தான் இருக்கும் கிராமத்தின் மனிதர்களையே, தன் குடும்பமாக உறவுகளாக நினைத்து வாழும் நாயகி. குடும்ப உறவுகளில் பெரிதாக நம்பிக்கை இல்லாமல் இருக்கும் அமெரிக்க குடிமகனான நாயகன், தமையனின் திருமணத்திற்காக இந்தியா வருகிறான்.
தன் தங்கையை போன்ற பெண்ணிற்கு இழைக்கப்பட்ட அநியாயத்திற்கு எதிராக குரல் கொடுத்து, அவளுக்கு ஒரு நல்வாழ்வை ஏற்படுத்தித்தர முயற்சி செய்யும் நாயகியை எதிர்பாராதவிதமாக சந்திக்கிறான் நாயகன்.
பெண்மையின் ஆளுமை பிடித்துப்போக இருவருக்குமிடையே ஒரு புரிதல் உருவாகிறது. இந்தப் புரிதலின் அடுத்த கட்டம் என்ன? நாயகனுக்கு குடும்ப உறவுகளில் நம்பிக்கை வந்ததா? நாயகி அவனுக்கு அதை உணர்த்தினாளா? வெவ்வேறான எண்ணங்கள் கொண்ட இருவர் வாழ்வில் ஒன்றிணையும் போது, அவர்களின் வாழ்க்கை முறை எப்படி மாறுகிறது?
பாதிக்கப்பட்ட பெண்ணின் நிலை என்ன? நாயகியின் முயற்சி கைகூடியதா? அந்த பெண்ணிற்கான வாழ்வு கிடைத்ததா? கிராமத்து மனிதர்களின் எண்ணங்களும் நிலைபாடும் எப்படி மாறுகிறது? இரு பெண்களும் அதை எப்படி எதிர்கொள்கின்றனர் என கதையில் வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.
இக்கதையில் முதன் முறையாக கிராமத்து பேச்சு வழக்கை முயன்றுள்ளேன், தங்களது கருத்தை தெரிவிக்குமாறு வேண்டுகிறேன்.