் விழிப்பு வந்தது அவளுக்கு.
மூவரும் பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்லும் வேலையில் முனைப்பாக இருந்தனர். சாந்தனுவின் செல்போன் சிணுங்க, "ம்ம் சொல்லுடா, அப்படியா, சூப்பர், கங்கிராட்ஸ். ஏழு மணிக்கு மேல வா, இரண்டு பேரும் வீட்டில் இருப்போம்" என்றான். உடனே விமலா என்ன என்பதுபோல் அவனை பார்த்தாள்.
"சாயங்காலம் ஏழு மணிக்கு சரண் வீட்டுக்கு வர்றேன்னான்!!"
என்ன திடீர்னு வரான்!!
அவனே வந்து சொல்லுவான்" என்றான் சாந்தனு.
நேரமாகிவிட்டதால் அனைவரும் கிளம்பி சென்றனர்.
இரவு ஏழு மணி...
'ஹாய் சிவா குட்டி' என்று சொல்லிக்கொண்டே வீட்டிற்குள் நுழைந்தான் சரண்.
'ஹாய் மாமா எப்படி இருக்கீங்க?'
'நல்லா இருக்கேன்டா.. நீ நல்லா இருக்கியா..எப்டி படிக்கிற?'.
"நல்லா படிக்கிறேன் மாமா"
அடுப்படியில் இருந்து வந்த விமலா,
"எப்படி இருக்க சரண்.. என்ன திடீர்னு வீட்டுப்பக்கம்" என்றாள்.
"வேற ஒண்ணும் இல்ல, ரொம்ப நாளா சொல்லிட்டு இருந்தீங்கல்ல ரெண்டு பேரும், சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கடானு, இப்போ அதுக்கான நேரம் வந்துருச்சு'.
"அப்படியா சூப்பர்டா எப்போ மேரேஜ்"
இன்னும் டூ வீக்ஸ்ல ..
கங்கிராட்ஸ் என்கிட்ட சொல்லவே இல்ல!
இல்ல இது திடீர்னு முடிவானது அதான்.. ஒரு பிசினஸ் மீட்டிங்ல பொன்னோட அப்பா என்ன பாத்துருக்காரு என்ன பிடுச்சுருக்குனு அப்பா அம்மா கிட்ட பேசி இருக்காங்க.. அவங்க ஓகே சொல்லிட்டாங்க. சரி இதுக்கு மேல தள்ளிப்போட வேணாம்னு நானும் ஓகே சொல்லிட்டேன்
சரிடா சரண் பொண்ணு என்ன பண்றா ?
எங்க இருக்கா.. பேரு என்ன?
விமலா உன்னால மட்டும் தான் அடுக்கடுக்காக கேள்வி கேட்க முடியும். பேரு கவிதா எம் எஸ் சி முடிச்சுருக்கா.. அம்மா இல்ல கிராமத்தில் அவங்க பாட்டிகூட தான் வளர்ந்திருக்கா போல அதனால அம்மாவுக்கு அவ நல்லா குடும்பத்தக் கவனிச்சுக்குவானு நம்பிக்கை.. பார்க்கலாம் யார் எப்படினு நமக்கு என்ன தெரியும். என்ன பொருத்த வரைக்கும் என் குடும்பத்தில் இப்ப இருக்குற அமைதி எப்போதும் இருக்கணும் அவ்ளோ தான்.
சரி உங்க லைப் எப்படி போயிட்டு இருக்கு... லோன் எல்லாம் க்ளோஸ் பண்ணியாச்சா?
அதற்குள் அடுப்பில் குக்கர் விசில் சத்தம் வர"சரி பேசிட்டு இருங்க நான் கிச்சன் வேலையை முடிச்சுட்டு வந்துடுறேன்" என்று உள்ளே சென்றாள் விமலா .
என்னடா சாந்தனு கேட்டதுக்கு பதிலே இல்ல..
ம்ம்ம் போகுதுடா. லோன் எல்லாம் கிளோஸ் பண்ணியாச்சு. பண பிரச்சனை பெருசா எதுவும் இல்லை.. ஆனா எங்களுக்குள்ள மனசுல தான் நிறைய பிரச்சனை இருக்கு..
அப்படி என்னடா பிரச்சனை, ரெண்டு பேரும் சந்தோசமா தான இருக்கீங்க?
இருக்கோம். சந்தோஷமாக இருக்கோமானு தான் தெரியல.. அவ முகத்துல எப்ப பார்த்தாலும் ஒரு சோகம், கவலை இருக்கிற மாதிரியே தான் தோணுது.. அத தீர்க்கணும் தான் நினைக்கிறேன் ஆனா அது என்னன்னு கண்டுபிடிக்க தாண்ட முடியல!!பாவண்டா அவ, எனக்காக எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டு வந்தவ.. எனக்கு அது புரிஞ்சாலும் சில சமயம் ஏதோ ஒர்க் ஸ்ட்ரெஸ், டென்சன் ல கோபப்பட்டுர்றேன் அதுல அவ ரொம்ப டிஸ்டர்ப் ஆயிடுறா.. சிலசமயம் இப்பலாம் உங்களுக்கு என்ன பிடிக்கிறது இல்லை, என் மேல உள்ள லவ் குறைஞ்சிடுச்சுன் அ ழுகிறா.. ஆனா அப்பா அவளை கட்டிப்பிடித்து முன்ன விட ஜாஸ்தியாக இப்போ தான் லவ் பண்றேன்னு சொல்லத் தோணும் ஆனா மனசுல ஏதோ ஒன்னு தடுக்க நானும் கோபப்பட்டு குழந்தை முன்னாடி சண்டை போட கூடாதுன்னு அமைதியா வெளியில போயிடுவேண்டா..
சத்தியமா சொல்றேன் இப்ப தான்டா எனக்கு அவ மேல இருக்கிற லவ் ஜாஸ்தியா இருக்கு.. எனக்காக எல்லாத்தையும் விட்டுட்டு நான் மட்டும் போதும்னு எதைப் பத்தியும் யோசிக்காம என் பின்னாடி வந்தவ, இப்ப வரைக்கும் கஷ்டத்தை மட்டுமே அனுபவித்துக் கொண்டிருக்கும் அவளுக்கு என்ன வேணும்னு ஒரு நாள் கூட கேட்டதில்லை. அவளும் என்கிட்ட எனக்கு அது வேணும் இது வேணும்னு எதுவும் கேட்டதில்லை.
இப்ப பணக்கஷ்டம் கொஞ்சம் குறஞ்சுடுச்சு ப்ரீயா இருக்கலாம்னு நினைக்கிறப்ப அவ கிட்ட பேச முடியலடா.. ஏதோ ஒன்னு தடுக்குது என்னன்னு எனக்கு தெரியல.
சரண் "என்னமோ தடுக்கல அது உன்னுடைய ஈகோ தாண்டா.. கணவன்-மனைவிக்குள் ஈகோ மட்டும் இருக்கவே கூடாது சாந்தனு, அவளுக்காக எதையும் செய்வேன்னு சொல்லுவியே.. ஏன் அவகிட்ட உட்கார்ந்து உன்னோட ப்ராப்லம்ஸ எடுத்துச் சொல்லி புரிய வைக்க முயற்சி பண்ணியா ?விமலா என்கிட்ட போன் பேசுறப்ப என்னன்னு தெரியல அவர் முன்ன மாதிரி இல்ல என்கிட்ட எதையும் ஃபிரீயா பேச மாட்டேங்குறார்" னு சொல்லிருக்கா..!!
"இல்ல சரண் அவளும் வேலைக்கு போறா, குடும்பத்தையும் கவனிக்கிறா, கிடைக்கிற கொஞ்ச நேரத்தில அவ ரெஸ்ட் எடுக்கட்டும் ஃபிரீயா இருக்கட்டும்னு தான், மத்தபடி அவகிட்ட பேசக்கூடாதுனுலாம் இல்லைடா !!
லூசாடா நீ? கடவுள் நமக்கு எதுக்குடா அம்மா, அப்பா கூட பிறந்தவங்க, பிரெண்ட்ஸ், எல்லாரும் கொடுத்திருக்காரு? கல்யாணத்துக்கு முன்னாடி நாம ஏதாவது ஒரு சின்ன விஷயம்னாலும் அம்மா கிட்டயோ, அப்பா கிட்டயோ சொல்றோம். ஏன் அவங்க தீர்த்து வைப்பாங்க நமக்கு ஏதாவது ஒரு வடிகால் கிடைக்கும்ன்ற நம்பிக்கை.. அது மாதிரிதான் கல்யாணத்துக்கு அப்புறம் நமக்குத் துணையா வர்றவங்ககிட்ட தான் சொல்ல முடியும்.. பிராப்ளம்ஸ் தீருதோ இல்லையோ பட் எதிர்த்து போராடுறதுக்கான தைரியம் கிடைக்கும்.
ஒர்க் டென்ஷன் எல்லாம் வேலை பார்க்குற இடத்திலயே விட்டுட்டு வரணும், அத வீட்டுக்கு எடுத்துட்டு வந்தா இங்க இருக்கிற சந்தோஷமும் போய்டும். எத்தனை ஆம்பளைங்களுக்கு வேலையிலும் பிரச்சன வீட்டுலயும் பிரச்சனை இருக்கு. எல்லா நாம ஹேண்டில் பண்றதுலா தான் இருக்கு.
"சரி விடு எல்லா பிரச்சனையும் சீக்கிரம் சரியாகும்!!" என்று அவனை சமாதானம் செய்தான் சரண் .
டிபன் ரெடி ஆயிடுச்சு எல்லாரும் வாங்க சாப்பிடலாம் விமலா அழைத்ததும் அனைவரும் அமர்ந்து இரவு உணவை முடித்தனர்..
அடுப்படியை சுத்தம் செய்துகொண்டிருந்தாள் விமலா.
அவளருகில் சென்ற சரண் "விமலா உன்கிட்ட கொஞ்சம் பேசணும்,
சாந்தனு உன்ன நல்லா தானே பாத்துக்கிறான்.. ஒன்னும் பிரச்சனை இல்லைல"?
ஒன்னுமில்ல.. நல்லா தான் பாத்துக்கிறான்.
ஓ!!!! அப்டியா, அப்போ மேடம் போன்ல பேசும்போது அவன் மாறிட்டான் முன்ன மாதிரி இல்லனு டயலாக் விடுங்களே அதுக்கு என்ன அர்த்தம்!!
என்ன சொல்றது.. சாந்தனு தான் முன்ன மாதிரி இல்ல கொஞ்சம் மாறிட்டானோன்னு டவுட்டா இருக்கு. நானும் எவ்வளவோ அவன் கிட்ட பேசணும்னு ட்ரை பண்றேன் ஆனா என்னால முடியல.. ஏதோ ஒன்னு தடுக்குது.. என்னால புரிஞ்சுக்க முடியுது அவர் ஏதோ வேலையில் இருக்கிற டென்ஷன்ல தான் என்கிட்ட கோபபடுறாருனு , ஆனாலும் மனசு ஏத்துக்க மறுக்குது. என்ன கூட்டிட்டு போனு நான் சொன்ன ஒரு வார்த்தைக்காக அவருடைய வீடு சொந்த பந்தம் எல்லாத்தையும் விட்டுட்டு எனக்காக இப்ப வரைக்கும் வாழ்றார், நாங்க தினமும் பெருசா சண்டை ஏதும் போட்டுக்கிறதில்ல, ஆனா எங்களுக்குள்ள ஒரு பிரிவு.. இந்த பிரிவு இடைவெளி எப்படி வந்துச்சுன்னு எங்களுக்கே தெரியல.. ஒருவேளை கடனை அடைக்க இந்த சொசைட்டில நாலு பேர் முன்னாடி நல்லா வாழ்ந்து காட்டணும், பணத்தேவை இதுக்காக ஓடிக்கிட்டே இருந்ததுல எங்களுக்குள்ள இருந்த காதல மறந்துட்டமானு தெரியல.. கல்யாணத்துக்கு முன்னாடி எங்களுக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்ல, ஆனா கல்யாணத்துக்கு அப்புறம் நிறைய பிரச்சன இப்பதான் ஓரளவுக்கு எல்லா கடனயும் அடச்சு நிம்மதியா இருக்கலாம்னு நினைச்சேன்.. ஆனா இப்ப எங்களுக்குள் உள்ள இடைவெளி அதிகமாயிடுச்சு.. ரொம்ப பயமா இருக்கு.. என்ன பண்றதுன்னு எனக்கு தெரியல டா?
விமலா நான் சொல்றேன் தப்பா நினைக்காதே உங்க ரெண்டு பேரோட தப்பு என்ன தெரியுமா!!! ஏதோ தடுக்குது ஏதோ தடுக்குது ன்னு சொன்னீங்களே அது ஏதோ இல்ல உங்களுக்குள்ள இருக்கிற ஈகோ.. யார் முதல்ல பேசுறது, யார் முதலில் கன்வின்ஸ் பண்றது அப்படிங்கறது தான்.. முதல அதை தூக்கி எறி, உன்னோட புருஷன் தானே, அவன் வேணும்னு தான நீ எல்லாத்தையும் விட்டுட்டு வந்த.. அப்புறம் என்ன அவன உட்காரவச்சு பேசு.. எனக்கு இது பிடிக்கும் இது பிடிக்கல நீங்க இப்படி மாறனும் எனக்காக நீங்க இதை செய்யணும்னு உனக்கு தோன்ற ஆசையை சொல்லு..
தயவுசெஞ்சு பசங்க முன்னாடி உங்களோட பிரச்சினையை காட்டாதீங்க, இன்னிக்கு நான் இவ்வளவு தெளிவாவும் மெச்சசூர்டாவும் பேசுறேன்னா அதுக்கு ஒரே காரணம் என்னோட அம்மா அப்பா. அவங்களும் உங்களை மாதிரி லவ் மேரேஜ் பண்ணிகிட்டவங்க தான், ஆனால் இப்ப வரைக்கும் என் முன்னாடி ஒரு நாள் கூட சண்டை போட்டது கிடையாது. அவங்களுக்குள்ளேயும் பிரச்சனை இருந்திருக்கும் ஆனா என் முன்னாடி காட்டிக்கிட்டது இல்ல. அதனாலேயே என்னமோ அவங்க மேல அதிக ரெஸ்பெக்ட்டும் அண்பும் உண்டாச்சு. நீங்களும் உங்க பையனுக்கு இதையே கத்துக்கொடுங்க..
கிளம்பும்போது இரண்டு பேருக்கும் பொதுவாக ஒன்றை சொன்னான் , அது "லவ் பண்ணி சுத்திட்டு இருக்கப்ப மட்டுமில்ல, கல்யாணத்துக்கு அப்புறமும் தொடர்ந்தா தான் அது உண்மையான அன்பு. அந்த லவ் இனிமே உங்க கிட்ட இருக்கும்னு நான் எதிர்பார்க்கிறேன்.. சரி என்னோட கல்யாணத்துக்கு நாலு நாளைக்கு முன்னாடியே வந்துருங்க..அப்போ நான் பழைய சாந்தனுவையும் பழைய விமலாவையும் பார்க்கணும்.. ஓகே பாய்டா சிவா குட்டி, என்று அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு கிளம்பினான் சரண்..
#847
தற்போதைய தரவரிசை
20,883
புள்ளிகள்
Reader Points 50
Editor Points : 20,833
1 வாசகர்கள் இந்தக் கதையை ஆதரித்துள்ளார்கள்
ரேட்டிங்கஸ் & விமர்சனங்கள் 5 (1 ரேட்டிங்க்ஸ்)
Pavalamani Pragasam
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10புள்ளிகள்
20புள்ளிகள்
30புள்ளிகள்
40புள்ளிகள்
50புள்ளிகள்