எத்தனையோ சுற்றுலாக்களை சென்றிருந்திருப்பீர்கள். இந்த பிரபஞ்சம் முழுவதற்கும் சுற்றுலா சென்றால் எவ்வாறு இருக்கும்? பூமியிலிருந்து ஆரம்பித்து, சூரிய குடும்பம், நமது பால்வழி மண்டலம் மற்றும் நமது பிரபஞ்சம் வரை சென்று இவை எவ்வாறு உருவானது? இவற்றில் நாம் நடத்த இருக்கும் ஆய்வுகள் என்ன என்று பல்வேறு விஷயங்களை சுருக்கமாகவும், எளிமையாகவும் தமிழில் விளக்குகிறது "பிரபஞ்சத்திற்குள் ஒரு சுற்றுலா" என்னும் இந்த சிறிய நூல்