Experience reading like never before
Read in your favourite format - print, digital or both. The choice is yours.
Track the shipping status of your print orders.
Discuss with other readersSign in to continue reading.
சோழ மண்ணில் பால்ராஜ் இராமதிலகம் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார் நூலின் ஆசிரியர் ராஜேஷ் குமார்.மிகவும் தீர்க்கமான உறுதியான உண்மையான கம்யூனிசுட்டாக வாழ்ந்து மறைந்த ஆறுமுகம் அவர்களால் இப்பெயர் இவருக்குச் சூட்டப்பட்டது. Read More...
சோழ மண்ணில் பால்ராஜ் இராமதிலகம் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார் நூலின் ஆசிரியர் ராஜேஷ் குமார்.மிகவும் தீர்க்கமான உறுதியான உண்மையான கம்யூனிசுட்டாக வாழ்ந்து மறைந்த ஆறுமுகம் அவர்களால் இப்பெயர் இவருக்குச் சூட்டப்பட்டது. 2022 ல் பாரம்பரிய சித்த மருத்துவ குடும்பமான ஐயப்பன் விஜயலட்சுமி தம்பதியரின் மகள் சுதாவுடன் தமிழ் முறைப்படி தமிழினத் தலைவர் பிரபாகரன் மகிவதனி ஆசியுடன் திருமணம் நடைபெற்றது. இவர்களின் முதல் பெண் குழந்தைக்குக் கயல்விழி எனப் பெயர் சூட்டியுள்ளனர். இளம் வயது முதல் தனது சிற்றப்பா ஆறுமுகத்தை அதிகம் பின்பற்றி வந்தார். எனவே இயல்பாகவே மக்களுக்கான உண்மையான அரசியல் மீது ஈடுபாடு ஏற்பட்டது, மேலும் கல்லூரி காலத்தில் பல கதைகளும் கவிதைகளும் எழுதியுள்ளார், அவை பொருளாதார மற்றும் முறையான வழிகாட்டுதல் இல்லாமையால் புத்தகங்களாக வெளிவரவில்லை, "கானகத்தில் ஒரு தீ" கதையும் 2016 ல் எழுதியதுதான், தமிழ்த்தேசிய கருத்தியல் ஈர்ப்பினால் 2019 ம் ஆண்டில் எழுதிய ஈழம் மற்றும் தலைவர் பிரபாகரன் குறித்தான வரலாற்று நூலான "மீண்டெழும் பிரபாகரம்" என்ற நூலைத் தனது முதல் புத்தகமாக வெளியிட்டார். அந்நூலுக்கு 2024ம் ஆண்டில் தமிழ்த் தேசிய இளம் இலக்கியர் விருதினை எழுதிரள் அமைப்பும் புரட்சி எழுத்தாளர் விருதினை தென்புலம் நூலங்காடியும் கொடுத்துப் பாராட்டியது, தமிழ்க் கொடி இதழில் ஆசிரியராகவும் சில காலம் பணியாற்றியுள்ளார்.
Read Less...
ஆளும் வர்க்கம் தன் உரிமைக்காகப் போராடும் மக்களுக்கு ஆதரவாக இருந்ததும் இல்லை இனி வரும் காலங்களில் இருக்கப் போவதுமில்லை என்ற போலி சனநாயக நிதர்சனத்தை உணர்ந்த மக்கள்.. கிளர்
ஆளும் வர்க்கம் தன் உரிமைக்காகப் போராடும் மக்களுக்கு ஆதரவாக இருந்ததும் இல்லை இனி வரும் காலங்களில் இருக்கப் போவதுமில்லை என்ற போலி சனநாயக நிதர்சனத்தை உணர்ந்த மக்கள்.. கிளர்ந்தெழுந்து தனக்கான அரசை தானே உருவாக்க முனையும் ஒரு புரட்சிகர படைப்பு....
- பெண்மையின் பேராண்மை வேலுநாச்சியார் நூலின் ஆசிரியர் - சேயோன்
நெஞ்சைத் துளைக்கும் ஒரு கதை மிகவும் அழகான இயற்கையுடன் காட்டின் ஒரு பகுதியில் மறைத்துக் கொண்டு நாமும் அவர்களுடன் பயணிக்கும் ஒரு அனுபவம் உண்டானது, சில இடங்களில் போராளி குழுக்களுடனும் அரசு அதிகாரிகளுடனும், பாவிகளால் பாதிக்கப்பட்ட பெண் ஒருத்தி இந்நாட்டினையே ஆளப்போகிறாள் என நுணுக்கமாக ஆசிரியர் கதையை அடுத்த கட்டத்திற்குக் கடத்தியுள்ளார்.
- பவானி
Are you sure you want to close this?
You might lose all unsaved changes.
India
Malaysia
Singapore
UAE
The items in your Cart will be deleted, click ok to proceed.