ஔவையார் அருளிய விநாயகர் அகவல் இதன் ஆசிரியர் ஔவையார் (14-ஆம் நூற்றாண்டு)
அதற்க்கு அடுத்து காலத்தால் முந்தய நக்கீரதேவர் அருளிய மற்றொரு விநாயகர் அகவல் இரண்டும் இடம்பெற்றுள்ளது.
மேலும் அனைவரும் அறிந்த கந்தர் சட்டி கவசம். இதனைப் எழுதியவர் தேவராய சுவாமிகள் என்னும் அருளாளர் ஆகும் . அடுத்து பாம்பன் சுவாமிகள் எழுதிய சண்முகக்கவசம் என்னும் அரிய நூலும், சிவகவசம் எனும் மேன்மையான கவச நூலும் இடம் பெற்றுள்ளது
இவை ஐந்தும் மனிதர்களின் வாழ்வியலுக்கு
கவசங்கள் போல் இருந்து அவர்களைக் காக்கும் ஆற்றல் உடையது.
கந்தசட்டி கவசம் எனும் நூல் அந்தமான் தீவுகளில் கிடைத்த ஒரு பண்டைய ஓலைச் சுவடிகளில் இடம்பெற்ற
உண்மையான திருத்தப்பட்ட ஒரு முழு நூல் .
சித்தர்களின் அருளால் எனக்குக்கிடைத்ததை நான் உங்களுடன் பகிர்கிறேன்.
இதில் இடம்பெற்றிருந்த சில இடைச்சொருகல்களும் நீக்கப்பட்டுள்ளது .