நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம், இது முன்னோர்களின் மொழி, ஆனால் இன்று நோயின் தாக்கம் என்ன என்பதை உலகமே அறிந்து அவலநிலையை அடைந்தது.சீனாவின் ஊகானில் துவங்கிய கொரானா தொற்று அசுர வேகத்தில் உலகின் பல நாடுகளையும் ஆட்டிப்படைத்தது. காவல்துறை, சுகாதாரத்துறை, துப்புரவுத்துறை தவிர மற்றவைகளின் இயக்கம் நிறுத்தப்பட்டது. இதற்கு காரணம் இயற்கையை பகைத்துக் கொண்டு வாழ்ந்த மனிதனின் வாழ்க்கை முறையே காரணம். இந்நிலையை ஆராய்ந்து உருவாக்கப்பட்ட இப்பயிற்சி கையேடு பலருக்கும் பயனளிக்கும்