ஜெர்மன் தத்துவத் துறையில் நிலவியக் கருத்துமுதல்வாத தத்துவங்களுக்கு இடையே இயங்கவியல் மற்றும் பொருள்முதல்வாதக் கூறுகள் எப்படி உருப்பெற்று வளர்ந்தன என்பது பற்றித் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது. ஹெகலும், ஃபாயர்பாக்கும் முறையே இயங்கியலுக்கும், பொருள்முதல்வாதத்திற்கும் மாபெரும் பங்களிப்பைச் செய்திருந்தனர். ஹெகலின் இயங்கியல் கருத்துமுதல்வாதத்திலும், ஃபாயர்பாக்கின் பொருள்முதல்வாதம் இயக்கமறுப்பியலிலும் சிக்குண்டு கிடந்ததை மார்க்சும், எங்கல்சும் எப்படி விடுவித்து ஒரு முழுமையான அறிவியல் பூர்வமான இயங்கவியல் பொருள்முதல்வாத தத்துவத்தை உருவாக்கினார்கள் என்பது தெளிவாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.
உலகை மாற்றுவதற்கு முன்நிபந்தனை இவ்வுலகைச் சரியாகப் புரிந்துக் கொள்வது. இன்றைய நிலையில், இவ்வுலகியல் உண்மைக்கு நெருக்கமாக சென்று, இயங்கியல் ரீதியாக அறிந்து கொள்வது நம்முன்னுள்ள மிக முக்கிய கடமையாகும். இதற்கு நம்மை ஆக்கிரமித்து இருக்கும் சிந்தனை முறைமைகளையும், அணுகுமுறைகளையும் சுயவிமர்சனத்தின் மூலம் பரிசோதித்துக் கொள்வதற்கும், மார்க்சிய இயங்கியல் அடிப்படையில் மீண்டும் கூர்மைப்படுத்திக் கொள்வதற்கும் இந்நூல் உதவிகரமாக இருக்கும்.
ஹெகலை மீண்டும் ஏன் படிக்கவேண்டும் என்றால் இன்றைய மிகவும் சிக்கல் வாய்ந்த யதார்த்த நிலைமையை இயங்கியல் ரீதியாகப் புரிந்துக் கொள்வதற்குதான். சுருக்கமாகச் சொன்னால், மார்க்சியத்தை அதன் வரலாற்றுப் பின்புலத்திலிருந்து அறிந்து கொள்ளவேண்டும் என்ற அவாவின் காரணமாக உருவானதுதான் இச்சிறுநூல்.
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners