கூத்து..

உண்மைக் கதைகள்
3 out of 5 (1 ரேட்டிங்க்ஸ்)
இந்தக் கதையைப் பகிர

பூவிழி வாசலில்.

கூத்தை மிஞ்சும் கூத்து.

அன்று வெள்ளிக்கிழமை ராஜாவிற்கு சம்பள நாள்.

தலைமையாசிரியர் வகுப்பில் இருந்தவனை பள்ளி உதவியாளர் மூலம் வரச்சொல்ல.

அவன் போனான் அவனிடம் அவன் பெயர் எழுதிய சம்பளக் கவர் தலைமை ஆசிரியர் கொடுக்க வாங்கிக்கொண்டு திரும்பினான்.

வீட்டிற்கு வந்து சின்ன ட்ராவல் பேகில் இரண்டு செட் துணிகளை மட்டும் எடுத்து

க் கொண்டு சொந்த ஊருக்கு புறப்பட்டான் ராஜா.

மீட்டூர் வந்து வீட்டுக்கு வந்து சேர்ந்தான்.

ராஜா வந்தது அப்பா, அம்மாவிற்கு ரொம்ப சந்தோசம்.

13. மணி நேரம் பயணம். பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, சேலம், திருப்பத்தூர், அங்கிருந்து மீட்டூர். வெள்ளிக்கிழமை மாலை 6. மணிக்கு புறப்பட்டவன் மறு நாள் சனிக்கிழமை காலை 7. மணிக்கு தான் வந்தான் பஸ்சில் மாறி மாறி வர வேண்டும். ஆனல் காத்திருக்க வேண்டியதே இல்லை. உடனுக்குடன் பஸ். மொத்தம் 410 கிலோமீட்டர் தூரம்.

வந்த களைப்பு வீட்டிற்கு முதலில் குளித்து விட்டு டிபன் அம்மா கொண்டு வந்து கொடுக்க சாப்பிட்டு தூங்க போய் விட்டான்.

என்னத்தான் அவன் உறங்க முயன்றாலும் நெஞ்சக் கடலின் கொந்தளிப்பு அவன் களைப்புடன் இருந்தாலும் அவனை உறங்க விடாமல் செய்தது.

அவன் மறக்க நினைக்கும் நினைவுகள் வந்து குதியாட்டம் போட்டது.

ராஜாவுக்கு 26. வயது தான். வேலை கிடைத்து இரண்டு ஆண்டுக்குள்ளே அப்பா அம்மா பார்த்து அலைன்ஸ் மேரேஜ் தான் செய்தார்கள்.

அவன் என்ன பாவம் செய்தான்?

அவனுக்கு அமைந்துள்ள மனைவி ரொம்ப அழகானவள். அக்கா சாரு. அம்மா செங்கை "மனோ "யாத்திரா. அம்மா சொல்கின்ற மாதிரி அழகு இருக்கும் இடத்தில் ஆபத்து இருக்கும் என்பது நூற்றுக்கு நூறு இவன் வாழ்க்கையில் உண்மையானது.

மனிதனை பணம் என்கின்ற அகங்காரம், திமிரு எப்படியெல்லாம் ஆட்டிவைக்கிறது.

அவனையாறியாமல் அவன் மனகுதிரை அவனை அந்த ஓர்த்தநாடு டாக்டர் வசந்தியிடம் அவன் பாக்கிய லட்சுமியை அழைத்து சென்றது முதல் அவள் அண்ணன் பாபு வந்து ஏக வசனத்தில் பேசி அழைத்து வந்தது முதல் ஒவ்வொன்றாய் நினைவுக்கு வர அந்த கசப்பான நினைவுகளை இழுத்துச் சென்றது.

இந்த கொரோனாவை விட கொடிய வைரஸ் போல் அவனுக்கு மூச்சு திணறல் வந்து விடும் போல் இருந்து அவனுக்கு.

அன்று மாலை 4. மணிக்கு தான் அவனுக்கு உடம்புக்கு சரியானது.வெளியே டா டா சுமோ கார் ஒன்று வந்து நின்றது.

அதிலிருந்து பாக்கிய லட்சுமியின் அண்ணன் பாபு, அவருடைய மாமா பரசு ராமன். அடுத்த அண்ணன் அறிவழகன்.

ஊர் தலைவர் கணபதி, கவுன்சிலர் சின்ன,

பாக்கிய லட்சுமியின் அம்மா சாரதாம்பாள் அவள் அக்கா சுமதி சின்ன அண்ணன் சதீஸ். என்று ஒரு பட்டாலாமே வந்து இறங்கினார்.

அவர்கள் ஏதோ ஒரு முடிவுக்கு வந்து தான் இப்படி ஆட்களை சண்டை போட வருகிறார்கள் என்பது மட்டும் அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.

ராஜாவின் அப்பா இன்னும் இரண்டு நாட்களுக்கு முன் நடந்து நிகழ்ச்சி சொல்ல

வில்லை. பிள்ளை ஊரிலிருந்து இப்போ தான் வந்து இருக்கிறான் மெதுவா சொல்லாம் என்று இருந்தார் அவர். அவர் அம்மா விடவும் சொல்லி வைத்திருந்தார். மெதுவா சொல்லலாம் வந்தும் வராததுமாக சொல்ல வேண்டாம் என்று. அதற்குள்ளே அவன் மாமியார் வீட்டில் இருந்து வந்து விட்டார்கள். சண்டை போட.

பாக்கியலட்சுமி ஆலங்காயம் அழைத்து போன உடனே சில விஷயங்கள் நடந்து முடிந்தது.

பாக்கியலட்சுமி ராஜா டாக்டர் வசந்தி இடம் அழைத்துப் போனது. டாக்டர் மூன்று மாதம் கர்ப்பம் என்று சொன்னது. போட்டோ கிழிச்சி போட்டு எரித்தது. அவனுக்கு சந்தேகம் வந்து பேசாமல் மௌனமாக நடந்துகொள்வது எல்லாம் சொன்னாள்.

அவள் அக்கா சுமதியிடமும் அம்மா சாரதம்மாள் இடமும் அதிர்ச்சி அடைந்து விட்டார்கள் அவர்கள்.

"என்னடி சொல்லேற நீ கர்ப்பமா....!!?"

ரூமில் கதவு மூடி இருந்ததால் அவர்கள் கத்தியது வெளியே கேட்க வில்லை.

பொழுதும் வேகமாகக் கழிந்துக் கொண்டிருந்தது.

அவர்கள் உண்மை தெரிந்துக் கொண்டார்கள்.

எப்படி இந்த பிரச்னை முடிவுக்கு கொண்டு வருவது? ஓரே குழப்பம். அவள் கர்ப்பத்துக்கு காரணம் யாரு?

அவள் அக்கா சுமதியின் தலையில் ஒரு பெரிய இடி இறங்கியது போல் துடித்து போனாள் அவள்.

அவள் அம்மாயும் இந்த பிரச்னை எப்படி

கையால்வது?

நிச்சயம் இதற்கு காரணம் ராஜா இல்லை.

இது எவ்வளவு பெரிய அசிங்கம். வெளியே தெரிந்தால் எப்படி தலை நிமிர்ந்து நடக்க முடியும்?

அக்கா விற்கு துரோகம் செய்ய எப்படி மனசு வந்தது?

சீ.... கேவலமா இல்லை.

அவன் அக்கா புருஷனுக்கு எப்படி இந்த பாவம் செய்ய துணிவு வந்தது.?

எல்லாத்துக்கும் காரணம் பாக்கிய லட்சுமி யின் அழகா!"?

மச்சினிச்சி குழந்தை மாதிரி தானே,!

அக்காவும், மாமாவும் ஒரு விதத்தில் அப்பா அம்மா ஸ்தானம் தான் இது ஏன் அவனுக்கு தெரியவில்லை.?

வளர்ப்பு சரி இல்லை.

அம்மா சரி இல்லை.

தாய் ஒழுங்கா இருந்தால் குழந்தை ஒழுங்காக இருக்கும்.

சும்மாவா சொன்னார்கள் தாயாட்டம் பிள்ளை நூலாட்டம் சேலை என்று.

பாக்கிய லட்சுமியின் அம்மா சாரதா வீட்டில் தோட்ட வேலை செய்யும் நடராஜன் என்பவனோடு தொடர்பு.

அது தெரிந்து போய் பிரச்னை வர நடராஜன் இவளும் சாரதாவும் சேர்ந்து விஷம் வைத்து பாக்கிய லட்சுமியின் அப்பாவை கொலை செய்தவர்கள்.

இன்னும் அவன் நடராஜன் உயிரோடு இவர்கள் வீட்டில் தான் வேலை செய்கிறான்.

இந்த விஷயம் எல்லோருக்கும் தெரியும்.பெரிய இடத்து விஷயம் நமக்கு எதுக்கு என்று எல்லோரும் ஒதுங்கி விட்டார்கள்.

இதுக்கு தான் அந்த காலத்தில் பெரியவர்கள் குலம் பார்த்து கோத்திரம் பார்த்து பெண் எடுக்க வேண்டும் என்று

சும்மாவா சொன்னார்கள்.

பணம் இருந்தால் போதும் எவ்வளவு பெரிய விஷயமும் மறைத்து விடலாம் என்பது எவ்வளவு உண்மை.

சீ இது கூட ஒரு பிழைப்பு?

ஆமா இது கண்ணு தெரிந்தது நாட்டில் இப்படி கண்ணுக்கு தெரியாமல் எவ்வளவோ. தெரிந்தும் ஒன்றும் செய்ய முடியாமல் எவ்வளவோ.

மானம், சூடு சொரணை இல்லாமல் வெட்கம் இல்லாமல் இருப்பது எவ்வளவோ இருக்கத்தான் செய்கிறார்கள். பணம் என்ற போர்வையில் மூடி மறைத்து வாழ்ந்தும் வருகிறார்கள். கோடு போட்டு வாழ்பவர்கள் எத்தனைப் பேர்?

பாக்கிய லட்சுமி வந்த மறு நாளே அவள் பெரிய அக்காவும் எதிர் வீட்ல இருக்கும் பாமித்தாவும் வாணியம்பாடி டாக்டர் பார்வதியை போய் பார்த்து கரென்சிகள் தள்ளி இவள் வயிற்றில் இருந்த சிசுவை அழித்து விட்டனர்.

இது எப்படி இருக்கு இப்படியும் நடக்குமா!

நடந்ததே பாக்கிய லட்சுமியின் வயிற்றில் ராஜாவின் குழந்தை இருந்து இருந்தால் இப்படி செய்வார்களா?

அதும் ராஜாவின் அனுமதி இல்லாமல்.

குழந்தைபாக்கியம் எவ்வளவு பெரிய விஷயம்.?

கலியாணம் ஆகி உடனே....

இந்த குடும்பம் பணக்காரகுடும்பம். அந்த ஊரிலே மிகப் பெரிய வசதியான குடும்பம். கார் பங்களா, சொத்து. நிலம் புலம், தோப்பு தொரவு,கழனி காடு என்று ஏகப்பட்ட சொத்து வசதி.

ஆனால்.... இருந்து என்ன பிரயோஜனம்?

மானம் கெட்ட குடும்பம். ஆமா அப்படி தான் சொல்ல வேண்டும்

======================================()

உங்க

≈≈≈≈≈இதயா ≈≈≈≈≈≈

அன்புடன்

நீங்கள் விரும்பும் கதைகள்

X
Please Wait ...