JUNE 10th - JULY 10th
திகில் கதை.
யாரது கொஞ்சம் நில்லு.
»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»
ஒவ்வொருவராக ஐந்து பேர் கொலை செய்யப்பட்டு இருக்கிறாங்க
போலீஸ் என்ன செய்கிறது?
ஒவ்வொரு கொலையின் பின்னால் யாரு இருக்கிறார்கள்?
இந்த கொலைகள் எப்படி திட்டமிட்டு நடக்கிறது?
சென்னையில் இந்த கொலை வழக்கை எடுத்து நடத்த வந்த அதிகாரி என்ன ஆனார்?
பேய் இருக்கா?
இறந்து போன மஞ்சுபாய்யின் ஆத்மாவும் ரகுவரன் ஆத்மாவும் சேர்ந்து கொலை செய்தவர்கள் எல்லோரையும் ஒருவர் ஒருவராக பழி வாங்குகிறதா?
முன்னேஸ்வரன் என்றும் ஐயனார் என்றும் சுடலை மாடன் என்றும் பேசப்படும் காவல் தெய்வம் உண்மையில் ஒவ்வொரு அம்மாவாசை பௌர்ணமிகும் தன் எல்லையில் வேட்டைக்கு போகிறதா?
காட்டு பங்களாவில் என்ன நடக்கிறது?
பல கேள்விகள்...
இந்த கேள்விகளுக்கு விடை தான் என்ன.
டேய் சீக்கிரம் டா இப்போ இந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு ஸ்பெஷல் ஆபீஸ்சர் வருவதாக பேச்சு அடிப்படுகிறது.
ஐ.ஜி. தேவாரம் வருவதாக மெசேஜ் வந்து இருக்கு.
போலீஸ்க்கு புர் தான்
தேவாரம் லேசுப் பட்டவர் இல்லை.
ஜோலார்பேட்டையில் முதல் முதலில் போஸ்டிங் வாங்கி சென்று தேசிய தீவிரத வாதிகளை, நக்க்ஷலைட்டிகளை, தீவிர வாதிகளை சுற்றி வளைத்து அடக்கி ஒடுக்கி பெயர் எடுத்தவர்.
இதியாவிலேயே நக்ஷலைட்டிகளை பிடித்து.
எண் கௌண்டர் செய்து நாட்டை தீவிர வாதிகளிடமிருந்து காப்பாற்றி மெடல்கள், பதக்கங்கள் வாங்கியவர்.
அக்கியுஸ்ட்டுக்கள் அவரது மீசைப் பார்த்தலே போதும் ஒண்ணுக்கு போய் விடுவார்கலாம்.
அவர் முட்டைக் கண்களை உருட்டி ஒரு பார்வை பார்த்தலே போதும். பயந்து போய் உண்மையை கக்கி விடுவார்கள் என்று போலீஸ் வட்டாரங்கள் பேசிக்கொள்கிறது.
முதலில் வேலூர் மாவட்டமாக இருந்த பொன்னேரி என்ற கிராமத்தில் தான் நக்ஸலைட்டுக்கள் பதுங்கி இருக்க அவர்களின் முகாமிற்கே சென்று தைரியமாக கலம் இறங்கி சாதனை படைத்தவர்.
எஸ். பி.முத்துரங்கம் மீது ஏகப்பட்ட குற்ற சாட்டு.
அவருக்கு இந்த ஊரில் நல்லப் பெயர் கிடையாது.
அந்த டுபாகூர் முருகன் எஸ். ஐ. நரியைப் பார்த்து நாய் சூடு போட்டுக் கொண்ட கணக்கு எஸ். பி. யே லஞ்சம் வாங்கும் போது ஆப் ட்ரால் ஒரு எஸ். ஐ. லஞ்சம் வாங்க கூடாதா என்ன?
அந்த பொம்பள இன்ஸ்பெக்டர் ராணி மேரி மட்டும் எந்த சிக்கலிலும் மாட்ட வில்லை.
ஏமாத்குமார் ரெகாட் கிளார்க் சொல்லவது உண்மை என்று எடுத்தக்கூடாது பொய் என்று சொல்லி விட்டு விடவும் முடியாது.
அந்த அசிஸ்ட்டென்ட் குர்முல்லா. வாட்ச் மேன் ராமன் யாரும் சரியாக இல்லை.
டி. எஸ். பி பார்வதி. வந்த புதுசில் பத்திரை மாற்று தங்கம் மாதிரி இருந்த அந்த அம்மாவையும் கெடுத்து விட்டான் அந்த கோமாளி குப்பன் எஸ். பி.
ஊரே போலீஸ் என்றால் கொஞ்சம் கூட மரியாதை இல்லாமல் போய் விட்டது.
எதிரில் பார்த்தால் தான் மரியாதை அவர்களுக்கு.
கொஞ்சம் கண் பார்வையில் இருந்து மறைந்தால் போதும்.
ஒரு நாய்க்கு இருக்கும் மரியாதை கூட
அவர்களுக்கு கிடையாது.
மேலே இவங்களால் போலீஸ்க்கே கெட்டப் பெயர்.
ஹெலோ.... ஹெலோ....
போனில் ராயகோட்டை சின்ன ஜமீன் சங்கரன்பிள்ளையை யாரோ மர்டர் செய்து விட்டார்கள் என்ற விஷயம் ஏடு ஏகாம்பரத்துக்கு போனில் சொல்லி விட்டு போன் வைத்தது யாரு என்று சொல்ல வில்லை
சார்... சார்... என்று இந்த மர்டர் கேஸ் விஷயம் எல்லோருக்கும் சொல்லி விட்டான்.
விஷயம் போனிலும் மெசேஜ் என்று பறந்துக் கொண்டு இருந்தது.
போலீஸ் அரண்டு போய் நடுங்கி கொண்டு இருந்தார்கள்.
மோதிலால் சேட்டுக்கு பேதி அடிக்க ஆரம்பித்து விட்டது
ஹரே ராம்... ஹரே ராம்.. இப்போ அடுத்த குறி நம்மளுக்கு தான் இருக்கும்.
கியா போலோ ஷாப் ஜெயக்குமார் ஷாப்.
நம்பில்க்கு காப்பாத்துங்க சார்..
எவ்ளோ பணம் என்றாலும் நம்பல் நிம்பளுக்கு சேட் கொடுக்கறான்.
சேட்ஜி நீங்கள் ஒன்னும் பயப்பட வேண்டாம்.
உங்களுக்கு பாதுகாப்பு போட சொல்லலாம். நீங்கள் பத்து பேரை காவலுக்கு போடுங்க. எண்ணி பத்து நாட்களுக்குள் போலீஸ் கொலைக் காரனை கண்டு பிடித்து விடுவார்கள்.
இல்லை வக்கீல் சார் எனக்கு என்னவோ ரொம்ப ரொம்ப பயமா இருக்கு.
நான் ரொம்ப தப்பு பண்ணிட்டேன். அந்த சைத்தான் நம்பில்க்கு வழியில் குறுக்கே புகுந்தான்
அநியாயமா என் பொண்ணு மஞ்சுபாயை இழந்து விட்டேன்..
சேட்டு வாழ்க்கையில் முதல் முறையாக அழ ஆரம்பித்து விட்டான்.
உயிரின் பயம் அவனுக்கு வந்து விட்டது.
மேரா பி பி மீராஜி.... முஞ்சுக்கு டர் லகுதா ஹை..
சரிங்க வக்கீல் சாப் கோர்ட்டில் நம்பிலுக்கு பயம் இல்லை. பேய்கிட்டே
கூட பயம் இல்லை.
இப்போ இந்த கொலை செய்ற ஆளுங்க கிட்டே இருந்து தான் தப்பிக்க வேண்டும்.
இந்த கொலை எதுக்கு செய்யறாங்க?
யாரு செய்யறாங்க?
B2. போலீஸ் ஸ்டேஷன் அதிர்ச்சி அடைந்துக் கொண்டு இருந்தது
போலீஸ் ஏடும் எஸ் ஐ, இன்ஸ்பெக்டர், எஸ். பி முதல் டி. எஸ் பி ஆல் உமேன் போலீஸ் டி. எஸ். பி. முதல் எல்லோரும் பயந்து நடுங்கி கொண்டு இருந்தார்கள்.
டி. ஐ. ஜி. தேவாரம் வரப் போறார் என்று கேள்விபட்டதும் ராயகோட்டையே கலக்கிக் கொண்டு இருந்தது.
ஊரே பயந்துக் கொண்டு இருந்தது.
அடுத்து என்ன நடக்கும். என்ன நடக்கும் யாரு கொலை செய்யப்படுவார்கள் என்ற அச்சத்தில் ஊரே அல்லல் பட்டுக் கொண்டு இருந்தது.
பேப்பரில் கிழி கிழி என்று கிழித்து எழுதி செய்திகள் போட்டுக் கொண்டு இருந்தார்கள்.
அது மட்டும் இல்லை நியூஸ் சேனலில் போட்டு பக்கம் பக்கமாக தள்ளிக்கொண்டு இருந்தது.
இது மக்கள் மத்தியில் அதிகமாக ராயகோட்டை கிராமத்தைப் பற்றி வெளிச்சம் போட்டு காட்டிக் கொண்டு இருந்தார்கள்.
B2.போலீஸ் ஸ்டேஷனில். பட்டியல் போட்டு நோட்டீஸ் போர்டில் எழுதி ஒட்டி இருந்தது.
கொலையாளிகள் பற்றி விவரம் தந்தாளோ அல்லது சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் யாராவது தெரிந்தால் அவர்கள் போலீஸ்க்கு தகவல் கொடுக்கலாம். அப்படி கொடுப்பவர்கள் பெயர் விவரம் ரகசியமாக வைக்கப்படும் என்று போலீஸ் அறிவிப்பு போலீஸ் அறிவித்து இருந்தார்கள்.
போலீஸ் ஜீப்பிள் விளம்பரம், ஆட்டோ வைத்து விளம்பரம், பிட் நோட்டீஸ் போலீஸ் தரப்பில் போட்டு இருந்தார்கள்.
சர்... சர்....என்று
போலீஸ் ஜீப், ஆம்புலன்ஸ் வண்டி சின்ன ஜமீன் வீட்டுக்கு பறந்துக் கொண்டு இருந்தது.
அங்கு கூட்டம் அதிகமாக இல்லை. அதற்கு காரணம்.
போலீஸ் நம்மை பிடித்துக் கொள்வார்கள் என்ற பயம்..
அதோடு கொலை நடந்த வீட்டில் இருந்தால் கொலையாளிகள் பார்த்து எதாவது பிரச்சனை வரும் என்ற பயம்.
ஜீப் போய் வாசற்ப் படியில் நின்றதோ இல்லையோ அங்கு இருந்தவர்கள் கூட நழுவி போய் விட்டார்கள்.
ராதா மட்டும் கொலை நடந்த ரூமுக்கு வெளியே நின்று அழுதுக் கொண்டு இருந்தாள்.
ராதாவின் அம்மா, அப்பா, சொந்தம் பந்தம் எல்லாம் வெளியே ஹாலில் உட்கார்ந்து இருந்தார்கள்.
போலீஸ் ஜீப் வந்தவுடன் உட்கார்ந்து இருந்தவர்கள். எல்லோரும் எழுந்து நின்று விட்டார்கள்.
திப்பு திப்பு என்று போலீஸ்காரர்கள் பத்துக்கும் அதிகமானவர்கள் இறங்கி உள்ளே போக.
மீடியா காரர்கள். கேமராவோடு முன்னாடி யும் பின்னாடியும் கேமராவை மேலே தூக்கி பிடித்துக் கொண்டு போய்க் கொண்டு இருந்தார்கள்.நிருபர்கள், செய்தியாளர்கள் என்று கூட்டம் தான் அங்கு அதிகமாக இருந்தது.
எஸ். பி முதுரங்கம். டி. எஸ் பி ஹேமாவதி, எஸ் ஐ. முருகன் என்று எல்லோரும் அங்கே பைல் கட்டு எடுத்துக் கொண்டு போக.
அழுத கையோடு நின்று இருந்த ராதாவை எல்லோரும் சுற்றி நின்றுக் கொண்டு இருக்க.
எஸ். பி. முத்துரங்கம் விசாரணை தொடங்கினார்.
உன் பெயர் என்னம்மா?
ராதா.
இவர்
என் கணவர் ..
பெயர். சங்கரன்பிள்ளை. எல்லோரும் சின்ன ஜமீன் என்று கூப்பிடுவார்கள்.
பெட் ருமில் நீங்கள் இருவரும் தானே இருந்தீர்கள்.
ஆமா சார்.
எப்போ சாப்பிட்டிங்க?.
எப்போ தூங்க போனீங்க?
இரவு பத்து மணிக்கு தான் அவர் தூங்க வந்தார்..
ஹாலில் டிவி பார்த்துக் கொண்டு இருந்தார்.
நான் கொஞ்சம் சீக்கிரமாகவே வந்து தூங்கி விட்டேன்.. நெஞ்சு வலி என்பதால். மாத்திரைப் போட்டுகொண்டு படுத்து விட்டேன். அவர் தூங்க வரும் போது மணி பத்து இருக்கும்.
மாத்திரைப் போட்டதால் எனக்கு நன்றாக தூக்கம் வந்து விட்டது. நான் நன்றாக தூங்கி விட்டேன். என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது .காலையில் பால்காரர் வீரா வந்து காலிங் பேல் அடிக்கவே நான் முழிப்பு வந்து எழுந்து போய் கதவை திறந்தேன்.
அப்போது வீட்டுக்கு வேலை செய்யும் முனியம்மா வந்து பால் வாங்கிக் கொண்டு போய் காபி போட்டு காபி கொடுக்க ரூமுக்கு போய் இருக்கு. அப்போ அவர் போர்வை எல்லாம் ரத்தமாய் இருப்பது பார்த்து கத்திக்கொண்டு வெளியே ஓடி வர நானும் பாத் ரூம் போய் இருந்தவள் கூச்சல் கேட்டு வந்து பார்த்தேன். போர்வை முழுவதும் ரத்தம் ஒரே ரத்தம்.
நான் போர்வையை விலக்கிப் பார்த்தேன்.
அங்கே... ராதா தேம்பி தேம்பி அழ ஆரம்பித்து விட்டாள்.
சரி... சரி.....
மேலே சொல்லுமா..
அவ்வளவு தான் எனக்கு தெரியும். சார்.
சரி உங்க வீட்டுக்கு வந்த வேலைக்காரி.
பெயர் என்னவோ சொன்னியே..
ஆமா சார்.. முனியம்மா...
ஆமா அவங்க வந்து இருக்காங்களா?.
வந்து இருக்காங்க சார்...
சரி அவங்களை கூப்பிடுமா??
இதோ இங்கே இருக்கே அவங்க தான் சார்.
என்று முனியம்மா வைக் காட்டினாள் ராதா.
உங்க பெயர்?
முனியம்மா.
நீங்கள் எத்தனை வருசமாக இங்கே வேலைப் பார்க்குறீங்க?
இப்போ தான் சார் ஒரு வருசமா வேலைப் பார்க்ககிறேன்.
ஓ அப்படியா?
இது க்கு முன்னாடி வேறு எங்கே வேலை செய்திங்க?
வேறு எங்கேயும் இல்லை சார்.
இங்கே தான் முதல் முதலில் வேலைக்கு வந்தேன்..
உங்க வீட்டில் உங்க கணவர் என்ன வேலை செய்கிறார்?
அவர் கூலி வேலை தான் செய்து வந்தார். இப்போ கொரோனா இரண்டாவது அலையில் இறந்து விட்டார்.
எனக்கு ஒரு பையன் இருக்கிறான் பாத்தாம் வகுப்பு அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கிறான்.
சரி நீங்கள் வந்து பார்த்தபோது அவர் உயிரோடு இருந்தாரா?
அது தெரியாது ஐயா நான் வழக்கமாக காபி போட்டு எடுத்துக் கொண்டு போவேன்.அப்படி தான் போனேன் அப்போ
போர்வை முழுவதும் ரத்தமாக இருந்ததால் நான் பயந்து போய் காபி தட்டை அப்படியே போட்டு விட்டு கத்திக்கொண்டு வெளியே வந்து விட்டேன்...
சரி
எல்லாம் சொல்ல சொல்ல எழுதிக் கொண்டு இருந்தான் ஏடு ஏகம்பரம் பக்கத்தில் இருக்கும் ரைட்டர் சிவம்.
»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»
தொடரும்.
#901
தற்போதைய தரவரிசை
20,050
புள்ளிகள்
Reader Points 50
Editor Points : 20,000
1 வாசகர்கள் இந்தக் கதையை ஆதரித்துள்ளார்கள்
ரேட்டிங்கஸ் & விமர்சனங்கள் 5 (1 ரேட்டிங்க்ஸ்)
sathishhkrishna
மிகவும் நன்றாக எழுதி இருக்கிறீர்கள்... சிறந்த கதை... என் மனமார்ந்த வாழ்த்துக்கள்... தங்களுக்கு 5 star and like கொடுத்துள்ளேன். எனது கதை " அடுத்த நொடி ஆச்சரியம் " முதல் 20 இடத்திற்குள் இருக்கிறது. தாங்கள் தயவு செய்து எனது கதையை படித்து... பெருந்தன்மையோடு... ஒரு சக எழுத்தாளராக... ரேட்டிங் தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்... மிக்க நன்றி...
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10புள்ளிகள்
20புள்ளிகள்
30புள்ளிகள்
40புள்ளிகள்
50புள்ளிகள்