Experience reading like never before
Read in your favourite format - print, digital or both. The choice is yours.
Track the shipping status of your print orders.
Discuss with other readersSign in to continue reading.
பூபதி பெரியசாமி - சுயவிவரக் குறிப்பு பூபதி பெரியசாமி இராச.பெரியசாமி (பாவேந்தரின் குயில் இதழின் துணை ஆசிரியர்), பாக்கியம் அம்மாள் ஆகியோருக்கு மகனாக 19.04.1964 அன்று புதுச்சேரியில் பிறந்தார். இயற்பியலில் முதுகலைப் பட்டமும் கல்விRead More...
பூபதி பெரியசாமி - சுயவிவரக் குறிப்பு
பூபதி பெரியசாமி இராச.பெரியசாமி (பாவேந்தரின் குயில் இதழின் துணை ஆசிரியர்), பாக்கியம் அம்மாள் ஆகியோருக்கு மகனாக 19.04.1964 அன்று புதுச்சேரியில் பிறந்தார். இயற்பியலில் முதுகலைப் பட்டமும் கல்வியியலில் இளங்களைப் பட்டமும் பெற்றுள்ளார்.
அரசுப் பள்ளியில் 35 ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியர் பட்டதாரி ஆசிரியர் விரிவுரையாளர் என பல்வேறு நிலைகளில் பணியாற்றிய இவர், தற்போது புதுச்சேரி முத்தரையர் பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியின் துணை முதல்வராகப் பணி செய்கிறார். மேலும் கூடுதலாக புதுச்சேரி கல்வித் துறையில் தேர்வுப் பிரிவு பொறுப்பாளராகவும் உள்ளார்.
நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியிருக்கும் இவர் இதுவரை ஐந்து சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார். இவரது முதல் நூலான “ஆளுமைச் சிறுகதைகள்”, குழந்தைகள் இலக்கியப் பிரிவில் புதுச்சேரி அரசின் கலை பண்பாட்டுத் துறையால் “நேரு குழந்தைகள் இலக்கிய விருது” பெற்றது. புதுச்சேரி அரசின் மாநில நல்லாசிரியர் விருது பெற்றுள்ள இவர், மாநில நாட்டு நலப்பணித்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளராக ஐந்து ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.
சிறுகதைகளில் மட்டுமே பயணிக்கும் இவரது சிறுகதைகள் பல முன்னனி மாத வார இதழ்களில் தொடர்ந்து வெளியாகிறது. சிறுகதைச் செல்வர், இலக்கியச் செம்மல், சிறுகதைச் சித்தர், எழுத்துத் திலகம் போன்ற விருதுகளைப் பெற்றுள்ள இவரது சிறுகதைகள் சர்வதேச அளவிலும் தமிழக அளவிலும் பல பரிசுகளைப் பெற்றுள்ளது சிறப்பாகும்.
Read Less...
‘கனவு’ நனவாகிய பொழுதுகள்… (சிறுகதை) பூபதி பெரியசாமி மின்சார வ Read More...
Are you sure you want to close this?
You might lose all unsaved changes.
India
Malaysia
Singapore
UAE
The items in your Cart will be deleted, click ok to proceed.