எங்க அப்பா காசுல செலவு பண்ற வரைக்கும் எனக்கு காசோட அருமையும் தெரியாது வீட்டோட நிலவரமும் தெரியாது...அவரு சம்பளத்தை சுதந்திரமா நான் செலவு பண்ணின மாதிரி என் சம்பளத்தை அவர் செலவு பண்ணினது கிடையாது....
கார்த்தி சௌந்தர் ஆகிய நான் ஒரு சென்னைவாசி.. மென்பொருள் பொறியாளராக பணிபுரிகிறேன். அத்தா கதையை புத்தகமாக வெளியிடுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இந்த கதை எனது இதயத்திற்கு மிக நெருக்கமான கதை ஒவ்வொரு வரியும் எனக்குள் புதைந்து இருக்கிறது.