JUNE 10th - JULY 10th
உதவிக்கு கிடைக்கும் இறை மரியாதை
அழகு வனத்தில் ஒரு குருட்டு யானை இருந்தது. பிறவியிலேயே அதற்கு கண்கள் தெரியாது. சில காலம் வரை அதை தன் இனத்துடன் சேர்த்துக்கொண்டு பராமரித்த யானை கூட்டம் ஒரு கட்டத்தில் அதை தனியாக விட்டு சென்று விட்டன.ஒரு நாள் அந்த யானைக்கு கடுமையான தாகம். அருமை காட்டு விலங்குகளே யாராவது உதவி செய்து என்னை நீர் இருக்கும் இடம் அழைத்து செல்லுங்கள் என்று வேண்டியது.
ஓ. அப்படியா? அது சரிஇ உன் யானைகளே கை விட்ட நிலையில் நாங்கள் எப்படி உதவ முடியும் என்று நறுக்கென்று கூறிவிட்டு சென்றது ஒரு ஓநாய்.
ஏ விலங்குகளே என் உயிர் பிரிந்து விடும் நிலையில் இருக்கிறது. தாகம் தவிக்கிறேன். உதவிக்கு வாருங்கள் என்று இப்போது அழா குறையாக கெஞ்சியது அந்த குருட்டு யானை.
ஓ. நீ இருந்தாலும் ஆயிரம் பொன். இறந்தாலும் ஆயிரம் பொன்னாமே. நாங்க சொல்லலே. பகுத்தறியும் மனிதனே சொல்லி விட்டான். அதனால் சாகு. பரவாயில்லை என்று ஏளனம் செய்தபடி சென்றது நரி.
அப்போது ஒரு குரல். யானையாரே நான் இருக்கிறேன். தானம் கொடுக்கும் போது இரு கைகளை நீட்டி வாங்க வருவதும் உதவி என்று கரம் நீட்டினால் வாங்கிய கரங்களை கொண்டே துரத்தி அடிப்பதும் மனித குணம். ஆனால் நான் மிருகம். அதுவும் சைவ விலங்கு. ஆம் யானையாரே நான் ஒரு முயல். வாருங்கள் உங்களுக்கு நான் உதவுகிறேன் என்றதும் யானை ஓவென அழுதபடி பிளிறி காட்டையே ஒரு குலுக்கு குலுக்கியது. அப்போதுதான் நரி கவனித்தது. ஒரு அழகான குண்டு முயல், யானைக்கு உதவி செய்வதை.
ஆகா இன்று நமக்கு நல்ல உணவு. இந்த முயல், யானையை நீர்; நிலைகள் இருக்கும் இடம் அழைத்து செல்லும். யானை நீர் குடிக்கும். அப்போது தனித்திருக்கும் இந்த முயலை வேட்டையாடலாம் என்ற ஆர்வத்தில் நரி முயலுக்கு தெரியாமல் யானையை பின் தொடர்ந்தது.
தம்பி எனக்கு கண்பார்வை கிடையாது. நீ உதவி செய்கிறாய். நான் உனக்கு இடையூறாக இருக்க கூடாது. அதனால் நீ செல்லும் பாதையை நான் தொடர ஏதாவது உபாயம் செய். என் வலுவான துதிக்கையை பிடித்துக்கொண்டு உன்னால் நடக்க முடியாது என்றது யானை.
யானையாரே கவலை வேண்டாம். நான் என் குரலில் பாடிக் கொண்டு போகிறேன். தாங்கள் குரல் ஒலியை கேட்டு வர முடியுமா என்றது முயல்.
நிச்சயமாக. எங்களை போன்ற மாற்று திறனாளிக்கு இறைவன் கொடுத்த பெரும் சக்தியே ஊகிக்கும் திறன். அதனால் நீ பாடு. உன் குரல் கேட்டு வருகிறேன் என்றது யானை.
“குருடு என்பது குறையல்ல”
இதை கேட்ட யானை ஒரு உத்வேகத்துடன் நடந்தது.
“கேட்டது அணைத்தும் கிடைக்காது.”
“நினைப்பது அணைத்தும் நடக்காது”
“ நம் தேவை அறிவான் ஆண்டவன்”
“அவன் கொடுப்பான் என்பது நிச்சயம்”
இதை கேட்டதும் யானை அழுதது. தம்பி இது வெறும் பாட்டல்ல. தத்துவம். நீ நல்லா இருக்கனும் என்று வாழ்த்தியபோது ஒரு ஆறு வந்தது.
யானையாரே ஆறு வந்து விட்டது. ஒரு சரிவு இருக்கிறது. அதன் வழியாக நான் செல்லுவேன். தாங்கள் பின்பற்றி வாருங்கள். நிறைய தண்ணீர் ஓடுகிறது. வேண்டும் அளவுக்கு குடியுங்கள் என்றது முயல்.
நல்லது தம்பி என்றபடி யானை பின் தொடர்ந்து சென்று ஆற்றில் இறங்கி நீர் குடித்த போது எங்கிருந்தோ வந்த முதலை, யானை காலை கவ்வி இழுத்தது. அய்யோ ஆபத்து. ஆபத்து என்று அஞ்சிய முயல் முதலையிடம் இப்போது கெஞ்சியது.
முதலையாரே. அந்த யானைக்கு கண்கள் தெரியாது. தாகம் தாகம் என்று மரண ஓலமிட்டது யானை. எந்த காட்டு விலங்கும் கண்டு கொள்ளவில்லை. நான்தான் உதவி செய்து அழைத்து வந்தேன். தயவு செய்து அதை கொன்று விடாதீர்கள். உதவிய எனக்கும் பெரும் பாவம் ஏற்பட்டு விடும் என்றது முயல்.
சரி. உன் நல்லெண்ணத்துக்கு சிறிது அவகாசம் தருகிறேன். அந்த யானை தாகம் தீர குடிக்கும் வரை அதன் கால்களை விட்டு விடுகிறேன். ஆனால் நான் கடும் பசியில் இருக்கிறேன். அதனால் எனக்கு நிச்சயம் உணவு தேவை. எனவே குருட்டு யானை குடித்து முடித்ததும் அதை கரை ஏற்றிவிட்டு நீ வரவேண்டும். எனக்கு உணவாக வேண்டும். சம்மதமா?
சம்மதம். சம்மதம். சம்மதம் என்று அடித்து சொன்னது முயல்.
யானை எதுவுமே கேட்டுக்கொள்ளவில்லை. அந்த அளவுக்கு தாகம். ஆசை தீர பசி தீர நீரை குடித்து முடித்தது யானை. பின் முயல் அதை மெல்ல கரை ஏற்றியது.
அடுத்து கொடுத்த உறுதி மொழிக்கேற்ப தன்னை உணவாக்கி கொள்ள முதலையாரிடம் சென்றது.
இறைவா என் உயிர் போக இருக்கிறது. இனி இந்த யானைக்கு நீயே கதி என்றபடி ஆண்டவனை துதித்து விட்டு முதலையாரே வாருங்கள் என்றதும் இதுவரை சரியான நேரத்துக்கு காத்திருந்த நரி, உடன் அந்த அழகான குண்டு முயலை, முதலை பிடிப்பதற்குள் தான் பிடித்து விட வேண்டும் என்ற அச்சத்திலும் அவசரத்திலும் வேகமாக முயல் மேல் பாய்ந்தது. சிறிது இடமாறு தோற்றப்பிழை. முயல் ஏதோ சலசலப்பு சத்தம் கேட்டு சிறிதே நகர்ந்தது. நரியின் கணக்கு தப்பியதால் நரி முயல்மேல் விழுவதற்கு பதில் முதலைமேல் விழவும் லபக்கென்று நரியை கவ்விய முதலை, தம்பி இவன் ஒருவன் போதும். நான்கு நாட்கள் பசிக்காது. எனவே நீ போய் அந்த குருட்டு யானைக்கு உதவு என்று கூறிவிட்டு நரியை விழுங்க ஆரம்பித்தது முதலை.
ஆகா இறைவன் செயலே அற்புதம் என்று நினைத்த முயல் இப்போது யானை அருகில் வந்தது.
யானையாரே பசி ஆறினீர்களா என்று கேட்டது முயல்.
தம்பி நிறைய நீர் குடித்து விட்டேன். உணவு எதுவும் தேவை இல்லை. நீ போய் ஏதாவது சாப்பிட்டு வா என்றது யானை.
யானையாரே நான் அழைத்து வந்த இடம் தென்னை மரங்கள் இருக்கும் இடம். இங்கு அருகருகே மரங்கள் உள்ளன. எட்டும் தூரத்தில் தென்னை மட்டைகளும் உள்ளன. அதனால் பசித்தால் அவைகளை தாங்கள் உண்ணலாம். எனக்கு உணவுக்கு சற்று தொலை தூரம் செல்ல வேண்டியிருக்கும். அதனால் சற்று நாழி ஆனால் கவலைபடாதீர்கள் என்று கூறிவிட்டு சென்றது முயல்.
சரி தம்பி என்ற யானை தன் துதிக்கையை தூக்கி ஆசிர்வதிக்க அதன் துதிக்கை ஒரு தென்னை மட்டையில் படவும் மகிழ்ச்சி அடைந்த யானை அந்த மட்டைகளே நாளைக்கு உணவு என்று எண்ணியது.
இப்போது மரண ஓலம். யானை நடுங்கியது. அய்யோ என் முயலுக்கு ஆபத்தாகிவிட்டதே என்று யானை அழுதது. சற்று நாழியில் மரண ஒலி நின்றது. எங்கும் அமைதி. யானை இங்கும் அங்கும் வேகமாக நடந்து நடந்து சென்றது.
அப்போது ஒரு கம்பீர குரல்.
யோவ் யானையாரே. உனக்கு கண் இல்ல. இப்படி என் மீது மோதுவது போல் வருகிறாயே என்றது அந்த கிழட்டு புலி.
ஓ.புலியாரா. என்னை மன்னித்து விடுங்கள். எனக்கு கண் பார்வை கிடையாது. எனக்கு உதவியது ஒரு முயல். இப்போது மரண ஓலம் கேட்டதும் அதன் உயிருக்கு ஆபத்தாகிவிட்டதே என்ற வருத்தத்திலும் அதிர்ச்சியிலும் உறைந்து போய் இங்கும் அங்கும் நடந்தேன். மன்னியுங்கள் என்றது யானை.
சரி. உன்னை மன்னித்து விடுகிறேன். நீ சொல்வதை பார்த்தால் நான் இரையுண்டது உன் முயல்;தானோ என்னவோ என்றது கிழட்டு புலி.
அய்யோ ஆண்டவா உதவி செய்தவனை தண்டித்து விட்டாயே என்று வருந்தியது யானை.
உனக்கு உதவி. அவன் எனக்கு உணவு. இது ஆண்டவன் கணக்கு. நீ குருடன். ஆனால் நான் கிழவன். கண் பார்;வை சிறிதுதான் உண்டு. அதனால் நான் ஏதாவது உணவுக்கு விலங்குகள் வராதா என்று எண்ணியபடி ஒரு மரத்தின் அருகில் படுத்திருந்தேன். காரணம் என்னால் பாய்ந்து இரை தேட உடலில் சக்தியும் இல்லை. கண்களில் பார்வையும் இல்லை. அப்போது என் மீது ஒரு விலங்கு பட்டு ஒடவும் உடன் அதை பிடித்து உண்டேன். நான் வேறு என்ன செய்ய முடியும் என்றது அந்த கிழட்டு புலி.
முயலேஇ உயிர் கொடுத்த முயலே இப்போது உன் உயிர் போய் விட்டதே என்று யானை கதறவும் யானையாரே என்ன நடந்தது? ஏன் இந்த ஓலம்.? பசிக்கிறதா? என்று கேட்டுக்கொண்டு முயல் வந்தபோதுதான் கிழட்டு புலி நிற்பதை பார்த்தது. ஓ. இந்த புலிக்கு பயந்துதான் யானை ஓலமிடுகிறது என்பதாக புரிந்து கொண்ட முயல் யானை அருகில் சென்று அதன் துதிக்கையை பிடித்து தட்டிக்கொடுத்தது.
அப்ப தம்பி நான் சாப்பிட்டது நீ இல்லையா என்று கேட்டது புலி.
என்ன புலியாரே நீங்கள் என்னை புசித்து இருந்தால் நான் இப்படி வந்திருப்பேனா?
ஏளனம் வேண்டாம் தம்பி. எனக்கு கண்பார்வை சிறிதுதான். அதனால் நான் யாரை உண்டேன் என்று தெரியவில்லை. அப்போதுதான் இந்த குருட்டு யானையார் உன்னை பற்றி கூறவும் நான் உன்னைத்தான் உண்டதாக நினைத்தேன் என்றது புலி.
ஆம் நானும் உங்களை கவனித்தேன். உடன் இடம் மாற்றி என் உணவை தேட சென்று விட்டேன். அப்போது ஒரு அழுகுரல். உங்களை கவனித்தேன். ஒரு பெரும் பெருச்சாளி உங்கள் கையில் சிக்கி போராடிக்கொண்டிருந்தது. அப்படி என்றால் அதைத்தான் தாங்கள் புசித்திருக்க வேண்டும். கிட்டதட்ட அதுவும் என் அளவு குண்டாக இருந்ததால் நான்தான் என்று தாங்கள் தவறாக நினைத்து விட்டீர்கள் என்றது முயல்.
எப்படியோ நீ உயிர் பிழைத்து விட்டாய் அதுவே போதும். நீ எப்போதும் போல் இந்த யானையாருக்கு உதவி செய். நான் வருகிறேன் என்ற புலி மெல்ல அங்கிருந்து சென்று விட்டது.
அப்போது ஒரு ஆர்ப்பாட்ட ஒலி கேட்டது. முயலார் திரும்பி பார்த்தார். கையில் தடிகளுடன் மனிதர்கள் கூட்டம். அய்யோ என்ன செய்வது என்று நினைப்பதற்குள் அவர்கள் வந்து விட்டனர்.
ஏய் முயல் குட்டிடா என்றான் ஒருவன். ஆம் ஆம் அதோ யானை இருக்கிறது என்றான் அடுத்தவன். அப்போது ஒரு பெரியவர் பேசினார்.
முயல் தம்பி அந்த கிழட்டு புலிக்கு நீதான் இரையாகி இருப்பாயோ என்று நாங்கள் அஞ்சினோம். ஆனால் அது எங்கள் நிலத்தையும் தானியங்களையும் பெரும் சேதம் செய்த பெருச்சாளி என்று புரிந்து மகிழ்ந்தோம். அந்த கிழட்டு புலியால் எங்களுக்கு ஆபத்தில்லை. ஆனால் பெருச்சாளிதான் பெரும் தொல்லை கொடுத்தது. இப்போது அது மடிந்து விட்டது. உன்னை பார்த்தோம். இப்போது ஒரு யானையையும் பார்க்கிறோம். நாங்கள் இந்த காட்டு முகப்பில் பெரும் பிள்ளையார் கோவில் கட்டுகிறோம். கோயிலுக்கு யானை தேவைப்படுகிறது. அதனால் இதை நாங்கள் அழைத்து செல்ல இருக்கிறோம். உன்னை விட்டு விடுகிறோம். நீ காட்டிற்கு சென்று விடு என்றார் அந்த பெரியவர்.
அய்யாஇ பிள்ளையார் கோவிலுக்கு ஒரு வினாயகர் வடிவிலான யானை செல்வது நல்லதுதான். ஆனால் இந்த யானைக்கு கண் தெரியாது. பிறவி குருடு. என்னை பற்றி கவலை இல்லை. நான் யாருக்கோ இரையாகப்போகிறேன். ஆனால் இந்த யானைக்கு எந்த பங்கமும் ஏற்படலாகாது என்று கவலையுறுகிறேன் என்றது முயல்.
அதைப்பற்றி கவலை படாதே. யானைக்கு சொற்ப வேலைதான். யானை பாகன் அதற்கு பயிற்சி கொடுத்து சரி செய்து விடுவார் என்றார் அந்த பெரியவர்.
யானை இப்போது பேசியது. மாமனிதர்களே நான் கோவிலுக்கு இறை சேவை செய்வது ஆனந்தமே. ஆனால் என் உயிரினும் மேலான இந்த முயலை விட்டு வரமாட்டேன் என்று உறுதியாக கூறவும் அந்த பெரியவர் முயலையும் கோயிலுக்கு அழைத்து சென்று அதை வளர்க்க சம்மதித்தார்.
யானையும் முயலும் அதை மகிழ்வுடன் ஏற்க யானை முதுகில் முயல் அமரவும் அந்த மனிதர்கள் காட்டிய வழியில் கோயிலை அடைந்தனர்.
முயலே நல்ல பாட்டு ஒன்று பாடு என்றது யானை.
ஓ பாடுகிறேன்.
“விலங்குகளில் தீயோர் உண்டு”
“மனிதரிலும் நல்லோர் உண்டு”
“ இறைவன் கணக்கில் அர்த்தம் உண்டு.”
“ புரிந்து கொண்டார் பிழைத்துக்கொண்டார்”
“ அறியாதார் அழிந்து போனார்”
ஆகா அற்புதம். பலே பலே என்று யானை பாராட்டியபோதே யானை பாகன் யானைக்கு கவளம் கவளாக உணவை எடுத்து வந்தான். அது போல் முயலுக்கும் முட்டைகோஸ் மற்றும் கேரட்டுக்ளை கொண்டு வர இருவரின் மகிழ்வுக்கும் எல்லை உண்டா சிறார்களே.
நீதி: சரியானவர்களுக் சரியாக நேரத்தில் சரியாக உதவி செய்தால் இறைவனும் நமக்கு சரியான நேரத்தில் உதவுவான். இது சத்தியம் சிறார்களே.
#392
தற்போதைய தரவரிசை
46,623
புள்ளிகள்
Reader Points 790
Editor Points : 45,833
16 வாசகர்கள் இந்தக் கதையை ஆதரித்துள்ளார்கள்
ரேட்டிங்கஸ் & விமர்சனங்கள் 4.9 (16 ரேட்டிங்க்ஸ்)
ANNAMALAI
அருமையான பதிவு!! கீழே உள்ள லிங்க் இல் எனது கதை இருக்கிறது. படித்தபின் தங்களின் மதீப்பட்டை கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். வெற்றிபெற வாழ்த்துக்கள்!!! https://notionpress.com/ta/story/ssc/19817
sathishhkrishna
தங்கள் கதை மிகவும் அருமை. 5 star கொடுத்துள்ளேன். படிக்கும் அனைவரும் ரேட்டிங் தருவதில்லை. அதுதான் வருத்தம். எனது கதை "அடுத்த நொடி ஆச்சரியம்" ... தயவு செய்து படித்து ரேட்டிங் தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.. ஒரு எழுத்தாளராக... பெருந்தன்மையுடன்... ரேட்டிங்.. அளித்து.. ஆதரவு தாருங்கள்..
jaynavin16
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10புள்ளிகள்
20புள்ளிகள்
30புள்ளிகள்
40புள்ளிகள்
50புள்ளிகள்