கொஞ்சும் விழிகள்.

Crime Thriller
5 out of 5 (1 ரேட்டிங்க்ஸ்)
இந்தக் கதையைப் பகிர

கொஞ்சும் விழிகள்.

திகில்

சிறுகதை.

மதியம் சாப்பாடு அருமை...

ராதிகா அக்காவின் கை பக்குவம் எல்லோருக்கும் வராது. சமையல் கிங் மேக்கர் ராதிகா அக்கா.

சமையல் ஸ்பெஷலிஸ்ட் என்ற பட்டம் பொருந்தும்.

பிரவேஷ் குடும்பம் இலங்கையில் இருந்து இந்தியா வந்து இன்றுடன் எட்டு நாட்கள் ஆகி விட்டது.

எப்படி நாட்கள் நாகர்கிறது என்றே அவர்களுக்கு தெரியவில்லை.

எல்லோருக்கும் ரொம்ப பிடிச்சி போய் விட்டது.

பிரவேஷ், நந்தினி யோசிக்க ஆரம்பித்து விட்டார்கள். பேசாமல் யாழ்ப்பாணதில் குருநகரில் இருக்கும் வீட்டையும் சொத்தையும் விற்று விட்டு இங்கே இந்தியாவில் செட்டல் ஆகி விடலாம் போல் அவர்களுக்கு தோன்ற ஆரம்பித்து விட்டது.

இலங்கைய்கும் இந்தியாவிற்கும் எவ்வளவு வித்தியாசம்?

பேசாமல் லிஷார்தாவிற்கு இங்கே ஒரு டிஸ்பின்சாரி கிளினிக் வைத்து கொடுத்து விட்டு வீடு வாங்கி சொந்த மண்ணில் தங்கி விட அவர்கள் மனம் எண்ணியது.

தாய் மண்ணில் சொந்த மண்ணில் இருப்பது போல் சந்தோசம் வேறு எங்கு போனாலும் இருக்காது.

வாழ்வியல் வசந்தம் இங்கே தான் பூக்கும்.

சொந்தங்களே இங்கே சுகங்கள் ஆகும்.

மண்ணின் பெருமை பேச கவிதைகள் சொல்லும்.

அங்கங்கள் சொந்த மண்ணில் படும் போது சொர்க்கம் தோன்றும்..

விழிகளுல் மொழிபெயற்கும் சிந்தனை முளைக்கும் இன்னிசை காதில் கேட்கும்.

காற்றில் தழுவி போகும் போது கண்களில் ஒளி பிறக்கும்.

மனதில் இன்ப ஊற்று பெருக்கெடுத்து ஓடும்.

என்ன இருந்தாலும் சொந்த ஊரைப்போல் வருமா?

முருங்கைக்காய் சாம்பார் வடகம் போட்டு நெய்யில் தாளிக்க ஒரு பிடி சோறு அதிகமாக யாரைக் கேட்டு இறங்கும்.

நன்றாக வயிறு ஆற சாப்பிட்டு விட்டு ராயகோட்டை ஜமீனுக்கு புறப்பட எல்லோரும் தயாரானார்கள்.

அம்மா.... அம்மா...

என்ன கண்ணு...

நீயும் எங்க ராயகோட்டை ஜமீனுக்கு அம்மா அப்பா சமாதியை பார்க்க வரிங்களா?

என்று ராஜா கேட்டான் அதற்கு ராதிகா அக்கா

நான் எதற்கு தம்பி நீங்கள் போய் வாருங்கள் இன்று என் பொண்ணை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடல் வரைக்கும் போய் வரணும்.

அவளுக்கு எதுவும் சாப்பிட முடிவதில்லை. காலில் வலி அதிகமாக இருக்கு என்றும் சொல்கிறாள். அவளால் நடக்க முடியவில்லை. குதிக்கால் வீக்கமாக இருக்கு. ஓசூர் போய் நிர்மலா டாக்டர் கிட்டே டோக்கன் போட்டு விட்டு வந்து இருக்கிறார் என் மாப்பிளை.

அம்மா நம்ம வீட்டில் டாக்டர் இருக்காங்க இங்கே பார்க்கலாம். எதுக்கு போய் ஆயிரம் ரூபாய் செலவு செய்ய வேண்டும்?

ஓ......

ஆமா இல்ல....

லிஷார்தா டாக்டர் தான் அம்மா அவங்க பார்ப்பாங்க.

இவங்க பேசிக்கொண்டு இருக்கும் நேரம் பார்த்து லிஷார்தா அங்கே வரவும் சரியாக இருந்தது.

ஆண்ட்டி என்ன என்ன ஏதோ ஹாஸ்பிடல் அது இது என்று பேசினீர்கள்.

ஓ அதுவா

ஒன்னும் இல்லை இவங்க பொண்ணுக்கு உடம்பு சரி இல்லை என்று சொல்கிறார்கள். ஓசூர் ஹாஸ்பிடல் போய் காட்டுவதாக சொன்னார் அதான்.

ஆண்ட்டி உங்க பொண்ணு இங்கே வர முடுயுமா?

வந்தால் கூப்பிடுங்க?

சரி இருமா மாப்பிள்ளை வீட்டில் தான் இருக்கிறார். அவரை உடனே அழைத்து வர சொல்கிறேன் என்று ராதிகா அக்கா போன் போட்டு அவங்க மகள் இடம் விஷயம் சொல்ல. இதோ இப்போதே புறப்பட்டு வருகிறேன் என்று சொல்ல.

கண்ணு மாப்பிளை பாப்பாவை அழைத்துக் கொண்டு வருவதாக சொன்னார் என்றார் ராதிகா அக்கா.

சொல்லி முடிப்பதற்கு முன்பாக ராதிகா அக்காவின் மகளும், மாப்பிள்ளை யும் ஒரு வண்டியில் வந்து இறங்கினர்கள்.

ராதிகா அக்காவின் வீடு ரொம்ப தூரத்தில் இல்லை.

மூன்றாவது தெரு தான் அதனால் போன் பண்ண உடனே புறப்பட்டு வந்து விட்டார்கள்...

ஆஹா... என்ன டாக்டர் இந்தியா விற்கு வந்து தொழில் ஆரம்பித்து விடீர்கள் போல் இருக்கே! என்று சொல்லியப்படி

லிஷார்தாவின் அப்பா பிரவேஷ் வந்துக் கொண்டு இருந்தார்..

வாங்க உட்காருங்க என்று சொல்லிவிட்டு லிஷார்தா வீட்டின் உள்ளே அவள் ட்ராவில்ஸ் பேக் திறந்து BP. செக் மெட்டிரியல் ஸ்டேதஸ்கோப் எடுத்து செக் செய்யும் போது சமையல் அறையில் இருந்து ராதிகா அக்கா எல்லோருக்கும் காபி கலக்கி எடுத்துக் கொண்டு வந்தாள்.

எல்லோருக்கும் காபி பரிமாறிவிட்டு உள்ளே போனார் அக்கா.

என்ன செய்யுது மா? என்று கேட்க அவள் எல்லாம் சொல்ல

டாக்டர் லிஷார்தா..

உனக்கு ஒன்னும் இல்லை மா? உடம்பில் சக்தி இல்லை.

காய்கறிகளை நிறைய சாப்பிடணும். இப்போ டானிக் மாத்திரை எழுதி தருகிறேன்.

ஒரு வாரம் சாப்பிட்டு பாருங்கள் சுமாராக இருந்தால். மீண்டும் அதே மாத்திரை தொடர்ந்து சாப்பிடுங்க சரியாக போகும்.

என்று எழுதி கொடுத்து அனுப்பினாள்.

ஆஹா...

இங்கே ஒரு கிளினிக் ஆரம்பித்து விடலாம் போல் இருக்கு.

செய்யுங்கள் உங்க பொண்ணு டாக்டரை ராஜா விற்கு கலியாணம் செய்து விட்டு இங்கேயே எல்லோரும் இங்கே வந்து விடுங்கள்.

என்றாள் ராதிகா அக்கா..

ம்ம்ம்

எல்லோரும் ரெடியாகுங்கள் ராயகோட்டை ஜமீனுக்கு போய் வரலாம் என்று சொல்லிக்கொண்டு பரவேஷ் வரவும் எல்லோரும் சரி என்று கிளம்பி போக

ராஜா செடில் இருந்து கார் எடுத்துக்கொண்டு வந்தான்.

அந்த B2. குருநகர் போலீஸ் ஸ்டேஷனில் ஏகப்பட்ட கூட்டம். அமைச்சர் மகன் மரகததின் பாடியை போஸ்ட் மார்டம் செய்த டாக்டர் போலியாக சான்றிதழ் கொடுத்து விட்டதாக புரளி.

அவன் திட்டமிட்டு தான் கொலை செய்து இருக்கிறார்கள்.ஹார்ட் அட்டாக் இல்லை.

அதிகம் சாராயம் குடித்து நெஞ்சு வெடிச்சும் சாகவில்லை என்று..

அந்த கொலையாளிகள் யாரு என்று இன்னும் கண்டு பிடிக்கவில்லை?

சும்மா கண் துடைப்புக்கு தான் போலீஸ்

போலீஸ் கரன்சியை வாங்கி கொண்டு நாடகம் ஆடுவதாக.

இந்த கொலை சம்மந்தமான ரகசியங்கள். விஷயங்கள் எல்லாம் போலீஸ் தரப்புக்கு தெரியும்.

கட்சிக்காரர்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடுதுகின்றனர்.சாலை மறியல் வேறு.

இந்த கொலைக்கு பின்னணியாக எதிர் கட்சி பிரமுகர்கள் இருப்பதாகவும். அவர்களின் தூண்டுதலில் தான் இந்த கொலை நடந்து இருக்கிறது. இந்த கொலைக்கு பல எதிர் கட்சிகாரர்கள் சம்மந்தப்பட்டு இருக்கிறார்கள்.

இந்த கேஸ் சி.பி. ஐ. க்கு மாற்ற வேண்டும் என்று சொல்லி பூசல் உண்டு பண்ணி போராட்டம் செய்கின்றனர்.

இது இப்படி இருக்க கமிஷனர் பையன் சாவிற்கும் இதற்கும் தொடர்பு உண்டு. இரண்டிற்கும் அரசியல் காழ்ப்புணர்ச்சி தான் காரணம்.

இதை தீவிரமாக விசாரணை செய்ய விசாரணை கமிஷன் வைக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்து தான் போராட்டம் நடக்கிறது இந்த செய்தி தமிழ் நாடு முழுவதும் படித்து மக்கள் போலீஸ் மீது கொஞ்சமும் மரியாதை இல்லாமல் ஆகி விட்டது என்கின்றனர்.

ஆமாங்க இந்த பில்லி சூனியம்...இது உலகில் இருக்கா இல்லையா?

இந்த கேள்விக்கு என்ன பதில்?

ஆமாம் பில்லி சூனியம் என்பதும் இருக்கு பேய் பிசாசு, ராட்சசி என்பதும் இருக்கு.

இப்படி தான் நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து நம்பப்பட்டு வருகிறது.

எதிரிகளை நேரில் அழிக்க முடியாதவர்கள் அவர்களை மறைமுகமாக அழிக்க நினைத்து தான் இந்த யுக்தியை கையால்கின்றனர்.

அதன் ஒரு பகுதி தான் இந்த பில்லி சூனியம் வைக்கிறது என்பது.

இரவில் தூங்க விடாமல் செய்யும் எந்த உருவத்திலும் வரலாம்.

இப்படி செய்வினை செய்து யாருக்கு வைக்க வேண்டுமோ அவர்களின் ஜாதகத்தில் சந்திரன் கெட்டு இருக்க வேண்டும்.

தொடர்ந்து அவன் கிராகங்கள் கெட்டுப் போய் இருக்க அதனை தொடர்ந்து கோச்சாரதில் சந்திரனின் நிலையும் கெட்டு இருந்தால் மட்டும் செய்யும் செய்வினையானது செய்கின்றவர்களை எதிரிகளை தாக்கும் இல்லை என்றால் அவர்களின் ஜாதகத்தில் சந்திரன் பலமாக இருந்தால் ஒன்னும் செய்ய முடியாது. அது அவர்களை தாக்கினாலும் ஒன்னும் நடக்காது

செய்த எதிரிக்கு தற்கொலை எண்ணம் வரும் அவர்கள் பைத்தியம் பிடித்தவர்களைப் போல் மாறி விடுவார்கள்.

தனக்கு தானே பேசிக்கொள்வார்கள்.

சிரிப்பார்கள். ஓடுவார்கள், ஆடுவார்கள்.

ஆடை அவிழ்ந்துப் போனால் கூட அவர்களுக்கு கூச்சம் இருக்காது.

அவர்களுக்கு தோல் பட்டை முதல் கண்ணுக்கால். முழங்கை. இடுப்பு, என்று 9. இடங்களில் வலி இருக்கும்.

மூட்டுக்கு மூட்டு வலி இருக்கும். களிமண் அல்லது மைதா மாவில் அல்லது துணியில் பொம்மை கை கால்கள், தலை கண்கள் என்று மனித உருவம். பெண்ணாக இருந்தால் பெண் பொம்மை. ஆணாக இருந்தால் ஆண் பொம்மை செய்து அதற்கு மஞ்சள் பூசி குங்குமம் பொட்டு வைத்து பெண்ணாக இருந்தால் வளையல் பெண்கள் எப்படி

இருப்பார்களோ அப்படி செய்வார்கள்.

அதற்கு ஞாயிற்றுக் கிழமை அம்மாவாசை நாள் சுடுகாட்டில் இரவில் நடு ஜாமத்தில் பூஜை தொடங்குவார்கள் காளி தேவியின் சிலை அதற்கு மாலைப் போட்டு 1008அல்லது 108. என்ன செய்ய வேண்டும். உயிர் பலி என்றால் 1008. இல்லை கை கால் வராமல் செய்ய 108. முறை மந்திரம் சொல்லி ஜாபீப்பார்கள். மந்திரம் உச்சரிக்கும் போது ஆயிரம் தடங்கல் வரும் அப்போது மந்திரம் சொல்வதை நிறுத்தாமல் வசியம் செய்த காளி தேவி பூஜை செய்து ஏவல் பிசாசை வரவழைத்து ஏவி விடுவார்கள்.

கண்ணுக்கு கண்ணு

என்றும் உயிருக்கு உயிர் என்றும் கட்டு போடுவார்கள்.

அது செய்யும் போது தலசன் குழந்தை மண்டை ஓடு எதிரில் இருக்கும். ரத்தத்தில் பொறி சோறும் கலந்து ஏறிவார்கள்.

அதை கொல்லி வாய் பிசாசுகள் மேலே எறிவது ஒன்று கூட கீழே விழாமல் அப்படியே சாப்பிடும். ஒன்று அல்ல பல பிசாசுகள்.

இந்த மந்திரம் ஜபிக்கும் போது சரியாக உரு ஏற்ற வேண்டும். இதில் எதாவது தவறும் பட்சத்தில் பூஜை செய்பவர்கள் யாராக இருந்தாலும் அந்த பிசாசுகள் உயிர் பலி வாங்கி விடும்.

யாருக்கு செய்வினை வைத்தார்களோ அவர்களின் உடல் நிலை மாற்றம் ஆகும்.

முதலில் ஆணிகள் அல்லது குண்டுசிகள் இரண்டுகால்களின் பாதம். இரண்டு உள்ளங்கைகள் நெற்றி

மார்பு இரண்டு முட்டிகள் என்று ஒன்பது இடங்களில் உரு ஏற்றி மந்திரம் ஓதி ஒன்று ஒன்றாக குத்துவார்கள்.

இந்த பூஜை சுடுகாட்டில் தான் செய்வார்கள்.

இது செய்தவர்கள் தாங்க முடியாத வலியும் வேதனையும் அவர்களுக்கு ஏற்படும்.

காரணம் இல்லாமல் மூட்டு எலும்புகளிலும் உடம்பு முழுவதும் எரிச்சலும் வலியும் உண்டாகும்.

இந்த அறிகுறிகள் யாருக்கு ஏற்படுகிறதோ அவர்களுக்கு சூனியம் வைத்து விட்டார்கள் என்று தெரிந்துக் கொள்ளலாம்.

இங்கே ஹோஷாலிணியின் குடும்பத்திற்கும் அப்படி தான் சொத்துக்காக வீட்டையும் சொத்தையும் அபகரிக்க திட்டம் போட்டு அவரின் பங்காளிகள் இராவணன் பள்ளத்தில் இருக்கும் ராவணன் நகரில் ஹேஷாலிணியின் குடும்பம் இப்படி தான் அழிந்து போனது....

இப்போ ஹோஷாலிணியின் ஆவி தான் அவர்களின் குடும்பத்தை யாரெல்லாம் அழித்தார்களோ அவர்களை பழி வங்காமல் விடாது....

இப்போ மர்டர்..3.

யாரு....????????

≤≤≤≤≤≤≤≤≤≤≤≤≤≤≤≤≤≤≤≤≤≤≤≤≤≤≤≤≤≤≤≤≤≤≤≤≤

தொடரும்...

»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»

நீங்கள் விரும்பும் கதைகள்

X
Please Wait ...