திருத்தக்கசெல்வம்

மர்மம்
4.8 out of 5 (11 ரேட்டிங்க்ஸ்)
இந்தக் கதையைப் பகிர

திருத்தக்கசெல்வம்


இரவு டிபன் சப்பாத்தி யை , செய்து முடித்து ஹாட் பாக்ஸில் வைத்து விட்டு , பாமா மணியை பார்த்த போது மணி இரவு

7. 30ஆகி இருந்தது.


எட்டு மணிக்குள் சன்னதியை மூடி விடுவார்களே? இன்னிக்கு லேட்டாயாயிடுச்சே! தன் கணவருக்கு காபி கொடுக்க வேண்டுமே என்று புலம்பியவாறே அவசர அவசரமாக, புடவைமாற்றிக்

கொண்டு, பக்கத்து போர்சன் பத்மாவிடம் வீட்டுசாவியைகொடுத்தவாறே,

"பத்மா, ரவியோ ரம்யாவோ, டியூசன் முடிச்சிட்டு, வந்தாலும் சாவியை கொடுத்துடு "நான் கிளம்பறேன்".

பார்க்கை தாண்டினால், ஊரின் மைய பகுதியில், அருள் பாலித்து கொண்டு இருக்கும் ஸ்ரீ ராஜகோபாலஸ்வாமி சமேத செங்கமல தாயாருடன் சன்னதி.


ஆஞ்சேநேயர் சன்னதியும், சக்கரத்து ஆழ்வார் சன்னதியும் இருப்பதால் சனிக்கிழமை மட்டும் கூட்டம் கொஞ்சம் அதிகமாக காணப்படும்.


பாமாவின் நடையில் இப்போது, வேகம்.. காணப்பட்டது.

தன் நடையின் வேகத்தை மீறி , சொகுசு கார் ஒன்று, தன்னை உரசி கொண்டு போன வேகத்தில், ரிவரஸில் வந்து அவள் பக்கத்தில் நின்றது.


காரிலிருந்து பளிச்சென ஒரு பெண்மணி, இறங்கி வந்து தன்னிடம் , "நீங்க !நீங்க !! நீ ! நீ!! பாமா தானே", கண்களை அகலமாக விரித்து,

புன்னகையுடன் விசாரிக்க,


ஒரு நிமிஷம் பாமாவுக்கு ஏதும் புரியாமல் போனது.


"ஒங்கள எங்கோ பார்த்து பழகின மாதிரி இருக்கு, ஆனா யாருன்னு சட்டென்று ஞாபகம் வரல? "


"என்ன பாமா என்னை தெரியல? "


"நான் தான் ருக்மணி. உன் கிளாஸ்மெட்."


"

"ஒங்க வீட்டிலுருந்து இரண்டு வீடு தள்ளி குடி இருந்தாரே, ராமானுஜம் நாயுடு அவரோட பொண்ணு. ஒன்னோட பெஸ்ட் பிரண்ட்.."


"இப்போ ஞாபகம் வருதா? "


பாமாவுக்கு ஞாபகம் வந்தது.


"ஏய் ருக்கு ! எப்படி இருக்கே? ஆள் அடையாளமே தெரியல. வெரி சாரி ருக்கு. "


"ஆமாம் எப்படி என்னை கண்டு பிடிச்ச? "


"அதுவா இருபது வருடத்துக்கு முன்பு, பாத்த அதே மாதிரி இருக்கே. ஆனா என்னை பாரு இந்த வயசிலே சுகர், கொலஸ்ட்ரால், பி. பி குண்டா வேறு இருக்கேன். மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்குது. "


"டிரைவர் வண்டிய பார்க் பண்ணிட்டு, ஒரு பத்து நிமிஷம் கழிச்சு வாங்க."


" வா பாமா இந்த பார்க்கிலே உக்காந்து பேசுவோம். "


"எவ்வளவு நாள் ஆச்சு? உன்னை பாத்து. "


மன்னார்குடி மேல இரண்டாம் தெருவில் தான் இருவரது குடும்பமும் இருந்தது.


ருக்மணியின் அப்பா ராமானுஜம் நாயுடு வைஷ்ணவ பக்தர். மனித நேயம் உள்ளவர். பக்கத்துல தேவங்குடி கிராமத்திலே பெரிய வீடு. நஞ்சையும் புஞ்சையும் நிறைய.


பந்தலடியில், வெண்ணை கடை. தன் ஒரே பெண் ருக்மணியை ப்ளஸ் 1 மன்னார்குடி தேசீய மேல் நிலை பள்ளியில் சேர்த்து இருந்தார்.

.

பாமாவின் அப்பா பக்கத்து கிராம கோயில் அர்ச்சகர். சொற்ப வருமானம். சிரமப்பட்டு, பாமாவை ப்ளஸ் 1 சேர்த்து இருந்தார்.


படிப்பில் இருவருமே சூர புலி.


பாமா ருக்மணியை பிரிப்பது, சாதாரண விஷயமல்ல என்று சக மாணவர்கள் சொல்லும் அளவிற்கு

ஒரு நெருக்கமான நட்பு அவர்களிடம் இருந்து வந்தது.


அதுவும் ருக்குவின் ஞாபசக்த்தி அபாரம்

.

பாமா ருக்கு இருவரும் நல்ல மார்க் எடுத்து இருந்தாலும் , இரண்டு பேருமே பட்ட படிப்பு படிக்க முடியாமல் போனது.


படிப்பு முடிந்த கையோடு, ருக்குவுக்கு சொந்தத்தில் உள்ள பையனை மணம் முடித்து, மாப்பிள்ளைக்கு, சென்னையில் சொந்த தொழிலும் ஏற்பாடு செய்து கொடுத்து, ஜாகை வைத்தும் கொடுத்து இருந்தார். ராமானுஜ நாயுடு.


"

"என்னை மாதிரி அவசர பட்டு கல்யாணம் பண்ணிக்க வேண்டாம்

நீ, டைப் ரைட்டிங் தமிழ், ஆங்கிலம் கத்துக்கோ, அஞ்சல் வழி கல்வி மூலம் டிகிரி வாங்கு.

நீ சொந்த காலில் நின்னு ஜெயிக்க முயற்சி செய். "


ருக்கு சொல்லிவிட்டு போன பிறகு ஓரிரு மாதங்கள் கடித போக்கு வரத்து தொடர்ந்தது.கால சுயற்சியில், பின்னர் அதுவும் நின்று போனது.


ராமானுஜம் நாயுடுவை, தான் ஒரு முறை சந்தித்த போது, ருக்கு கலிபோர்னியாவில் செட்டில் ஆகி , நல்ல நிலையில் இருக்கிறாள் , என்று சொல்லியிருந்தார்.


காலச்சக்கரம் சுயற்சியில் முதிர் கன்னியான தனக்கு, அப்பா ஒரு கோயில் அர்ச்சகர் மாப்பிள்ளையை, கொண்டு வந்து நிறுத்திய போது, நொறுங்கி போனாள் பாமா.


தான் தோழி ருக்குவை போல் , மாப்பிள்ளை கை நிறைய சம்பளம், வசதியான வீடு , வாழ்க்கை தனக்கு கிடைக்காமல் போனது பற்றி, பல இரவுகள் அழுது இருக்கிறாள்.

ஒரு முறை தன் கணவரிடம், தான் வாக்கப்பட்ட ஊரை விட்டு , சென்னையில் எதாவது ஒரு கோயிலுக்கு அர்ச்சகராக போனால், வருமானம் கிடைக்கும். தானும் வேலைக்கு போயி வந்தால் கூடுதல் வருமானம் கிடைக்கும் என்று வாதிட்ட போது, என் ஊர், என் ராஜகோபாலன் சன்னதியை விட்டு, வர முடியாது என்று தீர்க்கமாக சொல்லிவிட்டு இது மாதிரியான பேச்சு , இனியும் தொடர கூடாது என்றும் கண்டிப்பாக சொன்னதால், பாமா அந்த எண்ணத்தையும் தனக்குள் குழி தோண்டி புதைத்து கொண்டாள்.

.

பாமாவும்ருக்குவும்,

இதோ இருபது வருட இடைவெளிக்கு பிறகு.சந்திப்பு

"பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ "என்பது போல் நீண்ட மௌனம். கண்ணீர் பெருகியது.


உன் கல்யாண இன்விட்டேஷன்.கிடைச்சுது"சாரி பாமா ! வர முடியாத சூழ்நிலை.. "


"ஆமாம் நீ மட்டும் தான் வந்து இருக்கே! ஒனக்கு ஒரு பையன் இருக்கான்னு கேள்விப்பட்டேன்."

"ஒன்னை பத்தி எந்த தகவலும் தெரியாம போச்சு. "


சின்ன விசும்பலும், அழுகையுடன், ருக்கு"ஆமாம் பாமா, அவர் காலமாகி இரண்டு வருஷமாச்சு . ஒரு ஆக்சிடென்டில் போயிட்டார்".


"பையன்தான் அவர்

பிசினஸ் கவனிச்சுக்கிறான். அவனுக்கும் கல்யாணம் பண்ணிட்டேன். கலிபோர்னியாவிலே இருக்கோம். வசதி இருந்து என்ன பிரயோஜனம். நிம்மதி இல்லை." உடம்பிலே வேறே வியாதி."


பாமா அப்போது தான் ருக்குவின் கழுத்தை கவனித்தாள்.


இரட்டைவட சங்கிலி. பத்து பவுனுக்கு மேல் இருக்கும். மத்த இடங்களில் வைரம், தங்கம், பள பள பட்டு புடவை என்று ஒரே ஜொலிப்பு


தன் கழுத்தில் தாலிய தவிர வேறு எந்த தங்கமும் கிடையாது.


கை வளையல்கள் கவரிங்..


தன் கணவர் இறந்தது பற்றி, உதட்டளவில் , வருத்தம் காண்பித்து கொண்டாளே தவிர, அதனால் அவள்

சுத்தமாக

கவலைபட்டதாக

தெரியவில்லை. என்ற எண்ணம் பாமாவிற்கு தோன்றியது.


அடுத்த நிமிஷம் தான் மட்டும் இப்படியே இருக்கிறோமே, தன் ஏழ்மை நிலைமை எப்போதும் , இப்படியே போய் விடுமோ ? இதற்கு விடிவு கிடையாதா? என்று நினைக்க ஆரம்பித்தாள்.


ருக்மணி தான் பேச்சை தொடர்ந்தாள்.


"நீ மன்னார்குடி அடிக்கடி போவியா? நம்ம ஹெட்மாஸ்டர் ஸ்ரீனிவாசன் ரிடயர் ஆகி இருப்பார் . இப்போ எங்கே இருக்கார்? "


"நம்ம தமிழ் வாத்தியார் கரிச் சான்குஞ்சு, செம்பகேசன் என்ன பன்றாங்க? "


"காளிதாஸ் சார், டீ. வி ஆர் சார், எப்படி இருக்காங்க? "


"வெண்ணைதாழி

உத்சவம் போது, பெருமாளை சேவிக்க போன, நம்ம இரண்டு பேர் மேலையும், வெண்ணை அடிச்ச விசு ,எப்படி இருக்கான்?"


"கரிச்சா ன் குஞ்சு சார் தமிழ் பாடம் நடத்தும் போது, பாடத்தை கவனிக்க விடாமல், சந்துரு" அம்போ ஆயிரம் ரூபாய் " கதையை சொல்வானே அவன் எப்படி இருக்கான்? "


" எப்போதும் ஜோக் சொல்லி நம்ம வகுப்பை கலகலப்பா வைப்பானே "கோண்டு " அவன் எப்படி இருக்கான்?


ஸ்கூல் கடைசி நாள் பார்ட்டி எல்லாம் முடிந்த பிறகு, நம்ம சீனு ரமா கிட்ட, நம்ம தெரு முனைகிட்ட வந்த பிறகு, நமக்கு எல்லாம் தெரிய கூடாதுன்னு நினைச்சு, லவ் ப்ரொபஸல், பண்ண போயீ , அதுக்கு அச்சாரமா, கெமிஸ்ட்ரி சிம்பல் மூலமா ஒரு பொட்டாசியம், ஒரு ஐயோடின், இரண்டு ஸல்பர் கொடுன்னு, ரமா கிட்ட கேட்க போயி , அவ நம் எல்லோர் முன்னாடி, சீனுவை செருப்பால அடிச்சு கேவல படுத்தி, அழுகையும் ஓட்டமுமாக போனாளே? அவ எப்படி இருக்கா?


" சீனு எப்படி இருக்கான்? "


"வாவ், ஒரே மூச்சில் இவ்வளவு பேரையும், ஞாபகம் வைச்சுண்டு, எல்லோரையும் பத்தி விசாரிக்கிறேயே, ருக்கு. "


"யூ ஆர் ரியலி கிரேட். "


"இல்லை பாமா, பழைய நினைவுகளை, அதுவும் பள்ளிக்கூடம் அனுபவங்கள் , மாணவ பருவ வாழ்க்கை, இதையெல்லாம் நினைச்சு நினைச்சு பாத்தா சுகம் தான்.


"சுமையும் இல்லாம, சிறையும் இல்லாம, சுதந்தரமா, ஒரு பட்டாம்பூச்சி மாதிரி , படிக்கற இடம் தான் பள்ளிக்கூடம். அங்கே அறிவோடு மனசு சேர்ந்து படிக்கற இடம். "


"பழைய நினைவுகள் வரும் போதெல்லாம் உன்னை பத்தி, நம்ம பிரண்ட்ஸ் பத்தி ஞாபகம் வரும். அந்த சந்தோசம் இரண்டு நாளுக்கு நீடிக்கும். "


"நம்ம தமிழ் வாத்தியார் கரிச்சான் குஞ்சு

இலக்கிய வட்டத்தில் பெரும் புகழ் பெற்றவராம். நிறைய சிறுகதைகள் எழுதி உள்ளாராம்.


"நீ சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை ருக்கு.


"எனக்கும் அவரை பத்தி லேட்டா தான் தெரிய வந்தது. வகுப்பில் அவர் பாடம் நடத்தும் போது கவனிக்காமால் ,

சந்துரு சொன்ன "அம்போ ஆயிரம் ரூபாய் "கதையை கேட்டுருக்கோமே என நினைக்கும் போது மனசு கணக்கிறது


"நீ அமெரிக்காவிலே இருக்கே, நம்ம கிளாஸ்மேட் களை பத்தி, விசாரிக்க முடியலேன்னு வருத்தமா , பீல் பண்ற"


"ஆனா நான் பக்கத்துல இருந்தும் அவங்களை பத்தி விசாரிக்க முடியலன்னு எனக்கும் நிறைய குறை இருந்துச்சு."



இந்தவருஷம்

வெண்ணைத்தாழி மண்டபத்தில் நம்ம ரமாவையையும் சீனுவையும் ஒண்ணா பார்த்தேன்.


எனக்கு ஆச்சர்யம்.. ரமா தான், அன்னிக்கு சீனுவை, அப்படி செருப்பால் அடிச்சது தப்பு ன்னு , பீல் பண்ணி சீனுவின் , உண்மையான லவ் வை புரிஞ்சுகிட்டு, பின்னாடி பெற்றோர் சம்மதம் வாங்கி சீனுவை கல்யாணம் பண்ணிகிட்டாளாம். "


"இப்போ இரண்டு பேருமே ஸ்கூல் டீச்சர்ஸ்".


மத்த பிரண்ட்ஸ் பத்தி விசாரிச்சேன்.

"கிளாஸல எப்போதும் ஜோக் சொல்லி கலகலப்பா வைச்சுப்பானே நம்ம கோண்டு ஒரு பிரைவேட் பேங்க்ல் வேலை பார்த்து வந்தவன் திடிர்னு ஹார்ட் அட்டாக் வந்து அல்பாயுசுல

போயிட்டானாம். "


ரமா இப்படி சொன்னதும் எனக்கு மனசு பூரா சோகமாயிடுச்சு.

"ம்ம்ம் நம்ம மேல வெண்ணை அடிச்ச விசு, , டெல்லி யிலே, இந்தியன் வங்கி யிலே ஆஃபீஸ்ர்


. "அம்போ ஆயிரம் ரூபாய் " கதை சொன்ன சந்துரு , கவுசிக் என்ற பெயர்ல டீ வி சீரியல் டைரக்டர் ஆக இருக்கானாம்" "


ஹெட் மாஸ்டர் ஸ்ரீனிவாசன்

செம்பகேசன் சார் . காளிதாஸ் சார்இறந்து போயிட்டாங்களாம்."


" டிவிஆர் சார் சென்னையில் இருக்காராம்.


"சந்தோஷமான சில செய்திகள், வருத்தம் தரும் சில செய்திகள்

சொல்லியிருக்கே பாமா".


"எனக்கொரு யோசனை 96 படம் மாதிரி நம் கிளாஸ்மேட் எல்லோருடைய போன் நம்பர் ரமா, சீனு மூலம் வாங்கி வாட்சப்பில குரூப் சாட் பண்ணுவோம். கொஞ்சம் நிம்மதி கிடைக்கும்"


"அடுத்த தடவை சென்னை வரும் போது ஒரு ஹோட்டலில் மீட்டிங் ஏற்பாடு பண்ணு. எல்லா செலவும் நான் பண்றேன"


"ஊர் சமாசாரம், நண்பர்கள் பத்தி, பேசிகிட்டு இருந்ததனால், உன்னை பத்தி கேக்கவே இல்லை. "


"ஆமாம், நீ எங்கே இந்த ஊரிலே ? குடும்பம் எல்லாம் எப்படி? "


"எனக்கு ஒரு பையன் ரவின்னு பேரு. ஒரு பொண்ணு ரம்யான்னு பேரு "


அவர் இங்கே தான் என சொல்ல வந்த போது, டிரைவர், குறுக்கிட்டு, "அம்மா மணி 8 ஆயிடுச்சு. கோயில் பூட்டியாச்சு. "


"இன்னிக்கு ராத்திரி காஞ்சிபுரம் போகணும்".


"டிரைவர் ஒரு பத்து நிமிஷம் பொறுங்க.! நாம் கிளம்பிடலாம். கோயில் மூடினா, பரவாயில்லை. தோழி சந்திப்பு தான் முக்கியம்."


"இவ்வளவு தூரம் வந்துட்டு என் வீட்டுக்கு வராமல் போன எப்படி ருக்கு? வந்து டிபன் சாப்பிட்டு போ ருக்கு."


"இல்லை பாமா

இப்பவே டயமாச்சு .. பையன் சம்மந்தி வீட்டில இருக்கான். நாளைக்கு 2மணிக்கு பிளையிட். "


அவனுக்கு இரண்டு மாசம் முன்பு கல்யாணம் ஆச்சுன்னு சொன்னேன் இல்லையா. ஒப்பிலியப்பனுக்கு வேண்டி கிட்டேன். அவருக்கு தங்ககாசு மாலை 10பவுன் , தாயாருக்கு வைர அட்டிகை சாத்திட்டு, இன்னிக்கு கல்யாண உத்ஸவம் செஞ்சுட்டு, 100 பேருக்கு அன்னதானம் பண்ணிட்டு வந்தேன்.


"வருகிற வழியில்

சிறுபுலியுர் கோயில் கும்பபாபிஷேகதுக்கு 2லட்சம் கொடுத்துட்டு வரேன்"

என்னதான் நெருங்கிய தோழியாக இருந்தாலும், படிப்பை தவிர மற்ற விஷயங்களில் முரண்பாடு, தர்க்கம் இருவருக்கும் அடிக்கடி வந்து போகும்.


பணக்கார தோரணையை, சிறு வயதிலிருந்தே, தம்பட்டம் போட்டு காண்பிக்கும் பழக்கம் உண்டு. அந்த பழக்கம் இப்போதும் உள்ளதே.


நான் எல்லாவற்றையும் உனக்கு கொடுத்து விடுவேன் என்று சொல்கிறார்கள். ஆனால் இதுஎன்னுடையது

என்னுடையது என்று சொல்வதை மட்டும் விடுவதில்லை".


"வீண் பெருமை பேசி, தம்பட்டம் அடித்து கொள்பவர்கள் பக்தி , கடவுளிடம் கொண்டு போய் சேர்க்காது. தூய எண்ணமும், உண்மையான பக்தி மட்டுமே, கடவுளிடம் நம்மை கொண்டு சேர்க்கும். மற்றது யாவும் பெருமையே. கடவுளுக்கு பெரியதாக எதையும் செய்ய வேண்டியதில்லை.


தூய பக்தி இருக்கும் இடத்தில் கேவலமான நான் செய்தேன் என்னும் மமதை இருக்காது என்று கணவர் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது பாமாவிற்கு.


"ஒன்னை ஒன்னு கேக்கணும்! ருக்கு கோவிச்சுக்க மாட்டேயே? "


"நீ இது மாதிரி பெரிய கோவிலுக்கு தான் டோனட் செய்வியா? சின்ன சின்ன கோயிலுக்கு டொனேஷன் கொடுக்க மாட்டியா?


" முக்காவாசி கிராம கோயிலுக்கு ஒரு வேளை பூஜை கூட நடக்கிறது கூட சிரமமாக இருக்கு" தெரியு மா .?


"என்ன அப்படி சொல்லிட்டே? நீ சொல்ற மாதிரி இது மாதிரி சின்ன சின்ன கோயிலுக்கு, பத்தாயிரம், இருபதாயிரம் கொடுக்கலாம். ஆனா அது உண்மையா பெருமாளுக்கு போய் சேருதா? என்ற சந்தேகம் ஏற்பட்டுருச்சு பாமா? "


ருக்கு இப்படி சொன்னதும் அதிர்ச்சியானாள் பாமா.


ருக்கு தொடர்ந்து பேசினாள்." இரண்டு வருஷம் முன்பு , இந்த வழியா வந்த போது , பக்கத்து ஊர் பெருமாளை சேவிச்சுட்டு, கார்லே உக்காந்து இருக்கும் போது, அர்ச்சகர் தன் கோயிலுக்கு வெள்ளி தட்டு வட்டில் செய்யணும்ன்னு சொன்னார். "


"நான் யோசிக்காமல், நாற்பதாயிரம் கொடுத்தேன். போன் நம்பர் அட்ரஸ் கேட்டார். கிளம்பற அவசரத்துல பேரை மட்டும் சொல்லிட்டு கிளம்பி போயிட்டேன்"


"நேத்து அந்த கோயிலுக்கு போய் விசாரித்த போது, அந்த அர்ச்சகர் ஊரை விட்டு போயிட்டார். ஏன் அவர் கிட்ட கொடுத்துட்டு போனீங்கன்னு ? இப்ப இருக்கிற அர்ச்சகர் சொன்னார். "


இப்படி ருக்மணி சொன்னதும் பாமாவிற்கு மனசு சங்கடப்பட்டது.


"சரி விடு பாமா இதை போயீ பெரிசா எடுத்துண்டு. விட்டு தள்ளு.உன் போன் நம்பர் கொடு. நான் ஊர் போனதும் பேசறேன்".

'இந்தா பணம் குழந்தைகளுக்கு ஏதாச்சும் வாங்கி கொடு. "மறுத்த பாமாவிடம் கையில் ரூபாய் 2000 நோட்டை வலுக்கட்டாயமாக திணித்து விட்டு, காரில் கிளம்பி போயிருந்தாள் ருக்மணி.


நீண்ட நாளைக்கு பிறகு, தோழியை சந்தித து, சந்தோசத்தை கொடுத்தாலும், தான் இப்படியே இருந்து விடுவோமோ? என்ற அச்சம் மனதில் வந்து போனது.


டியூசன் முடிந்து வந்து இருந்த ரவியும் ரம்யாவும், "அம்மா நாங்க இரண்டு பேரும் சாப்பிட்டாச்சு." என்று சொல்லிவிட்டு படுக்க போயிருந்தார்கள்.


இரவு 0830 மணி கண்ணன் பட்டாச்சார்யார், உள்ளே வந்தவர், ," ஏன் பாமா கோயிலுக்கு வரல. உடம்பு முடியலையா? "


"நடந்ததை சொன்னாள். ஒங்களுக்கு ஏன் இந்த கெட்ட பேர்? அவமானம்? ஏன் இப்படி செஞ்சிங்க? "


"இத பாரு பாமா இரண்டு வருஷம் முன்பு பக்கத்து ஊர் ராமன் அர்ச்சகர், தன் பெண் கல்யாண விஷயமாக, வெளியூர் போகவேண்டி

இருப்பதால், ஒரு வாரம் அவர் கோயிலுக்கும், கைங்கர்யம் செய்யும் படி கெஞ்சினார். என்கிற விசயம் உனக்கும் தெரியும்


அப்படிப்பட்ட சூழ்நிலையில், கோயிலுக்கு வந்த பெண்மணிக்கு, சேவை செஞ்சு வைச்சேன். அவங்க காரில் உக்காந்து இருக்கும் போது, நான் நம்ம கோயிலுக்கு வெள்ளி வட்டில்கள், படிகங்கள் பண்ணனும் ஒங்களை மாதிரி பணக்கார மனுஷா, உதவி பண்ணினா, புண்ணியமா போகும்ன்னு சொன்னேன்."


"போற அவசரத்துல 10000/ கட்டு நாலு கொடுத்துட்டு போனாங்க. அட்ரஸ் போன் நம்பர் கேட்டதற்கு, பேர் மட்டும் சொல்லிட்டு வேகமாக போயிட்டாங்க. "


எங்கிட்ட அவங்க பத்தி எந்த விபரமும் இல்லை.


நேத்து உன் தோழி அந்த ஊர்ல விசாரிக்கும் போது, இப்ப இருக்கிற அர்ச்சகர், ராமன் அர்ச்சகர் பெண் கல்யாண விஷயத்தில் அவமானப்பட்டு, ஊரை விட்டு போனதை சொல்லி இருக்கார்.


"உன் தோழி கோயிலை மாத்தி குழப்பம் கொண்டுள்ளார். "


"இன்னிக்கு உன்னோடு அவங்களையும் கோயிலுக்கு கூட்டிட்டு வந்து இருந்தா, இந்த குழப்பம் தீர்ந்து இருக்கும். அதற்கு வாய்ப்பு இல்லாம போச்சு."


பாமாவிடம்,விசும்பலும், அழுகையும், தீவிரமாக காணப்பட்டது.


"இப்ப ஏன் அழற? "


"ஒண்ணுமில்ல "


"நீண்ட நாளைக்கு பிறகு உன் தோழி யை சந்திச்ச சந்தோசத்தை விட, அவள் மாதிரி நம்ம இல்லையே, என்கிற ஆழ் மனது ஏக்கம் இன்னும் உன்கிட்ட இருக்கு பாமா..

வாழ்க்கை சில சமயம் நாம் விரும்புவதை தருவதில்லை. காரணம் நீ அதற்கு தகுதி யானவள் அல்ல என்று கடவுள் நினைத்து அதை விட சிறந்த ஒன்றுக்கு தகுதி யானவளாக கூட நினைத்து இருக்கலாம்."


"சோகமும் ,கவலையும், கோபமும் பொறாமையும் நன்மை தரும் உணர்வுகள் அல்ல "


"தெரியாமலா சொன்னான் ஒரு தத்துவ ஞானி.


"இருக்கிற நாளை சிரித்து மகிழ்ச்சி யாக்கி வாழ்ந்து விடு " என்று.


"நாமே ஏன் ஏழையா பிறந்தோம் ருக்மணி மாதிரி இருக்க முடியாதா? என்று உன் உள் மனதில் ஆழமான வடு இருக்கு."

"கடவுளுக்கு தெரியும் எப்படி எந்த சூழ்நிலையில் வசதியையும், பணத்தை யும், கொடுக்க வேண்டுமென்று."


தினமும் எந்த பிரதி பலன் எதிர்பார்க்கமா, பெருமாளுக்கு

கைக ங்கர்யம் செய்யும், எல்லா அர்ச்சகர்களும் ஏழை தான். ஆனால் அவங்க கிட்ட பணம் கிடையாது.


"எவ்வளவு பணக்காரங்களுக்கு பெருமாளை தொட்டு அபிஷேகம் பண்ணும் பாக்யம் கிடைக்கும்.? "

உண்மையில் நாம் தான் பணக்காரர்கள்.


"இன்னொரு விஷயம் சொல்றேன் கேட்டுக்கோ. "


"ஒரு செல்வந்தர்க்கு நீண்ட நாள் கழித்து, பிறந்த ஆண் குழந்தைக்கு, முடி இறக்கி காது குத்துவதற்கு முன், அந்த கோயிலின் குளத்தில் குழந்தை தவறி விழ போகும் போது , டிரைவர் அந்த குழந்தையை காப்பாத்தி, கரைக்கு கொண்டு வந்தார்.


"என் குல கொழுந்து , அதை காப்பாத்தட்டே

இந்தா பிளாங் செக் ரூபாய் 1 லட்சம் வரைக்கும் ,

எடுத்துக்கலாம்ன்னு செக் கொடுத்தார். முதலில் மறுத்த டிரைவர் முதலாளி கட்டாயப்படுத்தி கொடுத்த பின் , வாங்கி சட்டை பையில் வைத்து கொண்டு, அந்த பணத்திற்கு என்னன்ன செலவு பண்ணலாம், என்ற சிந்தனையில் காரை ஓட்டி வர, குறுக்கே ஒரு பிச்சைக்காரன் மீது இடிக்க, டிரைவர் பதறி போனார்


" ஐயா பெரியவரே ! கவனம் சிதறி ஒங்க மேல இடிச்சுட்டேன். என்னை மன்னிச்சுடுங்க. ஏதும் காயம் பட்டுச்சா? "


"இந்தாங்க எங்க முதலாளி கொடுத்த செக். இதுல ரூபாய் 1லட்சம் வரைக்கும் எடுத்துக்கலாம். "


"டிரைவர் தம்பி எனக்கு லேசான காயம்தான். இந்த செக் நீயே வச்சுக்கோ. ஆஸ்பத்திரிக்கு போயி ஊசி போட ரூபாய் 100 போதும். "


"இதுல யார் ஒசத்தி? செல்வந்தரா,? டிரைவரா? பிச்சைக்காரனா? "


இதற்கான பதிலும் நானே சொல்றேன்

.

குட் பெட்டர், பெஸ்ட்.. செல்வந்தர் செயல் குட், டிரைவர் செயல் பெட்டர், ஆனால் பிச்சைக்காரன் செயல் பெஸ்ட்.. ஏன் சொல்லு. அவன் தன் தேவைக்கு மட்டும் தான் பணம் வேணும்ன்னு, தன் மனதிருப்தியுடன் கேட்டான்.


"இருக்கிறதை வைச்சு நிம்மதியா வாழனும் . அவன் தான் ஒசத்தி."


"இத பாரு பாமா இன்னிக்கு மட்டுமல்ல எந்த நாளும் இந்த மனக்குறை வரக்கூடாது. "


"நான் சொல்லும் ஆறுதல் என்பது உன் காயத்துக்கு தற்காலிக தீர்வு. தான் "


"மாறுதல் என்பது உன் காயத்துக்கு நிரந்தர தீர்வு. "


" உனக்குள் மாற்றம் வரணும் அதை நீ புரிஞ்சிக்க. "


"இன்னொன்னு என்ன கேட்டே ? "


உன் தோழி மாதிரி இருக்கமாட்டே. இருக்கவும் வேண்டாம்."


"நமக்கு செல்வம்தானே வேணும்ன்னு கேட்டே. "


"ஆமாம் "


"இந்தா "


வலது கையில் ஏதோ வைத்து மூடினார் கண்ணன் அர்ச்சகர்.


விசும்பலை நிறுத்தி விட்டு, தன் கையை திறந்து பார்த்தாள் பாமா.


அங்கே

செங்கமலதாயாருக்கு அன்று வெள்ளிக்கிழமை சாத்திய மஞ்சள் காப்பு.


இது தான் திருத்தக்கசெல்வம்.


கண்ணன் அர்ச்சகர் காலடியில் சரிந்து அவரை நமஸ்காரம் செய்தாள் பாமா.

மொத்த வார்த்தைகள் 1973.


ஆனந்த்ஶ்ரீநிவாசன்


.

1

நீங்கள் விரும்பும் கதைகள்

X
Please Wait ...