அத்தியாயுத்தம்

கற்பனை
4.9 out of 5 (108 ரேட்டிங்க்ஸ்)
இந்தக் கதையைப் பகிர

வணக்கம் !

ஒரு அத்தியாயம் தொடங்குவதை பல யுத்தங்கள் முடிவு செய்யும். இங்கும் அப்படித்தான் இரு சம்பவங்கள் ஒரு நாட்டின் தலையெழுத்தை நிர்ணயிக்கப் போகின்றன.

16 வாயில்கள் கொண்ட 32 கிராமங்களை உள்ளடக்கிய 64 சேனைகள் பாதுகாப்பில் பஞ்ச பூத வளத்துடன் 128 மந்திரிகளுடன் 8 ராஜகுரு அறிவுரையின் படியும் நட்பும் அன்பும் சூழ்ந்த மாபெரும் ராஜராஜனின் நாடு. அதை பிரதிபலிக்கும் வண்ணம் உள்ள பிரம்மாண்ட அரண்மனை. இந்த நல்லாட்சி, கடந்து வந்த பாதையில் போர் சந்திக்கா வண்ணம் நட்பு சூழ் நல்லரசாக விளங்கியது.

ஒரே ஆண்டில் அந்த இரு சம்பவங்களும் நிகழப்போகும் நேரம் நெருங்கிக்கொண்டே இருந்தது.

985ஆம் ஆண்டு, ராஜசபையில் அவசரகால கூட்டம் தொடங்கி பரபரப்பாக நடந்துகொண்டு இருந்தது. மன்னர் பலரின் ஆலோசனை கேட்ட பிறகு ஒரு முடிவுக்கு வந்தார். தன் நாட்டின் சப்தபடைகளை மைதானத்தில் அணிவகுக்கும் படியும் போர் ஆயுதங்களை புதுப்பிக்கும் படியம் ஆணையிட்டார். மன்னரது வாள் உருவான விதம் கொல்லர் பட்டறையில் அக்னி கொழுந்துவிட்டு எரிய எஃகு அச்சில் உற்றபட்டு, அடிமீது அடியாய் இடியையும் சற்று யோசிக்க வைக்கும் வண்ணம் காற்றை கூட இரண்டாய் பிலக்கும் கூர் கொண்ட போர்வாள்.

காலாட்படை, யானைப்படை, குதிரைப்படை, வேற்படை, வாட்படை, விற்படை, தேர்ப்படை ஆகிய சப்தப்படைகளும் போர்க்கு தயாராகி அணிவகுத்து நேர்கொண்டு இருந்தது. மன்னர் இப்படைகளுக்கு மத்தியில் நின்று தன் வியூக வீர உரையை சொற்பொழிய சப்த படைகளும் அதன் வீர முழக்கத்தோடு முன்மொழிந்துபோர்க்கு ஆயத்தம் ஆகின. வாயில்களில் போர்க்கொடி ஏற்றப்பட்டது. நாட்டு மக்கள் மனதில் இவ்வாட்சியில் முதல் போர் என்பதால் மக்கள் மிகுந்த பதற்றத்துடன் இருந்தனர், தன் மகளின் முதல் பிரசவம் போல். எதிரிப்படை யார் என மக்கள்சபையில் கேட்டனர். ராஜகுரு மன்னரின் ஆணைபடி மக்களின் குழப்பங்களுக்கு பதில் அளித்தார். "எதிற்போர் யாராயினும் வெல்வோர் நாமாவோம்! வருவது நம் வம்சாவழியோ அல்லது நம்மை சுற்றத்தாரோ அல்ல. எதிற்பவன் அயல் நாட்டு படை தனது ராஜ்ஜியத்தை விரிவாக்க நம் மண்ணில் மூட நம்பிக்கையுடன் கால் வைத்துவிட்டான். அவன் தலை திரும்புகிறதா இல்லை தலை வணங்கி திரும்புகிறான என்று பாப்போம்.." என்றார். தன் நிறைமாத மனைவிக்கு துணைவன் தைரியம் சொல்வது போல் இருந்தது அச்சபை.

மக்களின் நம்பிக்கையுடனும் வீரர்களின் அசுரபலத்துடனும் தன் நிறைமாத மனைவியின் அன்புடனும் முன்னோர்களின் ஆசியுடனும் வெற்றித்திலகம் நெற்றியில் ஏந்தியபடியும் துணிவை தன் வாளின் கூர்மை போல் உறையில் தாங்கியபடியும் போர்க்களத்திற்கு மன்னரின் தலைமையில், சப்தபடைகள் விரைந்தன.

விண்ணையும் மண்ணையும், எட்டு திசைகளையும் கிடுகிடுக்கச் செய்வது போலப் போர் முரசங்கள் ஒலித்தன. சங்குகள் முழங்கின. யானைகள் பிளிறியது, குதிரைகள் கனைத்தன. தேர்ச்சக்கரங்கள் பேரொலியுடன் இடி இடிப்பது போல உருண்டு வந்தது. வீரர்கள் உறையிலிருந்து வாளை உருவும் சத்தம் போர்களத்தில் எதிரொலித்தது.போர்க்களம் அனல் பறக்க,பதினோரு நாள் பதினோரு கட்டமாக நடந்த போரில் பல வியூகங்கள் அமைக்கப்பட்டது.அதில் ஏழாம் நாளில் நடந்த முக்கிய வியூகமாம் சக்கர வியூகம் தன் படைகளை சக்கர வடிவில் அமைத்து உள்புறம் வெளிப்புறமும் வலு சேர்த்து தன் படையின் பாதுகாபிற்கும் எதிரியின் விழ்ச்சிக்கும் வழி செய்யும். இவ்வியூகம் கருக்குடம் போன்றது. இவ்வியூகத்தை தகற்பது அவ்வளவு எளிதல்ல, தேரை நெருங்க சக்கரத்தை விட்டு அவர் வெளிய வர வேண்டும் அல்லது சக்கரத்தை உடைத்து எதிரி உள் செல்லவேண்டும். உள்சென்றவன் பின் வெளிய வருவது ஆசாத்தியம் ஆனது.
எதிரி நாட்டினரோ முக்கோண வியூகம் மற்றும் பல வியூகங்களை கையாண்டனர்.
இவ்வாறு பதினோரு நாட்களாக நடந்த இப்போர் கடைசிக்கட்டத்தை எட்டியது.
கடைசி நாள் போர்களத்தில் தனக்கே உரிய போர் வியூகமாம் ராஜாளி வியூகத்தை பயன்படுத்த முன்வந்தார்,மன்னர். இவ்வியூகமே தலை சிறந்த வியூகம் என பலராலும் போற்றபடுவது.
ராஜாளி கழுகு அமைப்பையே இவ்வியூகம் கொண்டது. இதில் தன் இரையை ஓட ஓட துரத்தி சோர்வடைய செய்த பின் தாக்கி வேட்டையாடும். இதன் அமைப்பில் ராஜாளியின் கண்களாக தேர் படையும், முகபகுதியாக யானை படையும், சிறகின் வெளிப்பகுதில் குதிரை படையும், உற்புறத்தில் விற்படையும், உடற்பகுதில் காலாட் படையும், இதய பாகத்தில் ராஜராஜனும், வால்பகுதில் வேற்படையும் அமைந்து தாக்குதலை முன்னெடுபர். இப்போரின் முடிவில் எதிரி எவனோ அவன் தலைவணங்கி புறமுதுகிட்டு ஓடினான்.

வெற்றிக்களிப்புடன் வீரர்கள் நாடு திரும்ப தயாரானார். மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் வீர முழத்துடனும் மாபெரும் வரவேற்புடனும் தயாராகி கொண்டுஇருந்தனர். மன்னர் தனது நாட்டின் பெருமையையும் தன் மீது மக்கள் வைத்த நம்பிக்கையும் காப்பதியத்தில் பேரானந்ததுடன் வெற்றியை சிறிதும் தன் தலைக்கு ஏற்றுக்கொள்ளாமல் அரண்மனைக்கு திரும்ப தயாரானார்.

மன்னாருக்கு அவரச செய்தி புறா வழியாக ராஜகுருவிடம் இருந்து அனுப்பட்டது. தன் படையுடன் அதிவேகதில் விரைந்தார் அரண்மனைக்கு.

இன்று சூரியன் அஸ்தமித்து நிலவின் ஒளி நின்றிட ஒரு பௌர்ணமி மாலை நேரம்... ஆயிரக்கணக்கான மக்கள் அரண்மனையை சூழ்ந்து இருந்தனர் பல்வேறு கோஷங்களுடன், ராஜசபை நடுங்கிக் கொண்டிருந்த நேரம், மன்னரின் கால்கள், வலமும் இடமுமாக நடைபோட்டு கொண்டிருந்த தருணம். மழை மெல்ல மெல்ல விழத்தொடங்கியது, மன்னர் ராஜசபையின் வலது புறம் உள்ள அறையை நோக்கிய படி பதற்றத்துடன் இருந்தார்.
மழை மாமழையாய் மாறியது மக்கள் அசையாமல் நின்று, விடாது கோஷம் எழுப்பிக்கொண்டே இருந்தனர். ராஜசபையில் தீவிர ஆலோசனையுடனும் தொடங்க போகும் அத்தியாயம் குறித்த நக்ஷத்திரபஞ்சாங்க இணைவு பற்றி கருத்துகள் பகிர்ந்து கொண்டிருந்தனர். ஆலய மணிகள் முழங்க கோவில்களில் ஆராதனை நடைப்பெற்றுக்கொண்டிருந்தது.சப்த படைகளும் அரண்மனை வாயிலின் முன்புறம் அணிவகுத்து மன்னரின் கட்டளைக்காக காத்துகொண்டு இருந்தனர்.

நம் மன்னரிடம் இருந்து உயிருடன் தப்பிய அயல் நாட்டு எதிரி அவனது வேறு சில அயல் நாட்டு மாமன்னர்களிடம் நடந்தையும் நாட்டின் வளங்களையும் பற்றி எடுத்துரைத்தான். அவர்கள் நாட்டின் வளம் கேட்டறிந்து ஆசைகொண்டனர் கைபெற்ற.

நம் அரண்மனையில் ஒரு அலறல் சத்தம் பல்லாயிரம் யானைகளின் பிளிரலைப் போல் அரண்மனையில் இருந்து கேட்டதுடன் வாயிற்காவலன் நெஞ்சுக்கூடு நடுங்கிட மக்கள் கோசம் அடங்கிட அரண்மனைக்குள் என்ன நடந்திருக்கும் என்று அனைவரும் வழிமீது விழிவைத்தும் செவிவைத்தும் காத்துகொண்டு இருந்தனர்.

சில நாழிகைகள் அரண்மனை நிசப்தம் அடைந்தும் பலரின் நாடி மேள ஓசை போன்று அதிர, மன்னர் அவை நோக்கி சப்தகன்னிகள் வாழ்த்து பாடியபடி முக்கோண வரிசையில் அணிவகுத்து அடிமீது அடிவைத்து வர, முன்னிலையில் நால்வர் தீயின் பிளம்பாய் தீப ஒளியுடனும் பின் வரும் வரிசை இருவர் நீளா ஓட்டம் கொள்ளும் புன்னிய நதியின் நீராலான பன்னீருடனும் அதன் பின் வருவோரிடம் பஞ்சபூத சாட்சியுடன் ஒர் உயிர் இரு உயிராய் பிரிந்து பொற்துணி மேல பிறப்பின் ஒலியுடன் யோகங்கள் பல பொருந்திய சேய் ஏந்தியவாறும், மன்னர் கண்ணில் நீர்தேங்கியும் உதட்டில் புன்னகையுடனும் கரங்களால் பெற்றுகொண்டு, அறிவிப்பிற்காக மக்களிடம் விரைந்தார்."மன்னர் வாழ்க ! மாமன்னர் வாழ்க !" என்று கோஷம் எழுப்பினர். கோபுர வாசல் வழியே மக்கள் முன்னால் தன் குழந்தையை கரங்களால் உயர்த்தி காட்டிட. மன்னர் "இரு உயிர்களும் நலம்" என்று கூறியபடி ராஜகுரு பிறப்பின் குறிப்பை வாசிக்க ஆரம்பித்தார், "ராஜாதி ராஜன் வம்சத்தில் 985 ஆண்டு தை ஒன்றாம் நாள் சதய நட்சத்திரத்தில் பௌர்ணமி மாலை வேளையில்.." என்றிட மக்கள் கரகோஷத்துடன் "இளவரசர் ! இம்மண்ணின் இந்திரன் ! இளம் சூரியன்..." என பல கோஷங்களை எழுப்பினார்கள்.... ராஜகுரு மன்னரை பார்த்திட, மன்னர் "ஒரு நிமிடம்..." என்றவுடன் அந்த இடமே அமைதியானது. மன்னரோ "நம் நாட்டிற்கு பொற்காலம் தந்திட இளவரசி மகா ராணி "முதலாம் சம்யுக்தா மாதேவி" உயிர்த்துள்ளார்கள்'' என்றார்.. மக்கள் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை. அந்நிசப்தம் அடுத்த நொடி தொடரும் முன் தோட்டத்து யானைகளின் பிளிரலுடன், இளவரசியின் ராஜ்ஜியம் தொடங்கியது...

இவ்வாறு தன் நிறைமாத மனைவிக்கு கடிதம் எழுதினான் "ராணா".

பிரசவம் என்பது ஓர் யுத்தம் போன்றது அதில் பிறக்கும் உயிரானது ஒரு அத்தியாயம். இந்த அத்தியாயதில் பெண் குழந்தை தனக்கு இளவரசிக்காக பிறக்கும் என்று ராணா தனது அன்பு மனைவிக்கு கடிதத்தின் மூலம் தெரிவிப்பதே நம் அத்தியாயுத்தம்.

நீங்கள் விரும்பும் கதைகள்

X
Please Wait ...