"ஒரு புல்லாங்குழலின் இசையில் இறந்தும் உயிர் வாழ்கிறது பல மூங்கில் காடுகள்"
அது போல தான் மரித்த ஒவ்வொரு காதலும் கவிதைகளின் ஊடாக உயிர் வாழ்கிறது,வாழும். ஒரு வகையில் எந்த ஒரு காதலும் மரித்து போவதில்லை என்ற கூற்று இருந்தாலும், உணர்வுகளின் தொடுதல் இல்லாது என்னென்று வாழும். அப்படியான காதல் வரிசையில் தான் இந்த புத்தகத்தின் வரிகளும். வரிகளில் வலிகளின் வாசம் வீசும்,
ஒவ்வொரு கவிதை முடிவும் அழகாய் என் காதலைப் பேசும்.
சில கவிதைகள் தென்றலாய் மனம் வருடும், கோடை மழை போல இதம் தரும். பல கவிதைகள் காற்று இல்லாத இடம் வெற்றிடம் போல மூச்சிரைக்க செய்யும், உச்சி வெயிலின் உக்கிரமாய் சுடும். ஆனால் எல்லா கவிதைகளின் முடிவிலும் ஒரு கண்ணீர் துளியின் ஈரம் படிந்திருக்கும். அப்படியான ஒரு புத்தகம் தான் "என் தங்கமே!".
ஆமாம் மெல்ல தான் சாகிறது ஒரு நேசம், இருப்பினும் உங்கள் வாசிப்பில் உயிர்பெறட்டுமே.