தம்மபதம் (Dhammapadam) என்பது பெளத்த மதப் புனித இலக்கியங்களுள் ஒன்றாகும். கௌதம புத்தர் அருளிய அறவுரைகளும் முதலானவை பெளத்தத்தின் திரிபிடகங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அவைகள் சுத்தபிடகம், விநயபிடகம், அபிதம்மபிடகம் என்பவை ஆகும். இவற்றுள் சுத்த பிடகத்திலுள்ள ஐந்து பகுதிகளில், குத்தக நிகாயம் என்ற பகுதியில் தம்மபதம் என்ற இந்நூல் அமைந்துள்ளது. பாளி மொழியில் அமைந்த தம்மபதம் 26 அத்தியாயங்களும் 423 சூத்திரங்களும் கொண்டது. புத்த பெருமான் அவ்வப்போது கூறிய வாக்கியங்களாக அமைகின்றது. இதனால், பெளத்த சமயத்தவரின் பாராயண நூலாகவும், பிரமாண நூலாகவும் அமைகின்றது. தம்மபதம் என்பது அறவழி, அறநெறி, அறக்கொள்கை, அறக்கோட்பாடு எனப் பல பொருள்களில் வழங்கப்பெறுகின்றது.
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners