JUNE 10th - JULY 10th
சூரியன் அஸ்தமானதை தொடர்ந்து மெதுமெதுவாக இருண்டு கொண்டு இருந்த அந்த மாலை நேர பொழுதில் சலசலவென உருண்டு ஓடுகின்ற ஆற்றின் ஓசையைத் தவிர வேறு எந்த அரவமும் கேட்காத அந்த பரிசல்கள் நிற்கும் ஆற்றங்கரையோரம் ஒரு பரிசலில் மட்டும் யாரோ, சரியாக அடையாளம் காணமுடியாத கண்களில் ஒருவிதமான திருப்தி நிறைந்த தவிப்புடன் அந்த பரிசலின் இருபுறமும் துடுப்புகளை வேகமாக இயக்குகிறன அந்தக் கைகள் . .
மாலை நேர வண்டுகளின் ரீங்கார சத்ததிற்கும் வளைவுகளில் நெளிந்து செல்லும் நீரின் சூழல்கள் எழுப்புகின்ற சத்தத்திற்கும் நடுவே ஒரு சத்தம். புரண்டு ஓடும் ஆற்றின் நீரோட்டத்தின் நடுவே செந்நிற இரத்தமும் கலங்கியோடுகிறது... யாருடையதாக இருக்கும் இந்த இரத்தம்..! எப்படி வந்தது இந்த இரத்தம் ..! நீரோட்டத்தில் யாரால் வந்தது இந்த இரத்தம் ..!
பார்வைக்கு நல்ல அழகிய இளமையும் பேச்சில் காதிற்கு இனிமையும் செயல்பாட்டில் விறுவிறுப்பையும் கொண்ட விழிகளில் எந்நேரமும் இவ்வயதிற்கான மகிழ்ச்சியையும் புன்னகை ததும்ப ததும்ப கொண்டவள் தான் மங்கா. தனிப்பட்ட வகையில் வினோதமான பழமையான பழக்க வழக்கங்களை பின்தொடர்ந்து வரும் மலைவாழ் பாரம்பரியத்தில் இருந்து வந்த அவளுக்கு ஊருக்கு வந்திருக்கும் பட்டணத்துப் பையன் பற்றிய சிந்தனைதான் அந்த நாள் முழுவதும். என்றும்போல தேயிலைத் தோட்டத்தில் வேலை பார்த்துவிட்டு வீடு திரும்பும்போது ஓங்கி உயரமாக வளர்ந்த மரங்களின் நடுவே மாலை நேரத்தில் மலரும் மொட்டுகள் மேல் நிற்கும் பனித்துளிகளை பீறிட்டு வரும் ஒரு வெளிச்சம்.
க்கீ..க்கீகீ....க்க்கீ....என திடீரென கேட்போரை பயமுறுத்த செய்யும் அந்த கருப்பு நிற ஜீப்பின் சத்தம் தான் அது. குறுகலான மலைப்பாதையில் புழுதியை புரட்டிப் போட்டுக் கொண்டு வரும் அந்த ஜீப்பின் ஹாரன் சத்தத்தினால் அலறி அடித்து தப்பிக்க ஒரே வழியான அருகில் ஓடிக்கொண்டிருந்த நீரோட்டம் நிறைந்த சிறுசம்பாற்றில் அவள் குதித்ததை அந்த ஜீப்பின் இன்ஜின் சத்தமும் கெட்லைட் வெளிச்சம் மட்டுமே அறிய வாய்ப்பு இருந்தது .
கல்லூரி தேர்வை முடித்த மகிழ்ச்சியில் சுதந்திரப் பறவையாக தனது நண்பனின் தேயிலைத் தோட்டத்தை நோக்கி வந்து கொண்டிருந்த அவன் அதைக் கண்டு ஜிப்பை விட்டு வேகமாக இறங்கி அவளை காப்பாற்ற ஆற்றில் குதித்தான் . ஆற்றின் நீரோட்டத்தை பற்றி நன்கு அறிந்த அவள் தானே நீந்தி கரையேறினாள் சிவந்த கண்களுடன் மங்கா.
ஏய்..சாரே.. கண்ணு தெரியுதா இல்லயா..? கண்ண பின்னாடி வச்சுக்கிட்டு வண்டி ஓட்டுவ..? நா மட்டும் இன்னார கொஞ்சம் சூதாரிக்காமல் இருந்தா இந்நேரத்துல ஆள் காலி பண்ணியிருப்பயா..!! என மங்கா திட்டுவதை எதையும் கவனிக்காதவனாக அவன் கரையேறிய அவளின் ஆற்றை விட்டு தான் காப்பாற்றுவதற்குள் தாமாகவே நீந்தி கரைக்கு சென்றவளை ஜீப்பின் வெளிச்சத்தில் மினுமினுக்கும் அவளின் மூக்குத்தியை மட்டுமின்றி அவளின் அதன் அழகையும் காது கேட்காமல் கண்டு வியந்தவனாக நின்று வேடிக்கை பார்த்தவனாக பேச்சு வராது பெருமூச்சு விட்டேன் நின்றான் இராஜா .
....யோவ் நா எம்புட்டுக்கு நேரமா பேசிக்கிட்டே இருக்கே.. நீ என்னயா பேச மாட்டேங்கிறீயே..?? என சிவந்த கண்களுடன் வாதாடிய அவளின் விழிகள் எதிர்நிற்கும் அவனின் கண்கள் தன்னையும் தன் அழகான இதழ்கள் மற்றும் ஆற்றில் நனைந்த தன் உடலினை அவனின் பார்வைகள் மெய்மறந்து காண்கிண்றன என்றுணர்ந்தாள் மங்கா.. ஏ..ஏ...ஏய்... ஏயா இப்படி பாக்குற..? என அவளின் கண்ணுக்குள்ளேயே அவள் நாம என்ன அந்தளவுக்கு அம்மாம் பெரிய அழகிய இருக்குமா என்ன..! என ஒரு நிமிடம் அப்படி மெல்ல கோபத்தை மறந்து அவனை ஒரு ஓரமாக தன் கண்களில் இடைவெளியை சுறுக்கி வலக்கையின் நகங்களை சுவைக்கத் தொடங்கினாள் வெட்கத்தில்..!!!
..ஏ புள்ள மங்கா..மங்கா.. என ஆற்றங்கரையின் மீது யாரோ அரிக்கன்விளக்கை எடுத்து வருபவர்கள் தன் தங்கையும் சித்தியும் என அறிந்தவுடன் அச்சச்சோ..! நேரமாயிடுச்சே..! என தன் தலையை சற்று உலுக்கிக்கொண்டு அவர்கள் வரும் திசையை நோக்கி அவளின் கால்கள் விரைந்து ஓட தொடங்கின.
இந்த மலங்காட்டுக்குள்ள இவ்வளவு அழகான பொனா..? என்ன பொண்ணுடா இவ என மெய்மறந்து போனவனாக அங்கேயே நின்று அவள் ஓடிய பாதையையே பார்த்துக்கொண்டே இருந்தான் இராஜா.
தன்னை இந்த ஊரில் யாருமே என்னை அந்த மாதிரி பார்த்ததில்லை.. அந்த பார்வைகள் என்னிடம் எதையோ சொல்ல விரும்புகிறதோ என்றுதான் தோன்றுகிறது. இருக்கட்டும் இதல்லாம் நமக்கு இப்ப தேவை இல்லாதது எனக்கு பசிக்கிறது வீட்டில் என்ன இருக்கும் என வீட்டில் இருந்த திணை மாவையும் நன்கு உடைத்து புடைத்து செய்த மூங்கிலரிசி கஞ்சியையும் சாப்பிட ஆரம்பித்தாள் மங்கா.
அரிக்கன் விளக்கு வெளிச்சத்தில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த அவள் தன் அருகே ஒரு திருடனைப் போல மெதுவாக அந்த பேண்ட் சூட் போட்டு இருந்தவனின் கண்கள் வருவதை கண்டு அ..ஆ...அச்சச்சோ..!! யாராவது வாங்களே.. என அலறி கத்திட ஆரம்பித்தாள். அவள் கண்ணை மூடி கண் திறப்பதற்குள் என்னாச்ச.. என்னாச்சு.. என்னாம்மாச்சு..!!! வீட்டார்கள் கேட்டதற்கு அதுவா.. வந்து, வந்து; என்ன சித்தி கத்தீனிங்க... என கீச்சிடும் குரலில் மாறி மாறி இரு சிறு பிள்ளைகளும் கேட்க நான் வெளிச்சத்துல என்னோட நிழலை பார்த்து நானே பயந்துட்டேன் அதனாலதான் அலறினேன் என்றால் மங்கா.
என்ன தாயி கண்ட நேரத்தில வெளியில போகாதனு இதுக்கு தான் சொல்றோம். இப்ப பாரு..! சாப்பிட்டுட்டுதானே இருந்தேன்.. பின்ன எப்படி அது மாதிரி தோணிச்சு, இருந்தாலும் பரவாயில்லை. இதுவும் நல்லாத்தான் இருந்துச்சு. எனக்கென்னமோ அக்கண்கள் கனவிலேயில்ல இல்ல நிஜத்துல இப்ப வந்தால் கூட நல்லாத்தான் இருக்கும் என்று மனதுக்குள் புன்னகையுடன் சிரித்தாள். அவள் யோசித்தது அந்த கண்களையும் அதற்கு சொந்தமானவரையும்தான் நினைத்து நினைத்து பார்த்தால் மனதிற்குள் தன்னை அறியாமல்..
அம்மாடி முதலில் வெளியில வாம்மா, அந்த தேன் குடுவையை எடுத்து அலசிட்டு வா என்று கூற சரி மா என்று சொல்லி விட்டு மீண்டும் ஒரு முறை தண்ணீரா..! அவள் எண்ணம் அப்படியே ஆற்றங்கரையோரம் நகர்ந்தது. இதுபோன்று ஒவ்வொரு நாளும் மீண்டும் மீண்டும் மவுனமாக அவனையே எண்ணிக் கொண்டிருந்தாள்.
வானவில்லின் மறைவுகளில் நுழைந்து தானாய் படியாத வாழ்க்கை இராகங்களை தேடி கண்டுபிடிக்க நாள்தோறும் இலக்கியங்களைத் தேடி கண்டுபிடித்து படித்து இலக்கியம் கொண்டு நல்லதொரு அறபுரட்சிகளைக் கொண்டு வந்து அதன் மூலமாக சமூக அவலங்களை ஏற்றத்தாழ்வுகளையும் அதில் உள்ள முரண்பாடுகளையும் சமன் செய்து நன்கு கட்டமைக்கப்பட்ட சமமான சமுதாயம் மலர கனவுகள் கண்டு கொண்டிருப்பவன் தான் இராஜா. நம்மளும் ஏதோ Natural Visuals and backgrounds pictures எடுக்கணும்னு பெருசா DSLR camera வையும் பகுமானமா எடுத்துட்டு வந்துட்டோம். நீ முன்னாடி போயிட்டே இரு; பின்னாடியே வந்து விடுவேன் என்ற ரவிக்கு இன்னும் எஸ்டேட்டில் அக்கவுண்ட்ஸ் பார்க்க வேண்டியது பாக்கி இருக்கோ என்னவோ இன்னும் காணலையே..! இரட்டைவால் குருவிகளையும் வரையாடு கூட்டத்தினையும் தேடி விரைந்த இராஜாவின் கண்களில் தென்பட்டது விறகு சேகரித்துக் கொண்டிருந்த சில மலைகிராமத்துவாசி பெண்கள்தான் கண்ணில் பட்டார்கள். இந்த கூட்டத்தில் அவருக்காளா.? யாரு.. யாரு.. அவ.. என ஒவ்வொருவராக பார்த்தவனை மெல்லிய வண்ண இதழ்களுக்கு மத்தியில் உள்ள பூவைப்போல காண்பவரை அப்படியே மீண்டெழா மயக்கத்தில் ஆழ்த்தும் விழியோரங்களில் கண்மையால் கண்ணை அலங்கரித்திருந்தாள் அவள்.
மெல்ல வீசிய காற்றில் பூக்களின் நறுமணம் கமழும் அதைக்கண்டு வண்டுகள் அதன் பக்கமாக செல்லும்; அதேபோல, தன்னையும் தான் அறியாது கவர்ந்திட அவளும் கண்கொண்டு இக்கானகம் வாழ்வதாக எண்ணினான் இராஜா .
ஒரு வழியாக இருவரும் தயங்கி தயங்கி ஒருவரை ஒருவர் இருமுறை பார்த்து கொண்டே நின்றனர். அதை தொடர்ந்து, இராஜா நான் இந்த ஊருக்கு புதுசு. அப்புறம் என் கையில இருக்கிற இதுதான் கேமரா. இதுல தான் போட்டோ எடுக்கலாம் போட்டோ என்னனு தெரியும் தானே.!
Hello excuse me , madam உங்க பெயர் என்ன? இது என்னப்பா நான் பேசுறது புரியுதா இல்லையா? உன் பெயர் என்ன? என அவன் திரும்பக் கேட்க நன்கு சிரித்து விட்டு என் பெயர் மாங்கா என சொல்லிவிட்டு அவனை மேலும் கீழுமாக பார்த்தாள்.
அப்போது, தான் இம்மலைக்கு தலைவனான செந்தோள் மாடன் மகள் என்பதை சொல்லாமல் விட்டாள் அவள். இவர் கிட்டத்தட்ட ஐந்து மலைகளை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பவன். இவ்வாறு நாளுக்கு நாள் இருவருமே அறியாமல் அரும்பிய காதலைத் தொடர்ந்து, மலையின் தெற்கேயுள்ள உச்சிக்கொம்பு தீர்த்தமலை, அப்புறம் தென் கிழக்கு மலையடிவாரத்தின் கரும்பாறை திட்டு மலையின் நதிகள் பிறக்கும் விண்ணை முட்டும் கண்ணுக்கெட்டாத தொலைவில் உள்ள பெரிய சம்பா நீரோடையின் கரைகளிலும் இவர்கள் தேடியது காணக்கிடைக்காத கடம்ப மரத்தில் அடையும் மரகத புறாக்கள், வரையாட்டுக் குட்டிகள்,.. இந்த வருடம் 12 ஆவது ஆண்டாக இருக்கலாம் என இருப்பினும் அவர்கள் தேடி சென்றது குறிஞ்சி மரத்தை தேட இணைந்த இரு கரங்களில் இருவரின் காதலும் கலந்தே பயணித்தது. மலைக் கிராமத்தின் காவலாளிகளான காத்தவராயன், மாயண்ணன், பலவேசம், இவர்களின் காதலை பற்றி அறிந்து தலைவருக்குத் தெரியப்படுத்தினர்.
மறுநாள் காலையில், அப்புறம் முதலாளி இனிமேலுக்கு இது போல எந்த செய்தியும் வரக்கூடாது . . உங்க மேல உள்ள மரியாதைல தான் நான் உங்கள பாத்து சொல்லிட்டு போலாம்ன்னு வந்திருக்கேன். இதுக்கு அப்புறமும் அந்த மாதிரி ஏதாவது நடந்தால் நல்லா இருக்காது ம். ம்ம். . அப்புறம் பார்த்துக்கோங்க..? என்ற கம்பீரக் குரலில் காப்பியை குடித்து விட்டு சொன்னார் அந்த முறுக்கு மீசை சொந்தக்காரரான செந்தோள் மாடன். அவர் என்னவோ தேயிலை எஸ்டேட்டுக்கு முதலாளியா இருக்கட்டும்.. எஸ்டேட்டுக்குதான் நீங்கள் முதலாளி; எங்களுக்கு இல்லை என்றது அவரின் பார்வை. .
அமைதி மட்டும் உலாவரும் அந்த வேளையில் கதவை தட்டினால் மங்கா மங்கா.. என்னாச்சு மங்கா.. ஏன் இந்த நடு ராத்திரியில தனியா.. அப்படி என்ன அவசரம் எதுவாக இருந்தாலும் பகலில் பேசக்கூடாதா..? கட்டிக் கொண்டு அவளை தன் கைகளால் விளக்கிக் கொண்டே கேட்டான் இராஜா. நம்மள இவங்க வாழவே விட மாட்டாங்க. எனக்கு என்ன தண்டண கிடச்சுகிடச்சுருக்குனு பாருங்க.. என்று தொடையிலும் முதுகிலும் சிவந்த தடிப்புகளை காட்டினாள். பாத்தியா இவங்களுடைய காட்டுமிராண்டித்தனத்தை; ஏன் இப்பிடி இருக்காங்க.. இனியும் விடப்போறதுல, இவ்வளவு தூரம் வந்த பிறகு சும்மா விடமாட்டேன். நீ என்னோட வா நம்ம சென்னைக்கு போகும் நான் உன்ன நல்லா பாத்துப்பேன் என்றான் அப்படியே கண்ணீரைத் துடைத்ததோடு..!
வேண்டாம்டா நான் சொல்றதை கேளு; இவள் இங்க தான் இருக்கானு தெரிஞ்சாலே அவங்க பிரச்சனை பண்ணுவாங்க. நீங்க வேற சும்மா இருங்க அதுக்காக இவள் இந்த நிலைமையில வந்து நிக்குறா. இதை இப்படியே சும்மா விடமுடியுமா? என்ன..? நீ இவள கூட்டிட்டு முதல்ல இந்த மலைய விட்டு போ போய் நல்லபடியாக வாழ வழி பாரு என்றாள் ரேகா.
எஸ்டேட்டை விட்டு அவர்கள் கிளம்பிய உடனே சில மணி நேரத்தில் அந்த எஸ்டேட்டே சூறையாடி கொள்ளை அடிக்கப்பட்ட எதிரிகளின் கூடாரம் போல காட்சி அளித்தது மலையின் தலைவர் அவர்களால் அவர்களின் கொலையும் தான். எஸ்டேட்டின் பின் பகுதியில் ஒரு மைல்கள் தூரத்தில் மூர்த்திராயன் பாறையைத் தாண்டி இலந்தை மரங்களின் நடுவே வெள்ளியினாலான தண்டைகளை அணிந்த இரண்டு கால்கள் விறுவிறுப்பாக ஓட்டம் பிடித்தன.
தென்னங்கீற்று தெம்மாங்கு பாட, கூட்டை விட்டு சென்ற குருவிகள் குடும்பத்தை நாட, சுட்டெரித்தது போதும் என சூரியன் மறையத் தொடங்கும் மாலையில் மலராமல் மடிந்து போக இருக்கும் தங்களின் எதிர்காலம் அறியாதவர்களாக இருந்தார்கள் அந்த சுழல்கள் நிறைந்த ஆற்றில் பரிசலினுள்ளே சூழ்ச்சிகள் நிறைந்த சமூகத்தில் வாழ வழியில்லாத திக்கற்றவர்களாக ராஜாவும் மங்காவும்..!! தரையில் ஒழிந்திருக்கும் பாம்பினை கண்டுபிடித்த இராஜளியைப்போல கையில் இருந்த துப்பாக்கியை எடுத்து குறி வைத்து சுட்டான் அந்தச் சண்டாளன்?.. தண்ணீரிலே ஆரம்பித்த அவர்களின் அன்பு நிறைந்த காதல் அதே தண்ணீரிலேயே முடிவுக்கு வரும் என்று யாரும் அறிந்திருக்கவில்லை அந்த மாலை நேரத்தில்.
ஏற்ற இறக்கங்கள் நிறைந்திருக்கும் இந்த வாழ்வில் ஏற்படும் புதிய மாற்றங்களை புதுப் பாதையில் செல்ல கிடைக்கும் சந்தர்ப்பங்களை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தில் அந்த மக்களும் இல்லை அவர்களை வழிநடத்தும் தலைவனும் இல்லை. என் தாயி.. என் சாமி.. என்று கூப்பிட்ட அவர்கள் அந்த சாமி அதுவாகவே தேடி கொண்ட உறவை விரும்பாதவர்களாக மூடர்களாக இருக்கிறார்கள். அந்த சாமியையும் அழிக்கும் துணிச்சலோடு. கண்மூடித்தனமான மூடநம்பிக்கைகளை பின்பற்றுபவர்களாக இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். சிக்கலான இந்த சமூகக் கட்டமைப்பில் சாதியத்தையும் மதவாதத்தையும் பிரிவினைவாதத்தையும் போற்றுகிற இவர்களின் இந்த செயலுக்கு அவர்கள் கூறும் விளக்கம் கௌரவ கொலையாம்.
#349
தற்போதைய தரவரிசை
50,980
புள்ளிகள்
Reader Points 980
Editor Points : 50,000
21 வாசகர்கள் இந்தக் கதையை ஆதரித்துள்ளார்கள்
ரேட்டிங்கஸ் & விமர்சனங்கள் 4.7 (21 ரேட்டிங்க்ஸ்)
sathishhkrishna
தங்கள் கதை மிகவும் அருமை. 5 star கொடுத்துள்ளேன். படிக்கும் அனைவரும் ரேட்டிங் தருவதில்லை. அதுதான் வருத்தம். எனது கதை "அடுத்த நொடி ஆச்சரியம்" ... தயவு செய்து படித்து ரேட்டிங் தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.. ஒரு எழுத்தாளராக... பெருந்தன்மையுடன்... ரேட்டிங்.. அளித்து.. ஆதரவு தாருங்கள்..
danielkency
makshanthi15
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10புள்ளிகள்
20புள்ளிகள்
30புள்ளிகள்
40புள்ளிகள்
50புள்ளிகள்