You cannot edit this Postr after publishing. Are you sure you want to Publish?
Experience reading like never before
Read in your favourite format - print, digital or both. The choice is yours.
Track the shipping status of your print orders.
Discuss with other readersSign in to continue reading.

"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Palசிவகங்கை மாவட்டத்தில் சாலைக்கிராமம் என்னும் ஊரில் என்
பிறப்பு.அழகான கிராமத்து வாழ்க்கை. அப்பா முருகேசன்,அம்மா
சித்ரா, என்னை பெற்றவர்கள், தம்பி -சிம்சோன், தங்கை -ஜெய
பிரியா என்னோடு பிறந்தவர்கள், கணவர் -ரூபன் என்னை
மணந்தவர் கவிதை புத்தகமானதில் பெரும்பங்கு அவரது.
சிறுவயதில் இருந்தே எனக்கு தனிமையும், தனிமையால் புத்தகமும்
நண்பர்களாயின. ஒவ்வொறு கவிதையும் எழுதி முடிக்கும் போது
எதையோ சாதித்தது போல மகிழ்ச்சியும், அமைதியும் என்னை
நிரப்பும் . சிந்தனைகள் எல்லாம் வரிகளாவது அத்தனை எளிதல்ல
என்பதாலோ ? இல்லை வரிகளால் என் வலிகளையும் ,
வழிகளையும் இறக்கி வைக்க முடிந்ததாலோ?தெரியவில்லை !
இதை வாசிக்கும் வாசக நண்பர்கள் யாவருக்கும் என்
சிந்தனைகளையும் என் உணவுகளையும் சேர்க்க முடிந்தால் அதுதான் இந்த முயற்சியின் வெற்றி . கவிஞனின் வெற்றி.
கதைகள், கவிதை புத்தகங்கள் மீது அலாதி பிரியம் எனக்கு .
வாசிக்க வாசிக்க வாசிப்பு ஒரு கால கட்டத்தில் வரிகளானது.
வரிகள் கவிதையானது. கவிதை தொகுப்பானது.
வாழ்க்கை ஒரு அழகான புத்தகம்.
புத்தகங்கள் மீது நான் கொண்ட காதல்.
இன்று நான் ஒரு புத்தகம் எழுத உத்வேகம் தந்தது.
சில நேரம் சாதனைகள் புத்தகங்கள் ஆகின்றன.
சில நேரம் புத்தகங்கள் சாதிக்கின்றன.
இந்த கவிதை புத்தகமும் சாதிக்க உங்கள் அன்பை வேண்டும்.
உங்கள் குருபிரியா
It looks like you’ve already submitted a review for this book.
Write your review for this book (optional)
Review Deleted
Your review has been deleted and won’t appear on the book anymore.
குருபிரியா
கவிஞன் ஆக வேண்டும்
என்று நான் கனவு கண்டதில்லை…
ஆனால்
காலத்தின் விரல்கள்
என்னை மெதுவாக
கவிதையின் வழியே
நடத்தி வந்தன.
சிறு வயதிலிருந்தே
தமிழ் மீது
அழியாத பற்று…
ஆழமான காதல்…
அந்த காதலின் விளைவாக
சிறு சிறு சொற்கள்
கவிதைகளாக மாறி
என் உள்ளத்தை மகிழ்வித்தன.
அந்த பயணத்தின் முதல் அடியாக
“தமிழ் அமுதம் – பகுதி ஒன்று”
சில தலைப்புகளில்
கவிதை மலர்களாக
வாசகர்களை சென்றடைந்தது.
இன்று
அந்தப் பயணம்
இரண்டாம் பகுதியாக
உங்கள் கரங்களில் மலர்கிறது.
இந்த நூல் வெளிவர
அன்பும் ஆதரவும் அளித்த
எனது பாசமிக்க கணவர்
உயர்திரு சங்கர் அவர்களுக்கு
என் இதயப்பூர்வமான நன்றிகள்.
முதல் தொகுப்பை
அன்புடன் வாங்கி
வாசித்த அனைத்து வாசகர்களுக்கும்
என் பணிவான நன்றி.
என் வாழ்வின்
முதல் ஆசான்களான
மறைந்த என் பெற்றோர்
சுப்பிரமணிய ஐயர் – சரஸ்வதி
தம்பதியர்களின்
பொற்பாதங்களில்
இந்தக் கவிதைப் பூக்களை
பணிவுடன் சமர்ப்பிக்கிறேன்.
இந்நூல்
சமுதாயத்திற்கான
ஒரு சிறு சமர்ப்பணமாகவும்
மகிழ்வுடன் அர்ப்பணிக்கப்படுகிறது.
இந்தப் பக்கங்களில்
உண்மை இருக்கலாம்,
வலி இருக்கலாம்,
மௌனம் இருக்கலாம் —
ஆனால்
பொய் இருக்காது.
ஏனெனில்
கவிதையே
என் பயணத்தின்
முத்திரை---
-- ஆசிரியர்
சுதாசங்கர்✍️
India
Malaysia
Singapore
UAE
The items in your Cart will be deleted, click ok to proceed.