மேற்குத் தொடர்ச்சி மலைவாழ் மரமொருத்தி மேலிருக்கும் கதிரவனைக் காதலிக்கிறாள். அவள் வாழும் காட்டில் மனிதர்கள் ஒரு இரயில் பாதை அமைக்க உள்ளனர். தான் விரைவில் இறக்கவிருப்பதை அறிந்த அவள், அங்கு நடப்பவை அனைத்தையும் ஒருநாள் தனது காதலனிடம் சொல்ல முடிவெடுக்கிறாள். அந்நாளில் இவ்விருவரும், இரவில் வரும் நிலவும் என்னவெல்லாம் பேசுகின்றனர் என்பதுதான் கதை.
மேற்குத் தொடர்ச்சி மலையில் காடுகள் அழிவது நிறுத்தப்பட வேண்டும் என்ற ஒரு சீரிய நோக்கத்தோடு எழுதப்பட்ட புத்தகம் இது. மனிதருக்காகச் சட்டங்கள் இருப்பதைப் போல் இம்மலைக்காகவும் சட்டங்கள் வேண்டும் என்று கோருகிறது.