இந்த புத்தகத்தை நான் இந்த நேரத்தில் வெளியிடாமல் இருந்தால் என் வயோதிப காலத்தில் கண்டிப்பாக இதை நினைத்து வருத்தப்படுவேன் என்பது மட்டும் அதிக நிச்சயம். ஏன் என்றால் இந்த வயதில் தான் எல்லோரும் ஒருவிதமான மந்திர சுழற் சக்கரத்திற்குள் சென்று வருகிறோம்.அதில் நானும் விதிவிலக்கில்லை. ஒரு விதமான வயது, தோழமை, ஈர்ப்பு, புரிதல், நேசம், ஏமாற்றம், உணர்வு, உறவு, பிரிவினை, பிதற்றல் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். இவை அனைத்தையும் வெவ்வேறு சமயங்களில் உணர்ந்து உள்வாங்கி கவிதை நடையில் பிரதிபலித்திறுக்கிறது.