Share this book with your friends

Mamalai Potruthum / மாமலை போற்றுதும் Payanamum Payana Nimithamum

Author Name: RAJINI PRATHAP SINGH | Format: Paperback | Genre : Travel | Other Details

சேரம்:ஒரு வழிப்போக்கனின் நாட்குறிப்பு

மானுடத்தின் கனவு தான் பயணம். பயணமின்றி  இவ்வுலகம் இல்லை. அகம், புறம் என எல்லாவற்றையும் புரட்டிப் போடும் ஆற்றல் ஒரு சிறு பயணத்திற்கு உண்டு. மரம் போல ஓரிடத்திலயே நின்று, மாறும் காலத்தின் சாட்சியாக நிற்பதைக் காட்டிலும் இரு சிறகுகளை விரித்து வான் எழும்பி காலத்தினூடே உலகைக் காண்பது அற்புதமானது. கூழாங்கல்லில் பல்லாயிரம் ஆண்டுகளாய்ப் பொதிந்த குளுமையை உள்ளங்கையில் உணருங்கள்.  காட்டாற்றின் நெடிய பயணம் தெரியும். வானேகும் பறவையின் உதிர்ந்த சிறகு ஒன்றைச் செவியருகே அசைத்துப் பாருங்கள். பல்லாயிரம் மைல் பயணித்த கதை மௌனமாகக் கேட்கும். புதிய நிலங்கள் நம் மனதைப் புத்துருவாக்கம் செய்பவை. நூல் பல கற்பது அறிஞனாக்கும் எனில் நிலம் பல பார்ப்பதோ பண்பாளனாக மாற்றும்.

கேரளமெனும் கடவுளின் தேசத்தில் உங்கள் கைப்பிடித்து அழைத்துச் செல்லும் கட்டுரைகள் இவை. இளவெயில், அடர்பசுமை, மென்குளிர் போல மனதை வருடிச் செல்லும் ரஜினியின்  மென்சாரல் மொழிநடையை வாசிக்கையில் இலக்கற்ற பயணம் கூட  பயணமே ஓர் இலக்காக மாறிவிடும் உன்னத அனுபவம் தருகிறது.

Read More...
Paperback

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Paperback 370

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

ரஜினி பிரதாப் சிங்

எம்.எஸ். ரஜினி பிரதாப் சிங், கோயம்புத்தூர் மாவட்டத்தில பிறந்து வளர்ந்தவர். ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார். தமிழ் இலக்கணப் புலமையும் ஆங்கிலப் பேச்சாற்றலும் ஒருங்கே கொண்ட தமிழாசிரியர்.  ஆளுமைத் திறன் மேம்பாட்டுப் பயிற்றுநர். தமிழ்நாடு, கேரளம் ஆகிய மாநிலங்களில் இடையறாது சுற்றி வரும் ஓய்வறியாப் பயணி.

தமிழின் முதன்மையான வார இதழான விகடன் குழுமத்தில் புதிய வாகனங்கள் குறித்து தொடர் எழுதியுள்ளார். கேரளத்தின் காடுகளிலும் மலைகளிலும் சுற்றியதில் பெற்ற சிலிர்க்க வைக்கும் அனுபவங்களை விகடனில் தொடராக எழுதினார். அந்தப் பயணக் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். ஒரு ஸ்பூன் வெட்கம் , சூரல் பம்பிய சிறுகான் யாறு ஆகியவை இவரது பிறநூல்கள்.

Read More...

Achievements

+4 more
View All