Share this book with your friends

Aanpaavam / ஆண்பாவம்

Author Name: Udaya.Kathiravan | Format: Paperback | Genre : Poetry | Other Details

மனிதத்தின் அடிப்படை உணர்ச்சி; உணர்ச்சி வெளிப்படும் உணர்வின் அடிப்படைகளுக்கு மனிதபாலினச் சாயங்கள் பூசப்படுவதுண்டு. பாலூட்டப்பட்ட உணர்ச்சிகள் மனிதத்தைத் திரித்துத் போடும்.

சில சாயம் பூசப்பட்ட உணர்ச்சியின் வெளிப்பாடுகள் பாலினத்திற்கு அப்பாற்பட்டவை என்ற கருவைத் தாங்கி நிற்கிறது இக்கவிதைத் தொகுப்பு.

1.   வாலிபனின் பிரிவின் தாகம்

2.   தலைவனின் மனக்கனல்

3.   தந்தைக்கான ஏக்கம்

என முப்பாகங்களாய், மனித உணர்வின்கனம், மனிதத்தின் வலியின் நெருக்கம், சாம்பல்படாத உணர்ச்சியின் கோப்பு, சமூக அறத்தின் திரிபுகளின் முகமூடியை அவிழ்க்கிறது.

Read More...
Sorry we are currently not available in your region.

Also Available On

உதய.கதிரவன்

சிரித்த முகத்தோடு வினையாற்றும் வேள்வியர் உதய.கதிரவன் தேர்ந்த துறையில் தெளிந்து உழைக்கும் திண்மையர். எண்ணியது முடிக்கும் எழுச்சியர். தொட்டதெல்லாம் துலங்க வைக்கும் துடிப்பினர்.

இளமையிலிருந்தே எந்த அணி வகுப்பிலும் தன் முகமே முதல் முகமாக்கும் ஆள்வினை ஆற்றலர். ஆங்கிலச் சூழலில் வாழ்ந்தாலும் தமிழ்த்தவம் அவருக்கு அதிகம் பிடிக்கும். எங்கும் ஒதுங்காமல் எவரையும் ஒதுக்காமல் மனித சங்கமம் இலக்காகக் கொண்ட கதிரவன் தமிழினம், தமிழ் இலக்கியம் எனும் பதாகையை உயர்த்திப் பார்ப்பவர்.

தமிழ்ச் சமூக உயர்வழியில் தன் கவிதைக்கும் பதிவினைத் தேடி நிற்கும் கதிரவன் இன்னும் கல்வெட்டுப் பதிவுகளைக் கட்டாயம் தருவார்.

Read More...

Achievements

+8 more
View All