மாணிக்கம்

manikandans9578
உண்மைக் கதைகள்
4.9 out of 5 (39 ரேட்டிங்க்ஸ்)
இந்தக் கதையைப் பகிர

அன்று ஞாயிற்றுக்கிழமை மதிய உணவு உண்ட பின்பு ஏனைய இளைஞர்கள் ஒன்று கூடும் இடம் . நான் கிரிக்கெட் மைதானத்தை கூறினேன் நீங்கள் வேறு நினைத்தால் நான் பொறுப்பு இல்லை .எங்கள் அணி வழக்கமாக விளையாடும் நேரம் அது தான் .எப்போதும் பத்து முதல் பன்னிரெண்டு நபர்கள் இருப்பதே வழக்கம். ஆனால் அன்று இருவர் மட்டுமே இருந்தோம். நானும் மாணிக்கம் மாமாவும். மாணிக்கம் எனக்கு மட்டும் மாமா இல்லை எங்கள் அணியில் இருக்கும் அனைவருக்குமே அவர் மாமா தான். எல்லாருமே அவரை மாணிக்கம் மாமா மாணிக்கம் மாமானு தான் கூப்புடுவோம். மாமாவ பத்தி சொல்லனும்னா அவருக்கு வயசு 31 எங்க டீம் ஓட பெருசு அவர் தான். 23 வயசு ஆனா எனக்கே பொண்ணு பாக்க ஆரம்புச்சுட்டாங்க இவருக்கு ஏன் இன்னும் பாக்கலைனு ஒரு கேள்வி ரொம்ப நாளா என் மண்டைக்குள்ள ஓடிட்டு இருந்துச்சு, சரி இது தான் சரியான நேரம் மாமாட்ட கேட்டு தெரிஞ்சுப்போம்னு என் மனசு என்கிட்டே சொல்லிக்கிட்டே இருந்த நேரம் 'என்ன குமாரு அமைதியவே இருக்கானு' மாமா பேச்சு குடுத்தார். அப்பாடா அப்டினு நெனச்சுட்டே பேச ஆரம்புச்சேன்.
அது ஒன்னும் இல்ல மாமா எல்லாம் உன்ன பத்தி தான் என செல்லும்போதே மாமா முகம் மாறுவதை கவனிச்சேன். என்ன யோசுச்சனு கேட்டாரு உடனே இது தான் சாக்குன்னு எனக்குள்ள இருந்த கேள்விய கேட்டுட்டேன். கேட்டு முடுச்சுட்டு நான் உங்க வீட்டுக்கு வந்து உங்க அம்மாகிட்ட கேக்குறேன். ஏன்? எங்க மாமாக்கு கல்யாணாம் பண்ணிபாக்குற ஆசை உங்களுக்கு இல்லையானு. அதுக்கு மாமா உதட்டு ஓரமா சிரிச்சுகிட்டே கேக்க நீ இருக்க ஆனா அதுக்கு பதில் சொல்லாத ஆள் இல்லனு சொன்னாரு.
எனக்கு முன்னடியாவது ஒரு கேள்விதான் இருந்துச்சு இப்போ நிறையவே இருக்கு எல்லாத்துக்கும் பதில் மாமாட்ட வாங்கியே ஆகணும்னு , கேள்விய கேட்கலாம்னு நெனச்சப்போ தெய்வவாக்காக மாமா நான் மொத்த கதையும் சொன்னதா உனக்கு புரியும்னு தன்னோட நினைவுகள புரட்ட ஆரம்புச்சார்.

கோடாங்கிபாளையம் ஊருல இருந்து ஆரம்புச்சது அந்த கதை , மாமனுடைய குடும்பத்துல மொத்தம் 5 பேர் மாமா, அப்பா(முத்தையா ), அம்மா(கோசலை), பூங்கோதை (மூத்த தங்கச்சி), பாரிஜாதம் (இளையதங்கச்சி). முத்தையாக்கு முக்கியமா ஒரு நாளைக்கு 3 வேலை இருக்காம். ஒன்னு பெயிண்ட் அடிக்கணும், ரெண்டு
சாயந்தரம் சரக்கு அடிக்கணும், மூணு மாணிக்கத்தை அடிக்கணும். இதுல எது தவறுனாலும் மூணாவது வேலை மட்டும் தவறுவது இல்லையாம். இப்படி ரொம்ப மோசமா போயிட்டு இருந்த மாணிக்கத்தோட வாழ்க்கைய இன்னும் மோசமா மாத்துனது அவங்க அம்மா ஓட மறைவு. மாணிக்கம் எட்டாவது படிக்கும் போது அவங்க அம்மா தவறிட்டாங்க. இது மாணிக்கத்துக்கு வாழ்கைமேலயே பற்று இல்லாம பண்ணிருச்சு. அம்மா இல்லாத பசங்களுக்கு அப்பாதான் அம்மாவா பாத்துப்பாங்கன்னு கேள்விப் பட்ருப்போம். ஆனா இங்க அப்டி ஒன்னும் நடக்கல. முத்தையா வாழ்க்கைல யாரு இருந்தாலும் இல்லாட்டியும் அவரோட மூணு வேலை எப்பவும் நடந்துட்டேதான் இருந்துச்சு. வருஷம் வேகவேகமா ஓடுச்சு மாணிக்கம் அவனோட பள்ளி படிப்பை முடுச்சுட்டான். இது வர கம்மியா இருந்த ஸ்கூல் பீஸ அவன் சின்ன சின்ன வேலைக்கு போய் கட்டிட்டு இருந்தான். இப்போ காலேஜ் போகவேண்டிய காலம் ஆகிருச்சு. ஆனா இந்த காலேஜ் பீஸ எப்படி கட்ட போறோம்னு பெரிய கொழப்பத்துல இருந்தப்போ இத்தன வருசமா கண்டுக்காம இருந்த தாய்மாமா நான் கட்டுறேன் மாணிக்கம் நீ கவலைபடாதன்னு சொன்னப்போ ஒரு ஆண்தேவதையா அவனோட கண்ணுக்கு மாமா தெரிஞ்சாரு. காலப்போக்குல வருசம் ஓடுச்சு மாணிக்கம் படிப்ப முடுச்சுட்டான். கேம்பஸ்ல வேலை கிடைச்சுரும், நம்ம வாழ்க்கை இனிமே நல்லா மாறும்னு நெனச்ச மாணிக்கத்துக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்துச்சு அவன் மாமா வீட்டுல. பூங்கோதைக்கு மாப்ள பாத்துருக்கேன்னு மாமா சொல்ல, யாருன்னு மாணிக்கம் கேக்க, உங்க அத்தையோட தம்பி கருணானு மாமா சொல்ல, மாணிக்கத்தோட நிம்மதியே கொழஞ்சு போச்சு. கருணா இருக்கானே அவனுக்கு எங்க அப்பாவே மேல்னு சொன்ன மாணிக்கத்த பாத்து, "ஓஹோ! அப்ப வேற மாப்பிளை பார்த்தா மாப்பிளைக்கு சீர்வரிசைக்கு என்ன செய்வ, நகைக்கு என்ன செய்வ, என் பேச்ச கேளு மாணிக்கம்.., மாமா ஒன்னோட நல்லதுக்கு தான சொல்லுவேன்" அப்டினு சொன்னார் .


சீர்வரிசை பிரச்சனையை எல்லாம் நான் பாத்துக்குறேன். நீங்க அத பத்தி கவலைப்படாதீங்க. சீர்செய்ய முடியலன்றதுக்காகலாம், 'உங்க மச்சான் மாதிரி ஒருத்தனுக்கு என்னோட தங்கச்சிய கல்யாணம் பண்ணி வைக்க முடியாது' அப்டினு சொல்லிட்டான் மாணிக்கம். "படிக்கவே இவனுக்கு வக்கு இல்லையாம், இதுல சீர்செஞ்சு கல்யாணம் பண்ணி வைக்குறானாம். நாங்கலே வக்கு இல்லாதவங்களுக்கு வாழ்க்க கொடுக்கலாம்னு பாத்த, இவன் ரொம்ப பேசுறானே. கட்டிக்கொடுக்குறானா இல்ல படிக்க வச்ச காச கொடுக்குறானான்னு கேளுங்க" அப்டினு சமையக்கட்டுல இருந்து ஒரு சத்தம் மட்டும் வந்துச்சு. முகம் பாக்கவே தேவை இல்லை மாணிக்கத்தோட அத்தைதான் அவங்க .

இத கேட்ட மாணிக்கம் ரொம்பவே மனசு ஒடஞ்சு போய்ட்டான். இதுவர குடிக்க காசு மட்டும் கேட்டுட்டு இருந்த முத்தையாவும் மாணிக்கத்துட்ட கல்யாணம் பத்தி கேக்க ரொம்ப கோவப்பட்டான் மாணிக்கம். நீங்க யாரும் எங்களுக்காக எங்கள பாத்துக்க கஷ்டப்பட வேணாம். அண்ணனு நான் ஒருத்தன் இருக்கேன், என்னோட தங்கச்சிகள பாத்துக்க, அதே சமையம் மாமா நீங்க கவலைபடாதீங்க, நீங்க படிக்க வச்ச காச நான் ரெண்டு வருசத்துல கண்டிப்பா கொடுத்துருவேன்னு சொல்லி லெட்டர் ஒன்னு எழுதி வச்சுட்டு பழைய துணி அஞ்சும், தன்னோட தங்கச்சிங்களோட நம்பிக்கையும், தன்னோட பகுதி நேர சேமிப்பு பத்தாயிரம் ரூபாயும் எடுத்துட்டு கோயம்புத்தூர் கெளம்பிட்டான் மாணிக்கம். கோயம்புத்தூர் வந்து தனியா வீடு எடுத்து தங்கச்சிகளோட குடிவந்தான். கோயம்புத்தூர் வந்து பத்து வருஷம் ஆகிருச்சு என்னோட அப்பா இறந்து ரெண்டு வருஷம் ஆகிருச்சு இதோட பழைய கதை முடுஞ்சு அப்டின்னு பேச்ச நிறுத்தினான் மாணிக்கம். அதுக்கு அப்பறம் 'உங்க அப்பாவ நீங்க பாக்கலையானு' கேட்டான் குமாரு. அதுக்கு மாணிக்கம் இல்லவே இல்ல, நான் தான் அவருக்கு கொள்ளிவைக்கணும்னு எல்லாருமே கேட்டாங்க. நான் அப்போ கூட அங்க போகவே இல்ல.
போகலன்னு உங்களுக்கு வருத்தமா இல்லையானு கேட்டேன், இருந்துச்சு அவருக்கு நாம செய்யவேண்டிய கடமைய செய்யலன்னு அப்பப்போ வருத்தமா இருக்கும் தான், ஆனா அப்போல்லாம் அவரு நமக்கு அப்பாவா செய்யவேண்டிய கடமை எதுவுமே செய்யல, அதுக்கு அவரு கவலைப்படல நீ மட்டும் ஏன் கவலைப்படுறேன்னு என்னோட மனச தேத்திப்பேன்னு மாணிக்கம் சொன்னப்போ குமாரோட கண்ணே கலங்கிருச்சு. கோயம்புத்தூர் வந்து இவளோ நாள் கஷ்டப்பட்டு பூங்கோதைக்கு இப்போ தான் மாப்பிள்ளை பாக்கவே ஆரம்புச்சுருக்கேன் அவளோட கல்யாணம் அப்பறம் தான் என்னோட கல்யாணத்த பத்தி யோசிக்கணும்னு மாணிக்கம் சொன்னப்போ பூங்கோதைக்கு இன்னையோட ஒரு அண்ணேன் மட்டும் இல்ல, இன்னொரு தம்பியும் இருக்கான்னு தனக்குள்ளேயே சொல்லிக்கிட்டான் குமாரு.

சொன்னமாதிரி உங்க மாமாவோட கடன கட்டுனியானு குமாரு கேக்க, "அவங்க எப்படியோ ஆனா நான் சொன்னா சொன்னமாதிரி இருப்பேன். எங்க மாமாவோட கடனை ரெண்டு வருஷத்துல என்னால குடுக்க முடியல ஆனாலும் மூணு வருசத்துல கொடுத்துட்டேன், அந்த கடன் காச குடுக்க கூட ஊருக்கு போகாம என்னோட நண்பனோட பேங்க் அக்கௌன்ட்ல போட்டுவிட்டு குடுத்துடேன்ன்னு", சொன்னான் மாணிக்கம்.

இவ்வளவு நாலா மாணிக்கத்த ஒரு கோமாளியாவும், ஒரு ஒதவாகரையவும், பாத்த குமாரு "ஒரு பொறுப்பான அண்ணனா, தங்கச்சிக்காக வாழுகிற முதிர்கண்ணனா" பாத்தான். அவனுக்கு மாணிக்கத்து மேல தனி மரியாதையே பொறந்துருச்சு, அவரு பேருல மட்டும் மாணிக்கம் இல்ல குணத்துலையும் தான்னு தனக்குள்ளேயே பேசிக்கிட்டான். இதெல்லாம் இருக்கட்டும், இந்த வாரமாச்சு ரன் எதுவும் அடிப்பியான்னு கேட்டு சிரிச்சுகிட்டே விளையாட மைதானதுக்குள்ள போனாங்க ரெண்டு பேரும் .

நீங்கள் விரும்பும் கதைகள்

X
Please Wait ...