என்ன பிழை செய்தேன்

பெண்மையக் கதைகள்
5 out of 5 (3 ரேட்டிங்க்ஸ்)
இந்தக் கதையைப் பகிர

என்ன பிழை செய்தேன்

கணவன் இறந்து ஓராண்டுக்கு மேல் ஆகிறது தன்னந்தனியே அந்த வீட்டில் வாழ்ந்து வருகிறாள் குட்டியம்மா. அவன் இருந்தபொழுது அவனை தினமும் திட்டி தீர்த்துக் கொண்டே இருப்பாள் அவன் இயலாமையால் செய்யும் தொல்லைகள் தாங்க முடியாமல் துணையாகவாவது அவர் இருந்தார் அவரும் இப்போது இல்லை என்று அடிக்கடி வருந்தி கொள்வாள். எப்படி கலகலன்னு இருந்த வீடு நிறைய சொந்தம் பந்தங்களும் குழந்தைகளும் தினம் தினம் அப்ப எல்லாம் திருவிழா மாதிரி தானே இருக்கும். இப்ப யாருமே இல்லாத அனாதை மாதிரி தானே கிடைக்கிறோம் நானும் இந்த வீடும் என்று புலம்பிக்கொண்டு இருந்தால் குட்டி அம்மாள்.

ஒத்த ஆம்பள புள்ளைய பெத்து வளர்த்து படிக்க வச்சு அன்பு பாசத்தை கொட்டி வளர்த்தான். கல்யாணம் ஆகுறதுக்கு முன்ன அவன் என்னையும் அவங்க அப்பாவையும் நல்லபடியா தான் பாத்துக்கிட்டான். கல்யாணம் ஆனா கொஞ்ச நாள்ல அவன் பொண்டாட்டிக்கு இந்த ஊர் பிடிக்கலனு ஊரை விட்டு டவுனுக்கு போயிட்டாங்க அதுக்கு அப்புறம் மாசம் ஒரு தடவை வருவான் அதுக்கப்புறம் மூணு மாசத்துக்கு ஒரு தடவை ஆறு மாசத்துக்கு ஒரு தடவை ஏன் வருஷத்துக்கு ஒரு தடவை ஆகிப்போச்சு என்று கண்ணில் நீர் கலங்க குமுரிக் கொண்டிருந்தாள் குட்டி அம்மாள்.

நடு வீட்டு சுவற்றில் மஞ்சள் பூசி வட்ட வடிவில் மேலும் கீழும் வரிசையாக குங்கும பொட்டு வைத்து அவள் கணவனுக்கு படைத்த அந்த இடத்தின் ஓரம் சாய்ந்து கொண்டு.புலம்பிக் கொண்டிருந்தவளுக்கு மேலும் ஆழ்மனதில் ஆதங்கம் பொங்கியது.

நான் என்ன குறை வச்சேன், என் மகனே என்ன தப்பு செஞ்சேன், ஏன் என்ன வந்து பார்க்கவே மாட்டேன்ற, நான் வளர்த்ததுல ஏதாவது பிழை செய்து விட்டேனா? நான் தானே உன்னை வளர்த்தேன் என் வளர்ப்பு தப்பா போயிடுச்சா? இப்படி அடியோடு பாசம் இல்லாமல் போயிட்டியேடா என் மகனே! நான் தான் என்னமோ குறை வச்சுட்டேன் போல இருக்குது, அதான் என் மேல அக்கறையே இல்ல அவனுக்கு. இல்லையே என்னால நம்பவே முடியலையே என் மகனா என்ன மறந்தான் கண்ணில் நீர் வழிய வழிய தன்னந்தனியே அழுது புலம்பிக் கொண்டிருந்தாள்.

அவள் அழுகுரல் அக்கம்பக்கத்து வீட்டுக்கு கேட்டு விடக் கூடாது என்று கவனமாக இருந்தபடி புலம்பி அழுதால்.

ஏன்னா அடிக்கடி அக்கம் பக்கத்து வீட்டுக்காரங்க ஏன் அக்கா உன் மகன் உன்னை வந்து பார்க்கிறதே இல்லையா வீட்டுக்கு வர்றதே இல்லையா?

ஏதாவது உனக்கு வாங்கி தரேனா?

காசு அனுப்புறானா ஏன் இப்படி உன்னை அனாதையாக விட்டுட்டா என்று கேட்பார்கள். அப்போதெல்லாம் என் புள்ள மாச மாசம் காசு அனுப்புது யாரு வந்தாலும் அவங்க கிட்ட இது அதை வாங்கி கொடுத்து அனுப்புவது என் பிள்ளையை குறை சொல்லாதடி என்னால துன்ன முடியாம பூரானம் பூத்து கிடைக்குது. எனக்கு ஒரு குறையும் இல்லை என்று கேட்க வர்றவங்க வாயை அடைக்கிற படி பேசி விடுவாள் குட்டியம்மாள். தன் மகனின் பெருமைக்கும் பேருக்கும் ஒரு குறையும் வந்து விடாதபடி ஊரெல்லாம் பெருமை பேசுவா தன் மகனைப் பற்றி யாரும் குறை சொல்லாமலும் பாத்துக்குவா.

ஆனாலும் அவ அடி மனசுல அவ மேல ஏக்கமும் அவன் வந்து பார்க்கவில்லை என்ற ஆதங்கமும் அவனை ஒரு நாள் திட்டி தீர்த்திடலாமா அப்படி என்ற கோபமும் ஓடிக்கொண்டே தான் இருக்கும். இவ்வளவு வருஷமா இவ்ளோ கவலை படாதவ இப்ப ஏன் அழுது புலம்புகிறா என்று பார்த்தா இப்ப எல்லாம் அவளை அவளால கவனிக்க முடியல அவளுக்கே அவ சோறு பொங்கி சாப்பிட முடியாமல் கை, கால் எல்லாம் நடுக்கம் முண்டாயிடுச்சு உட்கார்ந்து எழுந்திருக்க முடியல முட்டி வலிக்குது படுத்தா எழுந்திருக்க முடியல உடம்பெல்லாம் தளர்ந்து போச்சு ராவுல தூக்கம் இல்லை எப்பவும் தன் மகன் நினைப்பு.

கடந்த சில வாரமா அவள அவளாலேயே பார்த்துக்க முடியல எந்த பொருளை எங்க வச்ச என்ற ஞாபகம் இல்ல பழைய கதை எல்லாம் நெஞ்ச போட்டு உறுத்துது இப்போ எத எங்க வச்சேன்ற கவனம் இல்லை போன வாரம் வரைக்கும் யார் துணையும் வேணுமுன்னு அவ நினைக்கல.

இப்போ அவளுக்குள்ளையே ஒரு பயம் உண்டாகிவிட்டது கண்ணும் தெளிவா தெரியல நம்பிக்கை இழந்து புலம்பிக் கொண்டிருந்தாள்.

இப்படி புலம்பினாள் தனக்குள்ளே

ராவெல்லாம் தூக்கம் இல்லாமல் பெத்து வளர்த்து படிக்க வைத்து என்ன பிரயோஜனம் நான் தள்ளாடும் நேரத்துல எனக்கு துணையா இல்லையே நான் அனாதையா ஆயிட்டேன் இன்னும் கொஞ்ச நாள்ல போனா என்று

பாடினால்

பிச்சை எடுப்பேனோ

பிறகு என்ன செய்வேனோ

எச்சில் சோத்துக்கே

ஏமாந்து நிப்பேனோ

ஐயையோ அனாதியாய்

வீதியில் அங்கும் இங்கும் திரிவேனோ.

பிச்சை எடுப்பேனோ

பிறகு என்ன செய்வேனோ

எச்சில் சோற்றுக்கே

ஏமாந்து நிற்பேனோ

ஐயையோ அனாதியாய்

வீதியில் அங்கும் இங்கும் திரிவேனோ.

ஒப்பாரி போல் பாடி முடித்தால் வழிந்த கண்ணீரோடு

ஒரு தடவை அவன் மூணு வயசு இருக்கும் புள்ளைக்கு ராவெல்லாம் ஜுரம் அவங்க அப்பா வெளியூர் போயிருந்தார் மறுநாள் காலையில 7 மணி இருக்கும் குழந்தைக்கு வலிப்பு வந்து இழுக்குது, பார்த்து அழுது கதறி தூக்கிக்கிட்டு பக்கத்து வீட்டு அக்காவும் நானும் நடந்தே கடலூருக்கு பெரிய ஆஸ்பத்திரிக்கு தூக்கிப் போய் 15 நாள் ராப்பகலா தூக்கம் இல்லாம புள்ளைய காப்பாத்தினோம். அவனுக்கு எதாவது ஒன்னு ஆயிருந்தா என் உயிர் அன்னைக்கே போய் இருக்கும். ஆனா இவனுக்கு ஏன் இந்த அன்பு பாசம் யெல்லாம் இல்லாம போச்சு. ஐயோ! என் மகனா இது? குமுரி அழுதவள்... அவன் கால்ல முள்ளு குத்துனா என் கண்ணுல ரத்தம் வரும் அப்படித்தானே நான் வளர்த்தேன். அடிக்கடி காயல வந்துடும் எத்தனை தடவை பணம் ஆஸ்பத்திரிக்கு தூக்கிக்கிட்டு ஓடுவான் அந்த ரஹீம் டாக்டரு கிட்ட மாசம் இரண்டு தடவை யாவது உன்னை கூட்டிட்டு போவேன். பணம் இருக்காது நாள்பூரா நடுவுனுட்டு கொல்லிவேல செஞ்சு பானையில் போட்டு வச்ச மிச்சமீதியோட அக்கம் பக்கத்தில் கடன் வாங்கி உன்ன உடம்பு சரியில்லைன்னா ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போய் காட்டுவேன்.

அவனுக்கு 12 வயசு இருக்கும் இப்படித்தான் ஒரு தடவை அதிகாலையில ஒரு குடுகுடுப்புக்காரன் என் வீட்டு கிட்ட வந்து குறி சொல்லிட்டு போனா. இந்த வீட்ல ஒரு பிள்ளைக்கு கண்டம் இருக்குது அந்த கண்டத்தைதுல இருந்து இது தப்புன்னா பரிகாரம் செய்யணும் பரிகாரம் செய்யணும் இன்னு சொல்லிட்டு போனதிலிருந்து நெஞ்சு பதறிப்போய் கோயில் கோயிலா போய் வேண்டின. கோயிலில் இருந்து நான் வீட்டுக்கு வரதுக்குள்ள இவன் சைக்கிள் போய் ஒரு டயர் வண்டியில மாட்டி இவன் மேல டயர் வண்டி ஏறி போச்சு புள்ளைக்கு மூக்குலையும் காதலையும் ரத்தம் வந்திருச்சு அப்போ அவனை தூக்கிக்கிட்டு ஆஸ்பத்திரி ஆஸ்பத்திரி அலைஞ்ச ஏறாத கோயில் கொலமில்ல என் பிள்ளையை காப்பாத்துன்னு மண் சோறு சாப்பிட்டேன் அங்க பிரசன்னம் பண்ண வேண்டாத தெய்வம் இல்ல செய்யாத பூஜை இல்லை மூணு மாசம் கழிச்சு தான் அவன் சாதாரண நிலைக்கு நல்ல உடம்பு சுகத்தோட விளையாட ஆரம்பிச்சான். எப்படி எல்லாம் பாடுபட்டு வளர்த்தன்டா என் மகனே.!

ஏண்டா என் மவனே என்ன வந்து பார்க்க மாட்டியா என்று ஆதங்கத்தோடும் கோபத்தோடும் நெஞ்சு கணக்க நெஞ்சம் அடைக்க வேகமாக கத்த ஆரம்பித்தாள்

பாசமா பேச மாட்டியா? நான் செத்தா வருவியா? இன்று மாரல் அடித்துக் கொண்டால் கோபமாக

இல்ல நான் உயிரோடு இருக்கும்போதே ஒரு ரெண்டு நாள் என் கூட வந்து நம்ம வீட்டுல இருபா? அது போதும்

நா மூன்றாவது நாளே செத்துட்டா கூட நான் சந்தோஷமா செத்துப் போவேன்.

ஏக்கத்தோடு கெஞ்சி அழுதபடி

உன் குழந்தைய கூட என்கூட விளையாட விட மாட்டியா?

உன் கையால ஒரு வாய் சோறு என் கையில உருண்டையா பிடிச்சு தர மாட்டியா?

எனக்கு பொறை ஏறினா தலையை தட்டி தண்ணி தர மாட்டியா?

கெஞ்சி அழுதப்படி கொஞ்சம் விரத்தியும் விகாரமாகவும் மூச்சி இறைக்க பேசிக்கொண்டே போனாள்.

என்ன கைதாங்களா உள்ள கூட்டிட்டு வந்து உன் கூட படுக்க வச்சுக்க மாட்டியா?

அய்யோ என் மகனே! என்று உரத்த குரலில் கத்திய படி உள்ளிருக்கும் ஆசைகளை ஏக்கத்தை அவளின் கோபத்தை ஒரே குரலில் என் மகனே என்று கத்தி தீர்த்தவள் இன்னும் ஆயிரம் ஏக்கம் உண்டு எப்படின்னா உன்கிட்ட சொல்லுவ என்ற ஆதங்கத்தில் அழுது கொண்டே கண்ணீரும் இதயமும் நின்று போனது நிராசையாக அந்தத் தாயின் ஆசை..

நீங்கள் விரும்பும் கதைகள்

X
Please Wait ...