Meenatchi Annamalai
Writter
Writter
· நான் எழுதிய முதல் சிறுகதையே ’தினமலர் நிறுவனர் டி.வி.ஆர்.நினைவு சிறுகதை போட்டி -2015’ல் ஆறுதல் பரிசு பெற்றது. ‘கோபுர உச்சியிலே’எனும் அச்சிறுகதை மூன்றாம் பாலின பெண்ணின் வாழ்க்கைப் போராட்டம், வெற்றி பற்றியது. இதுவே எனது எழRead More...
· நான் எழுதிய முதல் சிறுகதையே ’தினமலர் நிறுவனர் டி.வி.ஆர்.நினைவு சிறுகதை போட்டி -2015’ல் ஆறுதல் பரிசு பெற்றது. ‘கோபுர உச்சியிலே’எனும் அச்சிறுகதை மூன்றாம் பாலின பெண்ணின் வாழ்க்கைப் போராட்டம், வெற்றி பற்றியது. இதுவே எனது எழுதும் ஆர்வத்தை தூண்டியது, இன்று வரை எழுதியும் வருகிறேன்.
· எனது சிறுகதை ‘வேரைத்தாங்கும் மண்’ தினமலர் நிறுவனர் டி.வி.ஆர். நினைவு சிறுகதை போட்டி -2021’ல் ஆறுதல் பரிசுபெற்றது.
· லேடீஸ் ஸ்பெஷல் பெண்கள் மாதஇதழ் நடத்திய பிரபாராஜன் குறுநாவல் போட்டியில் எனது குறுநாவல் இரண்டாம் பரிசு பெற்றது. இந்நாவல் போராடும் பெண்ணின் தாயுள்ளத்தை சித்தரிக்கிறது. இக்குறுநாவல் ”காலத்தின் சுழற்சியில் பிணைந்த நட்பு” எனும் குறுநாவல்கள் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.
· பைந்தமிழ் இலக்கியப் பேரவை கி.ரா. மறைவினையொட்டி நடத்திய சிறுகதைப் போட்டியில் பங்குபெற்ற எனது சிறுகதை ‘இதுதான் தாய்மையோ’ நவம்பர் – 2021ல் வெளியிடப்பட்ட ”இளஞ்சாரல்மழை” எனும் கி.ரா. நினைவு சிறுகதை தொகுப்பு நூலில் இடம்பெற்றுள்ளது.
· விடியல் இலக்கிய இதழ் நடத்திய உலகளாவிய சிறுகதைப்போட்டி-2021ல் ‘புதிய பார்வை’ எனும் என்னுடைய சிறுகதை ஆறுதல் பரிசுபெற்றது
· சர்வமும் சிவமயம் இணையதளத்தின் முதலாவது ஆண்டு நிறைவை 2021 சித்திரை மாதம் கொண்டாடுவதை முன்னிட்டு சிறுகதைப் போட்டி நடத்தியது. சவுதியில் இயங்கி வருகின்ற தமிழ்தாமு.கொம்இணையதளம் உலகத்தமிழ் எழுத்தாளர்களைக் கெளரவிக்கும் நோக்கில் இந்த பெரு முயற்சியை எடுத்தது. இப்போட்டியில் எனது சிறுகதை இரண்டாம் பரிசுக்கு தேர்வானது. ‘சிப்பிக்குள் முத்து” எனும் சிறுகதைத் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது.
· எழில் கலை மன்றம் பொதிகை மின்னல் மாத இதழ் நடத்திய ஒரு பக்க கதைப்போட்டியில் எனது சிறுகதை ஆறுதல் பரிசுபெற்றது.
· பண்ணாகம். கொம் 15வது ஆண்டு விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட உலகளாவிய சிறுகதைப் போட்டி 2021-ல் மிகச் சிறந்தவை என தேர்ந்தெடுக்கப்பட்ட 46 கதைகளில் (95 புள்ளிகள்) ஒன்றாக இடம் பெற்றுள்ளது. விரைவில் வெளிவர இருக்கும் சிறுகதை தொகுப்பு நூலில் இடம் பெற உள்ளது.
· ‘துகள்’ நிறுவனம் நடத்திய உலகளாவிய சிறுகதைப்போட்டியில் எனது சிறுகதை “வண்ணங்கள்” சிறுகதை தொகுப்பு நூலில் இடம் பெற தேர்வுவாகியுள்ளது.
· பிரதிலிபி இணைய தளத்தில் என்னுடைய சிறுகதைகள் வெளிவருகின்றன. அக்டோபர் 2021-ம் மாத சிறந்த சிறுகதை எழுத்தாளர் சான்றிதழ் பெற்றுள்ளேன்.
· வைகை தமிழ் நாவல்கள் நடத்திய வைகை சிறுகதைப் போட்டி-2021ல் பங்கு பெற்ற எனது சிறுகதை சிறந்த 30 சிறுகதைகளில் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டது.
· சஹானா இணைய இதழ் நடத்திய சிறுகதைப்போட்டி-2021ல் பங்கு பெற்ற எனது சிறுகதை ‘அரைஞாண் கயிறு’ இறுதித் தேர்வுக்கு தெரிவு செய்யப்பட்ட30 கதைகளுள் ஒன்றாக இடம்பெற்றது. ஏப்ரல் 2002-யில் “ஏக்கமும் ஏகாந்தமும்” எனும் என்னுடைய சிறுகதை வெளியிடப்பட்டுள்ளது.
· என்னுடைய பல சிறுகதைகள் தமிழ் வார, மாத இதழ்களில், தீபாவளி மலர்களில்&Read Less...