அட்ட காசம்

Crime Thriller
5 out of 5 (1 ரேட்டிங்க்ஸ்)
இந்தக் கதையைப் பகிர

Ch.8. அடுத்த இருபத்தி நான்கு மணி நேரம்.

அடுத்து என்ன நடக்கப் போகிறதோ என்ற மரண பயத்தில் உறைந்து போய் கிடக்கிறது அந்த குரு நாகரமே

மக்கள் ஒவ்வொரு நாளும் இரவில் ஏதோ மர்மம் ஆவிகளின் அட்டூயங்கள் தொடர்ந்து நடந்துக் கொண்டு தான் இருக்கிறது என்று மக்கள் பேசிக்கொள்ள ஆரம்பித்து விட்டார்கள்.

காற்று வீசி ஆரம்பித்து விட்டது. லேசாக மழை தூரல் போடா ஆரம்பித்து விட்டது.

இரவு பணியிரண்டு ஆனால் போதும் மாயணத்தில் யாரோ ஒரு பெண் அழுது கொண்டு இருப்பதாகவும். மாயானத்தின் பக்கத்தில் இருக்கும் சிலர் அழும் குரலை கேட்டதாகவும் சொல்கின்றனர்.

அதன் பின்னே இரண்டு கரிய உருவங்கள் மாயணத்தின் கேட் வாசல் திறந்துக் கொண்டு வெளியே அழுதுக் கொண்டே போவதாகவும் பேசிக்கொள்கின்றனர்.

ஆனால் அதன் எதிரில் போய் நின்று யாரும் பார்க்கவில்லை. தைரியம் இல்லை.

குருநகர் சாலையில் விபத்துகள் அதிகம் நடக்க ஆரம்பித்து விட்டது.

அந்த ஐ. ஜி. கோர்பச்சவ் சிங்கிரி ஒரு பெரிய போலீஸ் கமிஷனர்.

ரொம்ப நல்லா அதிகாரி என்று மாட்டாக்களைப்பு முதல் திரிகோணம் வரை பெயர் எடுத்தவர். அவருக்கு இரண்டு பிள்ளைகள். மனைவிப் பெயர் மேகலா அவர் தமிழ் நாட்டை சேர்ந்தவர். அவர் இந்தியாவுக்கு வந்து இருந்தப் போது. மேகலா ஒரு நாட்டியக் கலையில் சிறந்தவர் சென்னை சேம்பாக்கத்தில் அவரின் நாட்டிய அரங்கேற்றம் நடந்தபோது அங்கே அவர் செல்ல மேகலாவின் நாட்டிய கலையில்

மயங்கி.

அவர்களின் பெற்றோர்களை சந்தித்து நேர்மையான முறையில் பெண் கேட்க.. முதலில் இலங்கைக்கு பெண் கொடுக்க முடியாது என்று சொன்னவர்கள்.

அவரின் அழகும், நேர்மையும், பணிவான பேச்சும், படிப்பும், பதவியும் அவர்களுக்கு ரொம்ப பிடித்துப் போக

இந்து முறைப்படி சென்னையில் அவர் கலியாணம் செய்து கொண்டு இலங்கைக்கு யாழ்ப்பாணத்துக்கு அழைத்துக் கொண்டு வந்து விட்டார்.

அடிக்கடி இந்தியாவுக்கு போய் ஒரு மாதம் இருந்து விட்டு தான் வருவார்

காலங்கள் உருண்டு ஓட இவருக்கு இரண்டு பிள்ளைகள். மூத்தப் பையான் ராம்ஜட் பெண் பிள்ளைப் பெயர் டிலுசி.

பையன் ராம்ஜட் மண்டையில் படிப்பு ஏற வில்லை. போலீஸ்க்காரன் பிள்ளை திருடு. வைத்தியார் பிள்ளை மக்கு என்பது போல்.

அவனிடம் எவ்வளவு கெட்டப் பழக்கம் இருக்க முடியுமோ?

அவ்வளவு கெட்டப் பழக்கமும் அவனிடம் இருந்தது.

இதற்கு காரணம் ஆண் பிள்ளை என்று செல்லம் கொடுத்து வளர்த்ததே காரணம்.

அவன் அப்பா அதிகாரத்தைப் பயன் படுத்தி அவன் எல்லோரையும் மிரட்ட ஆரம்பித்து. இப்போ பேட்டை

ரவுடியாகவே மாறி விட்டான்.

அவனோடு அந்த அமைச்சர் நிதர்சனபையன் மகரந்தனோடு சேர்ந்து ரொம்ப கெட்டு போய் விட்டான். இரண்டு பேரும்

மிகவும் மோசமானவர்கள் என்று பெயர் எடுத்து விட்டார்கள்.

அவன் தங்கச்சி டிலுசி ரொம்ப நல்லப் பிள்ளை. அவள் மட்டக்களப்பில் மருத்துவ கல்லூரியில் இரண்டாம் வருடம் படித்து வந்தாள்.

அவளை ஆண்டவன் விட்டு வைக்க வில்லை.

இந்த கொரோனா இரண்டாவது அலையில் பாவம் எவ்வளவு முயற்சி செய்தும் அவளைக் காப்பாற்ற முடியவில்லை.

இறந்து விட்டாள்.

வீடு இருண்டுப் போய் கிடந்தது. மகளை இழந்து விட்ட மேகலா அவள் இறந்துப் போன இரண்டாவது மாதமே ஹார்ட் அட்டாக் வந்து இறந்து விட்டாள்.

இப்போ இவனும் இவங்க அப்பா கமிஷனர் மட்டுமே இருக்கின்றனர்.

மனைவியும், மகளையும் இழந்த அவர் சரியாக வீட்டிற்கே வருவது இல்லை.

பையன் ரொம்ப கெட்டுப் போய் விட்டான். அவனை திருத்த முடியாது என்ற முடிவுக்கு வந்து விட்டார். அதே மன வேதனையில் அவர் ரொம்பவும் பித்து பிடித்தவர் போல் ஆகி விட்டார்.

ரொம்ப தண்ணி அடித்து விட்டு போதையில் வீட்டுக்கு வந்த வேலைக்காரியை அவன் படுக்கை அறைக்கு கூப்பிட்டு இருக்கிறான்.

அவள் அவனிடம் இருந்து தப்பித்து வெளியே போய் விட்டாள்.

அம்மாவாசை இரவு. முகத்துக்கு முகம் தெரியாத. இரண்டு நாட்களாக தெருவும், வீடும் இருண்டு கிடந்தது.

Ups கூட வேலை செய்யவில்லை.

மணி பணியிரண்டு ஹாலில் கடிகாரம் பணியிரண்டு.

மர்டர்...2.

டிக்.... டிக்... டிக்...

.சார்... சார்.. கதவை திறங்க சார் .....

ப்ளீஸ் கதவை திராங்க...

கதவை யாரோ வேகமாக தட்டும் ஓசை கேட்டது.. ராம்ஜெட்.. போதையில் இருந்தான். வெளியே கதவை யார் தட்டுவது என்று கூட அவனுக்கு புரிந்துக் கொள்ள முடியாத படி போதை தலைக்கு ஏறி இருந்தது.

கொஞ்சம் நினைவு வர யாரது என்று கேட்டப்படி தள்ளாடியாப் படியே எழுந்தான்..

மெல்ல மெல்ல கதவின் அருகே போகும் போது. வெளியே நாய் குறைக்க ஆரம்பித்து விட்டது.

முரட்டுதனமாக கதவை யாரோ தட்டுவது போல் கேட்கவே மீண்டும் கீழே விழுந்த ராம்ஜெட் எழுந்து கதவை திறந்தான்.

உடனே யாரோ இருவர் அவனை தள்ளிக்கொண்டு உள்ளே ஓடுவது போல் அவனுக்கு தெரிந்தது.

டேய்... டேய்... நாய் காளா யாரு நீங்க உள்ளே வாரிங்க...

என்றான் அவன்..

அவனை அப்படியே இரண்டு பேர் தூக்கிகிட்டு அவனை கட்டில் படுக்க வைப்பது போல் தோன்றியது.

அவன் கண்களுக்கு மண்டை ஓடு தெரிந்தது

கருப்பு காகம் கரைவதுப் போல் கேட்டது.

இருட்டு சரியாக தெரியவில்லை.

கால்களை யாரோ அழுத்தி பிடிப்பது போல் அவன் உணர்ந்தான் போல டேய் டேய் என்னை விடுங்கடா.

என்னை விடுங்கடா என்னடா செய்யப் போறீங்க நாய்களே...

என்று அவன் கத்தவும் அவன் வாயில தலையாணி யை வைத்து யாரோ அழுத்து வதுப் போல் தெரிந்தது...

கைகள் இரண்டும் யாரோ பிடித்துக் கொள்ள மூச்சு திணறினான் அவன்.

அவனால் கத்த முடியவில்லைப் போல.

கை கால்கள் உதறிக் கொண்டு அறுபட்ட ஆடு துடிப்பதுப் போல் துடித்துக் கொண்டு இருந்தான்.

சற்று நேரத்தில் துடிப்பு அடங்கி விட்டது..

கதவை மூடி விட்டு இரண்டு கருமயான உருவங்கள் போய்க்கொண்டு இருந்தது..

அது.... பேயா....!!!!.?

மனிதர்களா.....???

மாமா என்ன பேசாமல் இருக்கிறிங்க.மதியம் சாப்பிட்டு விட்டு பாட்டி, தாத்தா சமாதிக்கு போறோம் சரியா..

வேண்டாம் லிஷா....

ஏன் வேண்டாம் என்று சொல்கிறீர்கள்.

நான் அவங்க சமாதியைப் பார்க்க கூடாதா?

அப்படி ஒன்னும் இல்லை. அத்தை, மாமா வீட்டில் இருக்கிறாங்க எதாவது நினைப்பார்கள்.

அதெல்லாம் ஒன்னும் நினைக்க மாட்டார்கள். சந்தோசப் படுவார்கள்.

வேண்டும் என்றால் அவர்களாயும் அழைத்துக் கொண்டு போகலாம் சரியா?

அப்படி இல்லை எங்க சிற்றப்பா இருப்பார்.

எதுக்கு வீணாக வம்பை வளர்த்துக் கொள்ள வேண்டும்..

என்ன சொல்கிறீர்கள் மாமா?

அது உங்க சொத்து, உங்க வீடு, உங்க நிலம், எல்லாம் உங்க தோப்பு தொறவு, எல்லாம் உங்க அப்பா பெயரில் இருக்கு.

கோர்ட்டில் கேஸ் இருக்கு. நீங்கள் எதற்கு பயப்பட வேண்டும்.?

வாங்க போய் அப்பா அம்மாவை கன்ஸல்ட்டு பண்ணலாம்..

என்று சொல்லிக்கொண்டே லிஷார்தா ராஜாவின் கையை பிடித்துக் கொண்டு வீட்டின் உள்ளே ஹாலுக்கு வந்தாள்.

அங்கே அப்பா பரமேஷ்வர் சோபாவில் உட்கார்ந்து இருக்க பக்கத்தில் மரகதம் அம்மா நின்றுக் கொண்டு இருந்தாள்.

ராதிகா அக்கா மதியம் சாப்பாடுக்கு ஏற்பாடு செய்துக்கொண்டு இருந்தாள்.

வடுகம் போட்டு தாலிப்பது ரொம்ப மணமாக இருந்தது..

மூக்கை துளைத்தது என்ன முருங்கைக்காய் சாம்பார் ...நெய் போட்டு தாலிப்பது இரண்டு தெருவரைக்கும் மணக்கும்.

இப்படி சாப்பிட்டு அவர்களுக்கு ரொம்ப நாள் ஆகி விட்டது.

அப்பா... அப்பா...

என்னம்மா?

நாம் இன்று மாமா வோடு தாத்தாப் பாட்டி சமாதிக்கு ராயகோட்டை போய் வரலாமா அப்பா..

அடே டே... சூப்பர் சூப்பர். நான் கூட நினைத்துப் பார்த்தேன். போய் வரலாம் என்று..

நல்ல நேரத்தில் ஞாபகப்படுத்தி இருக்கிறாய்.

என்ன மாப்பிள்ள போய் வரலாமா?

அது தான் உன் கார் இருக்கே தாராளமா போய் வரலாம்.

என்ன சொல்கிறாய்?

இல்லை மாமா எங்க சிற்றப்பா எப்போ சண்டை போடலாம் எப்போ வம்புக்கு இழுக்கலாம் என்று நேரத்தை எதிர் பார்த்துக் கொண்டு இருக்கிறார். இந்த நேரத்தில் நீங்கள் வந்தால் யாரையோ ஆள் செட் செய்து அழைத்துக் கொண்டு வந்து இருப்பதாக நினைத்து வம்பு இலுப்பார்.

அட என்ன மாப்பிளை நீங்கள் என்னவோ முட்டை பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்திய கதையாக இருக்கே.

சரியா போச்சு போங்க நீங்கள் இப்படி அப்பாவியாக இருப்பதால் தான் அவன் உங்களை இப்படி ஏமாத்தறான் போல்

இதோ பாருங்கள் மாப்பிளை என்னவோ கிராமத்தில் சொல்லுவாங்களே!

எரிக்கு பயந்து ஏதோ கழுவமல் போனது போல் இருக்கே உங்க கதை.

நீங்கள் குனிய குனிய குட்டுறான் போல் இருக்கு.

தைரியமா துணிந்து நில்லுங்க பாருங்கள் அவன் அடங்கி போய் விடுகிறான்.

அவனை நானும் பார்க்கிறேன் நீங்கள் எங்களை அழைத்துக் கொண்டு போங்க சரியா.

ம்ம்ம் சரி மாமா அவங்க கிட்டே எதுவும் நீங்களாக போய் பேச வேண்டாம். அவனாக பேசினால் ஒன்று உண்டு இல்லை என்ற பதில் மட்டும் சொல்லுங்க.

ஆகட்டும் மாப்பிளை மதியம் சாப்பிட்டு விட்டு எல்லோரும் கிளம்புறோம் சரியா.

ராதிகா அக்கா சாப்பாடு ரெடி செய்து விட்டார்கள்.

ராஜா சாப்பாடு எடுத்து வைக்கட்டுமா?

ஓ அம்மா எடுத்து வையுங்கள் எனக்கு ரொம்ப பசியா இருக்குமா!

ராதிகா அக்கா உள்ளே போனதும்.

பரமேஷ்வர் ராஜாவை பார்த்ததும். அந்த பார்வையின் பொருள் நன்றாக தெரிந்துக் கொண்டான் ராஜா..

மாமா நான் சின்ன குழந்தையாக இருக்கும் போது இருந்தே அக்கா எங்க வீட்டில் வேலை பார்க்குது. எங்க அப்பா அம்மா ராதிகா அக்காவை சொந்த பொண்ணு போல் தான் அன்பா பார்த்தாங்க.

வேலைக் காரி என்று எப்போதும் அவங்க நினைக்க வில்லை.

அப்பா அம்மா பார்த்து தான் ராதிகா அக்காவிற்கு கலியாணம் செய்து வைத்தங்க.

அவங்க எனக்கு அக்கா தான் ஆனால் அம்மா மாதிரி தான் என்னை கவனித்துக் கொள்கிறார்கள். அதனால் நான் சின்ன வயசில் இருந்தே அவங்களை அம்மா என்று தான் கூப்பிடுவேன்.

என்றான் ராஜா.. அவன் பேசுவதை கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டு இருந்தாள் லிஷார்தா..

அவள் உள்ளத்தில் அவனுக்கு ஒரு முக்கிய இடத்தை அவள் கொடுத்து விட்டாள் என்பது அவனை அவள் பார்ப்பத்தில் இருந்தே புரிந்துக் கொள்ளலாம்.

=====================================

நீங்கள் விரும்பும் கதைகள்

X
Please Wait ...