தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு எழுதும் ஆசிரியர்களுக்காக “குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும்” என்ற இந்நூல் படைக்கப்பட்டுள்ளது. இந்நூலில் ஐந்து பாடப்பகுதிகள் உள்ளன. ஒவ்வொரு பாடத்திற்கும் உள்ளே ஏராளமான தலைப்புகளில் பாடக்கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன. உளவியல் அறிஞர்கள், மற்றும் அவர்கள் செய்த சோதனைகளின் புகைப்படங்களை ஆசிரியர்கள் பார்க்கும் பொழுது உளவியல் கருத்துக்கள் மனதில் நிலைத்து நிற்கும் படியாகவும், பொருத்தமான படங்களுடன் உளவியல் பாடக்கருத்துக்களை ஆசிரியர்கள் எளிதில் புரிந்து கற்றுக் கொள்ளும் வகையில் சீரிய நடையில் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
“குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் என்னும் இந்நூலைப் படைத்ததன் முதன்மையான நோக்கமே தனியார் கல்வி நிலையங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் அரசு பணிக்கு செல்ல வேண்டும் என்பதே.