Experience reading like never before
Sign in to continue reading.
Discover and read thousands of books from independent authors across India
Visit the bookstore"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh PalAchievements
கதை நோக்கு, குடும்பம் என்ற அமைப்பை மையமிட்டும் கணவன் மனைவி என்ற உறவினை சுற்றியுமே பின்னப்பட்டு சுழன்று கொண்டிருக்கிறது. அவை கு.ப.ராஜகோபாலனின் சிறுகதைகளை ஒத்தது என்றும் சொ
கதை நோக்கு, குடும்பம் என்ற அமைப்பை மையமிட்டும் கணவன் மனைவி என்ற உறவினை சுற்றியுமே பின்னப்பட்டு சுழன்று கொண்டிருக்கிறது. அவை கு.ப.ராஜகோபாலனின் சிறுகதைகளை ஒத்தது என்றும் சொல்லலாம். இதில் சிலக் கதைகளுக்கு இலக்கியத்தரச் சான்றிதழை எள்ளளவும் ஐயமின்றி அளிப்பேன். குறிப்பாக மலரும் முள்ளும், கல்யாணமாம் கல்யாணம், கடவுள் தந்த ஓய்வு போன்றவற்றை குறிப்பிட்டே ஆக வேண்டும். ஒவ்வொரு கதையும் வாழ்வினோர் அங்கத்தை காட்டி வாழ்க்கையை காட்டும் கருத்துடையதாய் சமைக்கப்பட்டிருப்பது ஆழம் ஆம். அந்த ஆழம் என் தந்தையின் அனுபவத்தின், சமூக கவனிப்பின், இலக்கிய ரசனையின், பரந்துப்பட்ட துறை அறிவின் வெளிப்பாடு. தலைப்பிரசவம், ஸ்ரீ சித்தானந்த சுவாமிகள், காதலர் தினம் முதலிய கதைகள் தென்றல் இதழில் பெரும் வாசகர் வரவேற்பைப் பெற்ற கதைகளாகும். அவ்வகையில் வெளிப்படையாய் அதன் தரத்தை உணர்ந்து கொள்க. இதோடு தரவேண்டிய இன்னொரு செய்தியும் உண்டு, எழுத்து வகையான் இலக்கியம் ஆக்குவது என் தந்தையின் முதற்பணி அல்ல. கிட்டும் நேரத்தில் கிட்டும் நோட்டு புத்தகத்தில் இவற்றை அவர்கள் விளையாட்டாக செய்தார்கள் என்றே சொல்வேன். சிறுகதை என்ற இலக்கிய வடிவத்தின் குரல், கருத்து, பாத்திர குண நலன், தமிழது நடை நலன் ஆங்காங்கே மெச்சும் வண்ணமிருப்பது என் தந்தையது செல்வமே ஆம். இத்தகைய நற்கதைத் தொகுப்பை தொகுப்பிலக்கணம் கொண்டு கால அடிப்படை, கருத்தடிப்படை என்றெல்லாம் கட்டித் தொகுக்கவில்லை. எழுத்தும் கருத்தும் சுதந்திரமானது. கதைக்கு எதற்கு கட்டு? பிடித்த தலைப்பைப் பிரித்து எடுத்து படித்து ரசித்து இன்புறுவீராக.
வள்ளலாரின் ஜீவகாருண்ய ஒழுக்கம் என்னும் இந்நூல் கிடைத்தற்கு மிகவும் அரிது. இதில் ஜீவகாருண்யத்தை உலகோர்க்கு எடுத்து சொன்ன வள்ளல் பெருமானார் அதை எவ்வாறு கடைப்பிடிப்பதென்
வள்ளலாரின் ஜீவகாருண்ய ஒழுக்கம் என்னும் இந்நூல் கிடைத்தற்கு மிகவும் அரிது. இதில் ஜீவகாருண்யத்தை உலகோர்க்கு எடுத்து சொன்ன வள்ளல் பெருமானார் அதை எவ்வாறு கடைப்பிடிப்பதென்பதையும் அதன் நெறியும் ஆழ் ஞானத்தையும் உரையாக விளக்கக் கூறுகிறார்.
தென்றல் இதழ் இந்நூலை அனைத்து மக்களும் படிக்கும் வண்ணம் இணையத்தில் நூலாக வெளியிட்டுள்ளது. வள்ளல் பெருமானார் ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோலென்றும் அதன் பேறென்பதே உலகோர் தேகத்தை ஆலயமாக எண்ணி அவர்களின் குறைகளை இயன்றவகையில் தீர்பதுவும் எல்லா உயிரும் இன்புற்று வாழ்தலையே தனது சுகமாக கொள்ள வேண்டும் என்பதையும் இறை வழிபாட்டிற்கு நிகராக வலியுறுத்துகிறார்.
அதன்வகையில் இந்நூலினால் கிடைக்கும் தொகையானது மக்களின் பசிப்பிணி தீர்க்கும் பொருட்டு இன்றளவும் இயங்கும் வள்ளல் பெருமானின் சத்திய தரும சாலைக்கு அனுப்பி வைக்கப்படும்.
அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி
ஞானத்தைத் தேட வைத்த தமிழ் தாய்க்கு என் முதல் வணக்கம். உலக இயக்கத்தோடு இணைந்து வாழ்ந்த நம் முன்னோர்கள் இன்றைய அறிவியலார் விளக்கக் கூடிய அளவிலே தங்களது கருத்துக்களை முன்வ
ஞானத்தைத் தேட வைத்த தமிழ் தாய்க்கு என் முதல் வணக்கம். உலக இயக்கத்தோடு இணைந்து வாழ்ந்த நம் முன்னோர்கள் இன்றைய அறிவியலார் விளக்கக் கூடிய அளவிலே தங்களது கருத்துக்களை முன்வைத்து இருந்தாலும் ஞானிகளின் கருத்துக்கள் ஆச்சரியமாகவே உள்ளது. இயல்பான வாழ்வினிலே சுகத்தைத் தேடும் மனிதனானவன் எவரும் இல்லாத தனிமையோடு சுகமாக வாழும் ஞானியைக் கண்டு வியந்து போகிறான். வாழத் தேவையான சூத்திரத்தை தரும் அவர்கள் வாழ ஆசை இல்லாமல் இருப்பதைக் கண்டு குழப்பம் அடைகிறான். ஞானம் பற்றியும் ஞான வாழ்வைப் பற்றியும் அறியத் தொடங்கும் லௌகீக மனிதனுக்கு இந்நூல் நிச்சயம் உதவி செய்யும் என நான் நம்புகிறேன். ஞானவாதிகளின் தத்துவங்களை எளிதில் விளக்க மகாபாரத கதைகளை நூல் முழுதும் தேவையான இடத்தில் உதாரணமாய்க் காட்டியுள்ளேன். வரலாற்றை நேரடியாக படிப்பதை காட்டிலும் புனைவு கதைகளாய் படிக்கையில் பசுமரத்தாணி போல் மனதில் பதிகிறது. அதேபோல தத்துவங்களை வெறும் வார்த்தைகளாய் அல்லாமல் கதைகளாய் தெரிந்து கொள்ளும் போது எளிதில் புரிகிறது. நீங்களும் இவ்வுலகமும் என்றும் அமைதியாகவும் பரிபூரண நிம்மதியோடு இன்புற்று வாழ உதவி செய்வதற்கு முயல்வதே இந்நூலின் முதற்கடனாகும். அணுவளவே ஞான துளிகள் இடம்பெற்றிருக்கும் இந்நூலை இயம்புவதற்கு அறிவும் அனுபவமும் நூல் வழியே எமக்களித்த அமர நிலை எய்திய எனது ஞான குருமார்கள் அனைவருக்கும் அடக்கத்துடனே நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இச்சிறு நூலுக்கும் சிறப்பான அணிந்துரை வழங்கிய சொல்லாய்வுச் செல்வர் சே.சூரியராஜ் அவர்களுக்கும் நூல் வடிவமைப்பிற்குதவிய அண்ணன் ஸ்ரீராம் அவர்களுக்கும் ஞானத்தை தேடி வந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் பணிவான வணக்கங்கள் நன்றிகள்.
Are you sure you want to close this?
You might lose all unsaved changes.
The items in your Cart will be deleted, click ok to proceed.