இயற்பியல் உலகில் ஆயிரமாயிரம் கோட்பாடுகள் வந்து கொண்டிருக்கின்றன.ஆனால் இன்றளவும் அறிவியல் உலகை ஆட்டிப் படைத்துக் கொண்டிருப்பது இரண்டு கோட்பாடுகள் தான். ஒன்று ஐன்ஸ்டைனின் சார்பியல் கோட்பாடு மற்றொன்று குவாண்டம் இயற்பியல் கோட்பாடு. இந்த இரண்டு கோட்பாடுகளும் விளக்குவது ஒன்றே ஒன்றைத் தான், அதாவது இந்த கோட்பாடுகள் இந்தப் பிரபஞ்சத்தின் இயங்கு தத்துவத்தைத்தான் விளக்குகிறது. இதில் சார்பியல் கோட்பாடானது பிரம்மாண்ட நட்சத்திரம், கருந்துளைகள், கால வெளி, ஈர்ப்பு விசை என பெரிது... பெரிதினும் பெரிது என்று சென்று உண்மைகளை ஆராய்கிறது.